கிரிக்கெட்டில் அரசியல்

அஇப்பொழுதெல்லாம் எல்லாவற்றிலும் அரசியலும் லாவணியும் சேர்ந்து விட்டது அப்படி என்னென்ன விசயத்தில் அரசியல் பணம் சூதாட்டம் நிலவுதோ அல்லது வலதுசாரிகளில் ஊடுருவல் நிலவுதோ அதையெல்லாம் குறை சொல்ல ஆரம்பித்தால் நாம் சரிபாதி விசயங்களை உலகத்தில் தவிர்க்க வேண்டியதிருக்கும்

அம்மாதிரிதான் கிரிக்கெட்டில் அரசியல் என்கிற வாதமும் சினிமாவில் அரசியல் இருக்கும் மதமே அரசியல்தான் அது போதைதரும் அபினிதான் , அம்மாதிரி இலக்கியத்தில் அற்பவாதமும் அழகியலை மட்டும் முன்னிருத்துவதும் இருக்கிறது

பெரும்பாலும் மார்க்சியவாதிகள் இலக்கியம், கிரிக்கெட் சினிமா பக்கம் போவதோ புதிய முயற்சிகளை அதில் செய்வதோ இல்லை .

கிரிக்கெட் பன்னாட்டு முதலாளிகளின் கையில் போய்விட்டது எனவே கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்கிறார்கள் .நாடே பன்னாட்டு முதலாளிகளிடம் இருக்கிறது நாட்டு மக்களை புறக்கணிப்போம்னு சொல்லாதவரைக்கும் சேமம்.

எனது கருத்து இந்த கருவிகள் , விளையாட்டுக்களின் பின்னால் இருக்கும் கருத்து யாருக்கானது யாருக்காக செயல்படுகிறது யாரால் செய்யப்படுகிறது என்பதில் ஆர்வம் மேலிட பேசும் நாம் அந்த கருவியே அதனளவில் தவறானதாக அற்பமானதாக உதவாததாக சொல்லி விடுகிறோம் அதன் மேலான விமர்சனங்களில் நாம் உணர்த்துவது இதைத்தான் .

ஒரு பக்கம் விமர்சிப்பது மட்டுமே வேலை என மார்க்சிய
வாதிகள் இருக்கையில் இந்த கருவிகளை கொண்டு படைப்பதே வேளையாக செய்பவனை கொஞ்சமேனும் நிறுத்த நம்மால் முடியவில்லை .

இலக்கியத்தில் மார்க்சிய எதார்த்தவாதத்தில் சொல்ல முடியாத விசயத்தை ஒரு நவீன கதையில் கதை சொல்லும் உத்தியில் சொல்லிவிடலாம் .

ஒரு கதையில் அந்த கதை நாயகன் ஒரு தலித் அவன் செல்லும் விபசாரி ஒரு பிராமண பெண் இந்த நாயகனின் தாத்தா உட்பட இவனும் பரம்பரையாக அடிமை தொழில் செய்துவந்தது இந்த பென்ணின் வீட்டில் ஒரு காலத்துக்கு பிறகு இவன் படித்து பட்டினத்துக்கு வர அந்த பிராமண குடும்பம் எதோ காரணத்தால் தெருவுக்கு வர அவள் விபச்சாரி இப்போது அந்த பெண் இவன் கையில் இவன் சிகரெட்டால் சுடுகிறான் அடிக்கிறான் நீ பாப்பாத்தி என்கிறான் அவள் திரும்ப திரும்ப நான் வேசி என்கிறாள் அந்த பதில் அவனை உசுப்பேத்த இன்னும் வன்முறை செய்கிறான் மேலும் வன்முறையின் மூலம் பழிதீர்த்தலின் மூலம் வரலாற்றில் ஏற்பட்டு விட்ட ஒரு பிழையை சரி செய்ய முடியுமா என்பதை கேட்க இம்மாதிரி ஒரு கதை நிகழ்வை கொண்டு வந்து மறைமுகமாக கதையை நகர்த்தி சென்று இருப்பார் கதாசிரியர்

சினிமா எந்தளவுக்கு வீச்சான ஊடகம் என்பதை நாம் விளக்கவே முடியாது ஆனால் உலகளவிலும் இந்தியாவிலும் சினிமாவை தமது கருவியாக மார்க்சிஸ்டுகள் ஆக்கிரமிச்சுக்கவில்லை .

வர்க்க போராட்டம் என்பது கலை இலக்கிய உலகில் நடந்துதானே தீரனும் விமர்சனம் மட்டுமே வர்க்க போராட்டம் இல்லை ஒரு விசயத்தை இப்படித்தான் பார்க்கனும் என்பதை விமர்சனத்தில் சொல்வதை விட சரியான பார்வையை ஏற்படுத்த இயங்கனும்

தொடர்ச்சியாக அனைத்து கருவிகளையும் கைகொண்டு போராடனும் உடனே கம்யுனிஸ்டுகள் கிரிக்கெட் விளையாடனும் என்று அர்த்தமில்லை அதை ஒரு சோம்பேறி விளையாட்டுன்னும் அதில் ஒன்றுமில்லைன்னும் ஒருத்தர் எழுதி இருந்தார் அவரது அறியாமை என்னை நகைக்க வைத்தது .

எல்லாம் இயங்கி கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கிறது என்பதை பேச்சளவில் சொல்லும் நாம் ஒரு குறிப்பிட்ட வடிவங்களை கருவிகளை மாற்றங்களை இயக்கவியல் ரீதியில் பார்க்காமல் அதை புறந்தள்ளுவதை எப்படி சரி எனலாம் .

கிரிக்கெட்டில் அரசியல் இருக்கு சூதாட்டம் இருக்கு அதை ஒரு நாட்டின் மேலான வெறுப்பு உபயோகபடுத்த கூடாது விளையாட்டின் சுவைக்காகவே விளையாட்டை விளையாடனும் என்பதெல்லாம் சரிதான் .

அதற்கு கிரிக்கெட் எந்த வகையிலும் காரணமில்லை என்பதை மீண்டும் அறுதியிட்டு கூறுகிறேன் நமது நாடு பாகிஸ்தானுடன் தோற்றால் நாடு போரில் தோற்றதுபோல தோற்றத்தை யார் ஏற்படுத்துகிறார்கள் அவர்களெல்லாம் ஆதிக்க சக்திகள் எனவே அவர்களின் இந்த கருத்தை வெல்ல நாம் இந்தியா தோற்கவேண்டும் என எழுதுவோம் என்பது மேலொட்டமாக சரியானதாக தெரிகிறது

இன்னொரு வகையில் அது தவறு தேசபக்தி (இந்தியா என்கிற தவறான குறுகிய தேசபக்தியாக இருந்தாலும்) அதை தவறென சொன்னால் அது தவறுதானே கிரிக்கெட்டில் தேசபக்தியை வெளிக்காட்டாதே என்பதை நமது தேசபக்தியை கீழே போட்டு மிதித்து காட்டுவது கையாலாகாத தனம்தானே

வர்க்க உணர்வு எப்படியோ அப்படித்தான் தேசபக்தியும் அந்த தேசபக்தியின் பெயரால் ஆளும் பார்பனிய கும்பல் செய்யும் அராஜகங்களை நாம் பொறுத்து கொள்ளவில்லை ஒன்றும் செய்ய முடியாததால் பொறுத்து கொள்கிறோம்

கிரிக்கெட்டோ , தேசபக்தியோ , சினிமாவோ, இலக்கியமோ மிக தவறான விசயங்கள் என்பதை விடுங்கள் சிந்தனை செய்யுங்கள் தவறு இருந்தால் சொல்லுங்கள்

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post