தீபாவளி (லி) கவிதைகள்

1.

புதுசினிமா
புத்தாடை
பட்டாசு இனிப்பு
இருக்கும்
பணமிருந்தால்
செழிப்பான தீபாவளி

2.

முள்வேலிக்குள்
முக்கி தவிக்கும்
சொந்தங்களின் குரல்

உண்ண ,உடுக்க
வரிசையில் நிற்கும்
கூட்டம்

நிர்வாணமாக்கி
கையிரண்டை கட்டி
பின்தலையில்
துப்பாக்கியில்
சுட்டு தள்ளும் படம்
திரும்ப திரும்ப வர

என்னடா தீபாவளி
வேட்டை கொண்டுபோய்
முதல்வர்
நாற்காலிக்கு வை

3.சின்ன வயசு தீபாவளி

புது கால்சட்டையில்
சந்தனம் தடவி
பைகெட்டுக்குள்
பலகாரத்துடன்
ஓடி ஓடு வெடித்த
சீனி வெடிகள்

அணையாத கங்குடன்
தெருவில் இன்னும்
இருக்கிறது !

குருவி வெடிகளும்
லட்சுமி வெடிகளும்
சத்தம் குறைந்த பின்
ஆட்டோ பாம்களையும்
வெடித்து
அனுகுண்டுகளையும்
போட்டு-அடுத்த வீட்டு
தாத்தா விரட்டி வர
இன்னும் ஓடி கொண்டே
இருக்கிறோம்.

தீபாவளி அன்று
மட்டும் நாள் நகரவே
கூடாதென கவலை படும்
நண்பனுக்கு இல்லை
சாயங்காலம் வேட்டு
வெடிக்கலாம் என
சொன்னதை நம்பி
அவன் இன்னும்
காத்து கொண்டு
கிடக்கிறான்

கடந்து போன தீபாவளியை
பற்றி பேசி பேசி ஓய்கிறேன்

பேசாம படுடா நாளைக்கு
நிறைய நிகழ்ச்சி
பார்கனும் என்கிறாள்
அம்மா!

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post