சீனாவிற்கு எதிரான சக்தியாக இந்தியாவை அமெரிக்கா பார்க்கிறது

தோழர் புலிகேசியின் மடல்:

இந்த பதில்கள் சோ அவர்களின் பேட்டியிலிருந்து எடுக்கப்பட்டது. அதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள்//அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் தானாகவே செல்லாததாகிவிடாது. முதலில் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு-வார்த்தை மேற்கொள்ளப்படும். அன்றைய சந்தை நிலவரப்படி நஷ்டஈடு தரப்பட வேண்டும். பல கட்டங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் ரத்தாவது பற்றி முடிவாகும். இதற்கென்று ஏகப்பட்ட ஷரத்துக்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியா உருவெடுப்பதில் அமெரிக்காவுக்கு லாபங்கள் அதிகம். அமெரிக்கா நம்முடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற நாடுகளும் நம்முடன் அணு ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படும். தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கும் இதில் ஆதாயங்கள்தான் அதிகம் என்பது என் கருத்து! அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், நமது அருணாசலப்பிரேதசத்துக்கு சீனா உரிமை கோருவதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? இந்த அண்டை நாடு ஏற்கெனவே நமது பிராந்தியங்கள் சிலவற்றை கையகப்படுத்திக்கொண்டு இன்னும் ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இது நமது நாட்டின் இறையாண் மையைப் பாதிக்காதா! கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு முழு சந்தர்ப்ப வாதம்!''//மேற்கண்ட சோவின் பார்வையில் எனக்கு சில சந்தேகங்கள். கற்றறிந்த பெரியோர் சரியான சமதானம் கூறவும்.1. ஆசிய கண்டத்தில் சீனாவுக்கு போட்டியாக இந்தியாவை அமெரிக்கா பார்க்கின்றது: இதில் சீனாவுக்கு போட்டி நாடு என்றால் எந்த வகையில்? தொழில் ரீதியாகவா? ராணுவ ரீதியாகவா? தொழில் ரீதியாக என்றால் ஆரோக்கியமான போட்டி. நம் நாட்டிற்கு ஏகப்பட்ட லாபங்கள். ராணுவ ரீதியாகவெனில் நம் நாட்டிற்கு ஏகப்பட்ட கஷ்டங்கள். அமெரிக்காவின் அடியாளாக, சீனத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு நம் இந்திய சிப்பாய்களை பலியாக்க அமெரிக்கா விரும்ப அதற்கு பிரதமர் அவகளும் ஒத்துப்போவது ஒட்டுமொத்த ராணுவத்தையும் வலிந்து போருக்கு பயன்படுத்தவே என்பதல்லவா அதன் உள்ளர்த்தம். "சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக" இந்த வார்த்தைகள் இந்தியா சீனாவிடையே சமாதான பேச்சுக்கள் மூலம் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஒரு தீர்வாக அமையாமல் எல்லாவற்றிற்கும் ராணுவம் மூலம் தீர்வு கண்டுகொள்ளலாம். நீ என்னுடன் இரு நான் உன் ராணுவத்திற்கு எல்லா ஆயுத உதவியும் செய்கிறேன். சீனாவுடன் சண்டையிட்டுக்கொண்டே இரு. எல்லா இழந்த பகுதிகளையும் மீட்டுக்கொள்ளலாம் என்று சண்டையை மூட்டிவிடுவதாக அல்லவா இருக்கின்றது. ஏற்கெனவே இதே வாக்குறுதிகளை கொடுத்து பாகிஸ்தானை காஷ்மீர் விவகாரம் மூலம் தூண்டி இன்று மதவாத தீவிரவாதத்தை இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேசம் முழுமைக்கும் தினித்தது. அதற்க் இன்றுவரை மும்பை முதல் ஹைதராபாத் வரை பலியாகிக்கொண்டுதானே இருக்கின்றது. இதே போன்ற மதவாதத்தை ஹிந்து பௌத்தம் என்கிற பிளவுக்கிடையில் தினிக்க அமெரிக்கா முயல்கிறதா? இது எதிர்காலத்தில் நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை, இந்தியா சீனா இடையே ராணுவ மோதல்கள் போட்டி ராணுவ மனப்பான்மையால் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதத்தை பிரதமர் அவர்கள் தருவாரா? அமெரிக்கா சீனாவுக்கு எதிரான சக்தியாக இந்தியாவை பார்கிறது என்பதற்காகவே நம் இந்திய அரசும் எதிரான சக்தியாகவே பார்க்க வேண்டுமா? நமக்கென்று சுய அயலுறவுக்கொள்கையே இல்லையா? நட்புநாடாக்கி நம் வியாபாரங்களை, கலாசார உறவுகளை சீனாவுடன் மேம்படுத்த இந்தியாவால் முடியாதா? ராணுவ நடவைக்கையாலன்றி தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இழந்த பகுதிகளை மீட்க முடியாதா? விடுதலைப்புலிகளுக்கு பேச்சு நடத்தி உங்கள் பகையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறும் அமெரிக்கா இந்தியாவுக்கு, சீனாவுக்கு அந்த அறிவுரையை கூறாமல் எதிரான சக்தி நாடாக கருதும் மர்மம் என்ன? பாகிஸ்தானுடன் நல்லுறவு சாத்தியமாகும்போது சீனாவுடன் முடியாதா? அந்த கோணத்தில் இந்திய தலைமை ஏன் சிந்திக்க மறுக்கிறது. இந்தியாவை இன்னொரு இஸ்ரேலாக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது. 150 கோடி மக்களுக்கும் 107 கோடி மக்களுக்கும் இடையில் பகைமை தீயை அமெரிக்கா முயல்கிறது. நாம் ஏன் அதற்கு இறையாக வேண்டும்? அமெரிக்க ஆயுத ஆத்ரவு பாகிஸ்தானால் இந்தியாவில் நாம் காஷ்மீரில் இழந்த பகுதிகளால் ஏற்பட்ட இறையாண்மை பாதிப்பு, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஆதரவு தீவிரவாதிகள் பாராளுமன்றத்தை தாக்கியபோதும் தொடர்ந்து நட்புக்கரம் நீட்டி பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பேருந்துகளை இயக்கிக்கொண்டிருக்கும்போது ஏற்படாத இறையாண்மை பாதிப்பு சீனாவுடன் வியாபாரம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்தி தொடர்ந்த பேச்சு வார்த்தைகள் மூலம் இழந்த் பகுதிகளை மீட்க முயற்சியெடுக்கும்போது மட்டும் ஏற்படும் என்பது எந்த வகை சிந்தனையில் சேர்த்தி? இவையெல்லாம் தேசபக்தியற்ற அமைதியை அறவே விரும்பாத இந்த சின்னதன புத்தியுள்ள மனிதனின் சிந்தனையில் தோன்றிய கேள்விகள். கற்றறிந்த பெரியோர் யாரேனும் இந்த சந்தேகங்களை போக்கி அமைதியான உலகத்தை படைக்க உதவி செய்யுங்களேன்.

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post