அகிரிக்கெட் விளையாடி இருக்கேன் பெரும்பாலும் நம்மல பேட்டிங் மேனாகத்தான் இறக்குவாங்க ஆனால் இரண்டு சிக்ஸ் அல்லது போர் அடித்து விட்டு அடுத்த பந்தில் நடு ஸ்டெம்பு கழண்டு திரும்பி வருவது எனது வழக்கம் .
தொடர்ச்சியாக கிரிக்கெட்டை ஞாபகம் வைத்து பேசும் எனது நண்பனின் மேல் அப்போது ஒரு வியப்புடனே பார்ப்பேன் ஒரு காலை உயர்த்தி தலைக்கு மேலே அடிப்பதற்கு கூக் சாட்டு என்பான் .
தெனாப்பிரிக்கா அப்போது செம பார்மில இருந்த காலம்
ரிசர்ஸ் தனது வலுவான கரத்தில் ஒரு போர் அடிக்கும் போது பிச்சிக்கும் . கவாஸ்கரின் நுணுக்கமான சாட்டுகளை பற்றி விலாவாரியாக பேசும் நண்பனை வாயை பார்க்க பிடிக்காமல் பேசிட்டே இருக்காதடா வா விளையாடலாம் என சொல்லி அந்த டென்னீஸ் பால் கிரிக்கெட்டை துவக்குவோம் .
அதற்கு முன்னால் தலைமுறை கிட்டிபுல்தான் நெம்ப பிரமாதமா விளையாடுவானுக அனேகமா 86 க்கு பிறகு அந்த விளையாட்டின் இடத்தை இந்த கிரிக்கெட் பிடிச்சு கிட்டு .
பெரும்பாலும் கிரிக்கெட்டின் நுணுக்கங்களை சுருக்கியோ நீட்டியோ அமைத்து ஓவர்களை வேண்டிய அளவுக்கு சுருக்கி விளையாடுவோம் .
இதில நல்லா விளையாடுற பையன்கள் என்றால் ஒரு சிலர்தான் எங்க தெருவில் சாம்முன்னு ஒருத்தனும் இன்னொருத்தனும் மட்டும்தான் நாங்கெல்லாம் டீமுக்கு பதினோரு பேரு வேண்டுமென்பதால் இருந்தோம் உண்மைய சொல்லப்போனால் .
நாளைடைவில் இந்த விளையாட்டில் இருந்து கழண்டுகிட்டேன். காரணம் அது சோம்பேறு விளையாட்டு துரைமார் விளையாட்டுனெல்லாம் இல்லை அதன் நுணுக்கம்தெரிந்துகொள்ளமுடியலை அல்லது சொல்லிதர ஆள் இல்லை என்பதால்தான் மேலும் கிரிக்கெட் வீரர்கள் பெயர் அவனை பற்றிய வரலாறு என்றைக்கெல்லாம் எந்த டீமெல்லாம் விளையாடுது அதனோட பலம் என்ன இந்த விபரமெல்லாம் அப்டேட் செய்துட்டே இருக்கனும்.
நாமதான் தத்துவம் கித்துவம் படிக்க ஆரம்பிச்சாச்சா கிரிக்கெட்டின் டேடாபேஸ் அப்டேட் ஆகாம தொங்கிருச்சு சீ சீ இந்த பழம் புளிக்கும்னு எல்லாம் சொல்ல மாட்டேன் என்னால அதை அப்டேட் செய்துக்க முடியலை வேற வேலை இருந்தது .
சரி கிரிக்கெட் ஒரு சோம்பேறு விளையாட்டான்னு பார்ப்போம் -
இல்லை என்பதே எனது பதில் அப்படி சொல்லமுடியாது மைதானத்தின் கடைகோடியில் நின்னுட்டு இருப்பவனுக்கு பந்து வரும்னு சொல்ல முடியாது வராதுன்னும் சொல்ல முடியாது வரும்போது பிடிக்கனும் அது கேட்சாவும் இருக்கலாம் பீல்டிங்கும் இருக்கும் . இதை எப்படி சோம்பேறி செய்ய முடியும் .
சரி பேட்டை கைல கொடுத்தால் வடிவேலு மட்டுதான் தமாசுக்கு தட்டி தட்டி தண்ணி வரவைக்க முடியும் நெச கிரிக்கெட்டில் அப்படி செய்தால் பொட்டில் தண்ணீர்(இரத்தம் ) வந்திடும் பறந்து வரும் பந்து முன்னூறு கிராம் வெயிட் இருக்கும் சோம்பேறியா இருந்தால் மண்டையில பட்டிடும் .
திடீரென முடிவெடுக்கனும் உடனே கைகால் கண் எல்லாம் விழிச்சுட்டு அந்த பந்தை விளையாடனும்
சும்மா உக்கார்ந்து பார்கிறவனுக்கும் நுணுக்கம் தெரியனும் கூட்டத்தோட சேர்ந்து இந்த பந்தை அடிச்சிருக்கலாம்னும் இல்லை அடிக்க முடியாதுன்னும் நொட்டை சொல்லி தப்பிக்க முடியாது
ஒரு போரை போலத்தான் கிரிக்கெட்டை அனுகமுடியும் அல்லது போரில் பிரதின்னு சொல்லலாம் .
இந்த விளையாட்டின் உட்சத்து விளையாடுபவனுக்கும் பார்ப்பவனுக்கும் பரவசம் தருவதுதான் .
நான் கூட சொல்வதுண்டு முதலாளித்துவ கைக்கருவி
ஒரு விசயத்தை நாம் பார்க்கனும் முதலாளி ஒரு குதிரையை நாடுகிறான் என்றால் அது செயிக்கிற குதிரையா இருக்கனும் முதலாளி நாடிட்டானேன்னு செயிக்கிற குதிரையை கண்ணில்லாத நொண்டிக்குதிரைன்னு சொல்லகூடாது ;)
முதலாளி என்னதான் தூபம் போட்டாலும் கிரிக்கெட்டோ
கபடியோ வேறு எந்த விளையாட்டோ அதன் உள்சத்து மற்றும் கொடுக்கும் மகிழ்ச்சி இன்றி ஜீவித்து இருக்கமுடியாது இதை இன்னொரு வகையில் சொன்னால் அதன் முரண்பாடே அதன் நுணுக்கங்களை அறியாதவன் அதுக்குள்ள இருக்க முடியாது .
பன்னாட்டு கம்பெனி முதலாளிகள் அதை கைப்பற்றி லாபம் கொழிக்கும் ஒரு விளையாட்டா மாத்திட்டான் என்பதெல்லாம் உண்மைதான் . ஆனால் வாடிபட்டிகிட்ட இருக்கிற குக்கிராமத்தில வந்து பன்னாட்டு முதலாளி கிரிகெட்டை விளையாடுன்னு சொல்லமுடியாது அந்த விளையாட்டுக்கா ஏதேனும் இண்டெஸ்டு இல்லைன்னா ஒன்னும் நடக்காது .
அடுத்து தேசபக்தியை கிரிக்கெட்டில் பார்த்து வெளிப்படுத்துகிறார்களா அதுவும் பாகிஸ்தான் தோற்கனும்னு வேண்டுகிறார்களா என்றால் இல்லை பாகிஸ்தானும் இந்தியாவும் தமக்குள் முரண்பாடுகளை வளர்த்துதான் வளர்ந்துள்ளன அதன் மிச்ச சொச்சங்கள் கிரிக்கெட்டிலும் வெளிப்படுது
அடுத்து பாகிஸ்தானும் அதன் முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் ஒன்றும் இந்த விளையாட்டில் பணம் சம்பாதிக்க விளையாடாமல் மக்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு கிரிக்கெட் நடத்தல அவனும் இதே மொள்ள மாறித்தனத்தைதான் செய்கிறான் . இதையெல்லாம் மீறி கிரிக்கெட் மக்களிடம் இருப்பதற்கு அதனளவில் இருக்கும் ஈர்ப்பு தன்மையே காரணம்

Tags
அரசியல்