இலவசம் என்பது நம்ம பாக்கெட் காசுதான்

இலவசங்கள் மூலம் அறிய சாதனை

 

 

நீங்கள் வருங்காலத்தில் கலைஞருக்கு ஓட்டு போட்டுவிட்டு வீட்டில் இருந்தால் போதும் மளிகை சாமான் முதக்கொண்டு வீடு தேடு வரும் இதெல்லாம் இலவசமாக தருகிறாராம்.

 

எப்படி தருகிறார் ஒருவேளை திருவாரூரில் இருந்து தனது சொந்த நிலபுலன்களை விற்று தருகிறாரா அல்லது கதை வசனம் எழுதிய காசில் தருகிறாரா அதெல்லாம் இல்லை மொத்தமும் நம்ம காசுதான் நம்ப பாக்கெட்டில் இருந்து எடுத்து நமக்கு ஒரு

டீ வாங்கி கொடுத்திட்டு அவரு முழு சாப்பாடு சாப்பிட்டு போயிடுவாறு அதாங்க அரசியல் பத்தாததுக்கு உலகவங்கி முதல்  வெளிநாடுகள் முதல் அனைவரிடமும் கடன் வாங்கித்தான் இலவசம்கொடுக்கிறார்கள்

 

//நம்   தாய் தமிழகத்தின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாய். தாயும் தாய் மண்ணும் ஒன்றல்லவா  ? கணக்கு செய்து பாருங்கள் தமிழர்கள் நம் ஒவ்வொருவர் தலைக்கும்  தலா 20,000 ரூபாய் கடன் சுமை உள்ளது//

 

சார் நானெல்லாம் ஐஞ்சு பைசா கடனில்லாமல் பிழைச்சவன் என யாரும் சொல்லமுடியாது தனிபட்ட முறையில் நீ கடனாளியோ இல்லையோ அரசு உன்பேரில்

வாங்கி வைத்துள்ள கடல் 1 லட்சம் கோடி ரூபாய்

 

கடன வாங்கி நமக்கு மிக்சி கொடுத்திட்டு அவரு கிரைண்டரை நவத்திட்டு போயிட்டாரு எப்படின்னா

 

//"2ஜி' ஊழல் தொகை, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது, இதிலிருந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரித்து கொடுத்தால், தலா 40,000 ரூபாய் கிடைக்கும்.// இப்ப புரியுதா ஏன் இலவசம் தருகிறான் என்று பாமரமக்களுக்கு புரியாது படிச்சவனும் இலவசத்தை தூக்கி மூஞ்சில் அடிப்பது இல்லை ஒரே ஒரு விவசாயி திருப்பி கொடுத்தார் முகத்தில் அடித்தாப்பல

 

ஒரு டிவி ஆயிரம் போட்டாலும் எத்தனை லட்சம் டிவி கொடுக்கிற அதை விவசாயிகளின் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றுன்னு .

 

ஒரு வீட்டின் வரவு செலவு  சரியில்லைன்னா அந்த குடும்பத்தை பாதிக்கும் காரணம் அந்த வீட்டின் நபர்கள் சரியில்லை எனலாம் - ஒரு நாட்டின் வரவு செலவு சரியில்லைன்னா நாட்டையே பாதிக்கும்

 

ஒரு பத்துபைசா இலவசமா யாராவது கொடுத்தாலும் பின்னால நூறு ரூபாயாக திருப்பி பெறுவது என்கிற நோக்கமே காரணம் .

 

இலவசமாகா கொடுப்பது டிவி - ஆடம்பர செலவு வீட்டிலேயே சோறு பொங்க காசில்லாதப்ப சினிமா பார்க்க மாட்டோம் ஆனால் அரசு உனக்கு சோறில்லை என்றால் பரவாயில்லை இந்தா டிவி பார் என்கிறது .

 

இதன் மூலம் அரசுக்கு என்ன லாபம் என கேட்போர் அப்பாவிகள் அரசு என்பது இன்னமும் கடனில்தான் உள்ளது அரசியல் வாதிகளுக்குத்தான் லாபம்;அரசுகடனானால் எனக்கென்ன நான் ஆசியாவில் முதல் பணக்காரனாகனும் என கருணாநிதியும், முதல் பணக்காரியாகனும் என்று செயலலிதாவும் போட்டி போடுகிறார்கள் .

 

ஆனால் மக்களோ இலவசங்களுக்கு ஆளாய் பரக்கிறார்கள் .

ஒரு நண்பர் எழுதியதை போல //உண்மையில் இலவசமாக வழங்க வேண்டியது,

   1. கல்வி,

   2. மருத்துவம்,

   3. பாதுகாப்பு தானே தவிர, மற்றவை அல்ல.

//

 

ஆனால் கல்வி இன்றைக்கு ஏழைக்கு இல்லாத விசயமாக போய் விட்டதையும் மருத்துவம் எட்டாத உயரத்துக்கு போய்விட்டதையும் மக்கள் ஏன் உணருவதில்லை

 

இந்த இலவசங்களின் காரணமாக கீழகண்ட வரிகள் அதிகரிக்கின்றன

 

    * சாலை வரி

    * வீடு வரி

    * குடிநீர் வரி

    * வருமானவரி

    * வாட் வரி

    * வணிக வரி

    * மின்சார வரி

 

இதற்கு பதிலாக தேர்தல் அறிக்கையை பார்த்து இத்தனை இலவசமா என வாய்பிளக்கும் மக்கள்

 

நாட்டில் வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில்துறை, உள்கட்டமைப்பு வசதிகளை பற்றி எந்த கட்சி கவலை படுகிறது என்பதை பார்த்து வாக்களியுங்கள்

 

நாளுக்கு நாள் வேலை வாய்ப்பை வழங்கிய ஜவுளித்தொழில் நூல் பிரச்சனையாளும் பஞ்சு விலை ஏற்றத்தாலும் தள்ளாடுது

 

வேலை வாய்ப்புகளை வழங்கிய திருப்பூர் சாயகழிவு நீரை

யார் சுத்தம் செய்வது என்கிற இழுபறியில் வேலை இல்லாத பகுதியாக மாறப்போகிறது

 

அனைத்து தொழிலுக்கும் தேவை படும் மின்சாரமோ நாளுக்கு நாள் தட்டுபாட்டுடன் அதிகமாகவே செய்கிறது ஆனால் கீழ்கண்ட இலவசங்கள் :

 

# விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.

# இலவச கல்விகடன்

# இலவச  மருத்துவம்(ஆம்புலன்ஸ் வசதி)

# ஏழை பெண்களுக்கு  இலவச திருமணம் .

# மாணவர்களுக்கு இலவச பயண வசதி

# கர்ப்ப கால நிதி உதவி

 

அத்தியாவசியமானவை அதை விடுத்து மிக்சி தருகிறேன் கிரைண்டர் தருகிறேன் என்பதெல்லாம் ஊழலின் ஊற்றுகண்ணே

 

மக்களே உசார் இலவசம் பராக் பராக்

 

இலவசம் என்பது நம்ம பாக்கெட் காசுதான்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post