அன்பார்ந்த பொதுஜனமே (நடுத்தர வர்க்கமே)



திருப்பூரில் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்யும் டையிங்க் பட்டரை தொழிலாளிக்கு கிடைக்கும் கூலி 140 ரூபாய்(ஒரு நாளைக்கு அதிகபட்சம் 8 மனி நேரம் வேலை ஓவர் டைமோடு சேர்த்து 9 மணி நேரத்துக்கு மிக கூடாது ஒரு வாரத்துக்கு 48 மணி நேரத்தை தாண்ட கூடாதுன்னு தமிழ் நாடு குறும ஊதிய சட்டம் 1948 விளக்கமா சொல்கிறது.) (கூலி : ஒரு தொழிலாளிக்கு சராசரியாக மாதம் 2 ஆயிரத்து 180 என சொல்கிறது அந்த குறைந்த பட்ச ஊதியம் மட்டுமே வழங்குது நிறுவனங்கள்.)
கூலியோ குறைந்த பட்சம் வேலையோ அதிக பட்சம்
மதுரையில் ஒரு அப்பள கம்பெனி தொழிலாளி பனிரெண்டு மணிநேரம் வேலை செய்தால் மட்டுமே 100 ரூபாய் சம்பாரிக்க முடியும் .

சிவகாசியில் தீப்பட்டி தொழிலில் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு 70 ருபாய்க்கு மேல் கிடையாது என அதிகபட்சம் தொழிலாளிகளை சுரண்டும் முதலாளிகள் மேல் எந்த கோபமும் கொள்ளாத நடுத்தர வர்க்கம் ஆகிய நீங்கள் . இந்தியாவின் 2020 உலக வல்லராகும் கனவை அப்துல் கலாம் உதவியால் கண்டுவரும் நீங்கள் ஆட்டோகாரனின் அதிக கூலியை தட்டி கேட்க என்ன உரிமை உள்ளது .
தனக்கு கீழ் உள்ள எந்த ஒரு நபரையும் பற்றிய சிறிய அக்கறைகூட காட்டாத இந்த நடுத்தர வர்க்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கூலி கேட்பதாகவும் அய்யோ அம்மா என கூப்பாடு போடும் நீங்கள் சமூகத்தின் எதன்மீதும் ஒரு சிறிதும் அக்கறை கொள்ளாமல் இருக்கும் ஒரு அற்ப வாதிகளான நீங்கள்
உங்கள் மேல் மட்டும் அவர்களின் அக்கறையை எப்படி எதிர்பார்க்கலாம் ?
அவர்களின் நிலையற்ற வருமானத்தில் மீது உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை
அவர்களில் குடும்பம் ,கல்வி , அவர்களின் மாத வருமானம் இதன் மீதெல்லாம் உங்களுக்கு துளியும் கவலை இல்லை
பிறகு அவர்கள் உங்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும் அதிக கூலி வசூலிக்க கூடாது என சொல்ல என்ன தார்மீக உணர்வு உள்ளது?
குறிப்பு : ஆட்டோ காரர்கள் கொள்ளை அடிப்பதாக சொல்லும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க எழுதியது

66 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post