நண்பனின் போர்களம்!

சில நேரங்களில் நீ பேசுகிறாய்
பல விசயங்களை முரண்பாடாக
போராடுகிறாய் அதே வேகத்தில்
போராடத்தின் திசைவழி தெரியாமல்

அறிவுள்ளவன் என நிரூபிக்க நீ
முயலும் வேலைகளில் உன்
முட்டால்தனம் அதிகமாகிறதெனும்
சந்தேகம் எனக்கு !

என் அன்பு உனக்கு எப்போதும்
உனது திமிருக்கல்ல நெஞ்சுரத்திற்கு
நான் எப்போதும் தலைவணங்குவேன்!
உன் தலை ஏனோ அற்ப விசயங்களில்
பக்கமே நீட்டி கொண்டு இருக்கிறது!

உனது சுதந்திரத்தை நான் கேக்கவில்லை
அப்படி ஒன்று உன்னிடமே இல்லையே
உனது ஆதரவையும் நான் கோரவில்
லைநீயோ ஆதரவற்றவன் !

ஒரு மலர் மலர்வதை பற்றி பேசுகிறாய்
மலர்கள் மலர்வதை பற்றி பேசாது
கருகும்போதும் கண்ணீர்விடாது
அதுதான் மலரென்பேன்
மறுத்தலிப்பாய் சுதந்திரமாம் .

மேலும் நாம் பேசலாம்
பேசாத பகுதிகளின் நீட்டத்தை
பேச பேச குறையாத முரண்பாட்டுடன்
தேநீர் கடைகளில்.

-தியாகு

(இது பின் முன் நவீனத்துவமாம் சொன்னாங்க) :)

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post