மரணமே நான் தயார்(போட்டி கவிதை 2)

முடிக்கப்பட்ட
கவிதையுடன்
முடிவில்லா
கனவினையும்-அவளால்
தரப்பட்ட
புன்னகையும்
தரப்படாத
சம்மதமும் சேர்த்து
புதைப்பதெனில்
சாகத்தயார்!

மெளனங்களின்
அணி வகுப்பில்
மறைந்துள்ள
அவள் நினைவும்
சினேகத்தின்
புன்சிரிப்பும்-சின்ன
குழந்தைகளின்
கையசைப்பும்
சேர்த்துபுதைப்பதெனில்
மீண்டும் நான்
சாகத்தயார் !

-தியாகு

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post