வினவு - ஏன் திமுகவை ஆதரிக்கிறது

வினவு - ஏன் திமுகவை ஆதரிக்கிறது

//"சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை" என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க.

இந்த அறிக்கை அம்மாவைக் குத்தியதோ இல்லையோ, மார்க்சிஸ்டுகளை குறிபார்த்து அல்லையில் குத்திவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் எட்டுக்கும் பத்துக்கும் திமுக அதிமுகவிடம் காவடி எடுக்கும் சூழ்நிலையால் மனம் வெறுத்துப் போன கட்சித் தோழர்களில் சிலர் , "நாமும் வைகோ பண்ணின மாதிரி பண்ணிடலாம்" என்று சொல்லத் தொடங்கி விட்டால் தங்கள் நிலை என்ன என்பது தா.பா, மற்றும் ராமகிருஷ்ணனின் கவலையாக இருக்கக் கூடும்.//

போலி கம்யூனிஸ்டுகளை நோக்கி எறியப்படும் சரியான

அம்பான கேள்வி ஏண்டா உங்களுக்கு மான ரோசமில்லையா ?

ஜெயாவுடன் சம்பந்தம் செய்ய போறவன்கிட்ட கேட்கிற கேள்விமாதிரி இருக்கே அதாவது தேர்தல் கூட்டனி என்பது ஒரு லாபியிங்க் வேலை என்பதும் கருணாநிதியே காங்கிரஸ் கொடுத்த தொகுதிகளில் மானமின்றி தேர்தலில் நிற்கிறார் என்பதையும் 63 நாயன்மார்கள் கேட்ட இடத்தை ஒதுக்கவில்லை என்றால் அவர் குடும்பத்தில் சிலரும் ராசா இருக்கிற இடத்திற்கு போகவேண்டி இருக்கும் என்பதையும் தனது வலைதளத்தில் போட்டு ஆளும் கும்பலின் கோரமுகத்தை கிழிக்கலாம் உண்மை கம்யூனிஸ்டுன்னா ஆனால் இவங்க தங்களை உண்மை கம்யூனிஸ்டுன்னு சொல்லிகிறாங்கப்பா?

/ஏன் துப்பினார்கள், என்ன மாதிரி சூழ்நிலையில் காறித்துப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன், அவசரப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிக்கை விடுவதோ, உறவை முறித்துக் கொள்வதோ, மூன்றாவது அணி தொடங்குவதோ அறிவுக்கு உகந்ததல்ல என்பதை மார்க்சிஸ்டுகள் மற்றவர்களுக்கு அறிவுருத்தியிருப்பார்கள்.

இதெல்லாம் தெரியாமல், "மூன்றாவது அணி என்று ஒன்று தொடங்கினால், அதற்கு வைகோ தான் தலைவர்" என்று முன்கூட்டியே துண்டு போட்டு ரிசர்வ் செய்தார் நாஞ்சில் சம்பத். மூன்றாவது அணியின் தலைமைப் பதவிக்கு தா.பா வோ, ராமகிருஷ்ணனோ, கேப்டனோ போட்டிக்கு வரவில்லை. "வடக்கிருந்து சாவதுதான் முடிவு என்ற நிலைமை ஏற்பட்டு விட்டால், அதற்கு வைகோ தலைமை தாங்குவதே பொருத்தமாக இருக்கும்" என்று அவர்கள் கருதியிருக்கக்கூடும்.//

அடுத்து பாமர மக்கள் கூட இம்மாதிரி அராஜக ஜெ வின் முடிவில் மூன்றாவது அணி அமையுமான்னு எதிர்பார்பாங்க ஆனால் உண்மை கம்யூனிஸ்டுகள் அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க அப்படி ஒரு அணி அமையாது கருணாநிதிக்குத்தான் வெற்றி போய் சேரணும் என தலைவர் சொல்லி கொடுத்த மாதிரியே வேலை செய்கிறார்கள்

ஈழ பிரச்சனையில் இவர்கள் உதிர்த்த கண்ணீர் இன்னும்

வற்றவில்லை நேரடியாக கலைஞருக்கு ஓட்டு போடுங்கள் என கேட்க மாவோ தடுக்கிறார் எனவே மறைமுகமா

அவனுக்கு மானமில்லை இவனுக்கும் மானமில்லை மூன்றாவது அணி அமையாது என ஜோசியம் சொல்கிறார்கள் இதன் மூலம் இவர்கள் அடையும் பயன் யாமறியேன் பராபரமே இவர்கள் சொல்லும் தீர்வு அந்த மருதையனுக்குத்தான் வெளிச்சம்

தோழர் தியாகு ஒரு கட்டுரையில் எழுதுகிறார்

//சமூக மாற்றம், விடுதலை என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிற எந்த ஒர் இயக்கத்திற்கும் தேர்தல் என்பதே முதன்மை வழியாக இருக்க முடியாது. அனைத்துக்கும் அடிப்படை என்பதாகவும் இருக்க முடியாது. இதுதான் நம்மையும் பதவி அரசியல் கட்சிகளையும் வேறுபடுத்துகிற கோடு. அவர்களும் கூட போராடுகிறார்கள், மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடுகிறார்கள், மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள். ஆனால் அவர்களின் அந்தப் போராட்டங்கள் தேர்தலைக் குறியாக வைத்து அதற்கேற்ப நடத்தப்படுகின்றன.//

சமூகமாற்றத்திற்கான திறவுகோலோ அல்லது அதை அடையும் வழியோ தேர்தல் இல்லை என்பதை மார்க்சிஸ்டுகள் அறிவார்கள் ஆனால் தேர்தலில் பங்கேற்கிறார்கள் இரண்டுக்கும் வேறுபாடு இதுதான் மற்ற கட்சிகளை தேர்தலை குறிக்கோளாக கொண்டு தேர்தலில் நிற்கும் ஆனால் கம்யூனிஸ்டுகள் சமூகமாற்றத்தை குறிக்கோளாக கொண்டு தேர்தலில் நிற்கிறார்கள் இது தெரியுமா தெரியாதா வினவுக்கு தெரியும் ஆனால் பாவம் அவர்கள் கருணாநிதிக்கு சப்போர்ட் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்

தேர்தல் பங்கேற்பும் இல்லை புறக்கணிப்பு என்கிற பாதையில் செல்வதால் இவர்கள் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளை எல்லாம் மானமற்ற மடையர்கள் என்கிறார்கள்

சரின்னு வச்சுக்குவோம்

புறக்கணிப்பு செய்ய தருணம் வாய்த்து விட்டதா அதற்கான தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டார்களா அல்லது அந்த பாதையில் இருக்கிறார்களா என்றால் இல்லை

//போல்சுவிக்குகள் முதலில் டூமா என்னும் உருசிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். பிறகு அப்படிப் புறக்கணித்தது சரியில்லை என்று தன்னாய்வு செய்து கொள்கிறார்கள். மீண்டும் தேர்தல் நடக்கிற பொழுது அதிலே பங்கேற்கிறார்கள்.//

போல்சுவிக்குகளை போல தன்னாய்வு எப்ப செய்வாங்கன்னு வினவுக்கு தெரியாது அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள்

இந்த தேர்தலை ஏன் புறக்கணிக்கிறோம் இந்த தேர்தலின் மூலம் என்ன சொல்கிறோம் என்ன கற்று கொண்டும் ஒரு வெங்காயமும் கிடையாது வெறும் புறக்கணிப்பு

ஆகா தப்பு செய்திட்டேனே புறக்கணிப்பு மட்டும் நடத்தவில்லை ஒரு நுட்பமான வேலை செய்கிறார்கள் அதான் திமுக ஆதரவு



//“இன்று 21 தொகுதிக்கு குறைவான எதையும் ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கும் வைகோவிடம், தேர்தல் புறக்கணிப்பை கைவிடுமாறும் அதிமுக அணியில் பங்கேற்குமாறும் மார்க்சிஸ்டுகள் கூறுகிறார்களே, இதன் பொருளை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? “12 தொகுதியை வாங்கிக் கொண்டு பொழைக்கிற வழியப் பாருய்யா” என்பதுதான் இதன் பொருள்.

“அம்மாவோடு கூட்டணி வைத்து பத்து இடத்தில் நின்று 2 இடத்திலாவது ஜெயிப்பதா, அல்லது மூன்றாவது அணி அமைத்து முப்பது இடத்தில் நின்று முப்பது இடத்திலும் டெபாசிட் இழப்பதா? எது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது?” என்பதுதான் அன்று வலது இடதுகளின் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதமாக இருந்திருக்கும்.
///

வைக்கோவுக்கு இருபத்தி ஒன்றுதான் தடைக்கல் போல
இருபத்தி ஒன்றுக்கு குறைவானது மானம் போச்சி என்கிறார் கருணாநிதியுடன் நடந்த கடந்த தேர்தல் பேரத்தில் 35 கேட்டார் அப்போதும் 21க்கு ஒத்துகொள்ளவில்லை நாளுக்கு நாள் தனது வளர்ச்சி என்பது குறைவதை வைக்கோ கணக்கிட்டாரோ இல்லையோ ஜெயாவும் மற்ற கட்சிகளும் கணக்கிடுகிறார்கள் என்பது வைக்கோவுக்கு தெரியாமல் போகலாம் ஆனால் உண்மை கம்யூனிஸ்டுகளுக்கு தெரியவில்லையே - வினவு சொல்கிறது என்ன பேசி இருப்பார்கள் என்று கற்பனை செய்கிறது .

நடக்கும் காட்டாச்சியை அகற்றுவது பற்றி போலி கம்யூனிஸ்டு பேசி இருக்கமாட்டார்கள் அது குறித்து கவலை அவர்களுக்கு இல்லை என்று சொல்வதன் மூலம் அது குறித்து கொஞ்சமும் கவலை இவர்களுக்கு இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் எனவே சொல்கிறார்கள் 12 தொகுதியை வாங்கிட்டு பொழைக்கிற வழியபாருன்னு சொல்வார்கள் என்று


திமுகவின் குடும்ப ஆட்சியை அகற்றுவது, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்பது” என்ற கொள்கைகளுக்காக கூட்டணி அமைத்திருக்கும் கம்யூனிஸ்டுகள், அந்தக் கொள்கை வெற்றி பெறுவதற்காக சொந்த தொகுதிகளையும், சுயமரியாதையையும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று விளக்கமும் சொல்வார். பதவிக்காக சுயமரியாதையை தியாகம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார் வைகோ. இரண்டையும் தியாகம் செய்யலாம் என்பது வலது இடதுகளின் நிலை. யார் பெரிய தியாகி வைகோ வா, தாபா வா? எது பெரிது – ஒண்ணா ரெண்டா?
மேற்கண்டவாறு வைக்கோவின் மானத்தை புகழ்பவர்கள் இன்னொரு இடத்தில் என்ன சொல்கிறார்கள்

http://www.vinavu.com/2011/03/16/vaiko-mdmk/
//இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் ம.தி.மு.கவிற்கான தொகுதிகள் 5 கொடுக்கப்பட்டாலே அது பெரிய விசயம்தான். இதை இல்லை என்று வைகோவால் கூட மறுக்க முடியாது.//

அதாவது வைக்கோ தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்தவுடன் இவர்களது மார்க்சிய யூகங்கள் என்னாச்சு மண்ணோடு ஏன் மண்ணாச்சு

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post