கடந்த ஆட்சியில் எத்தனையோ இலவசங்கள் தரப்பட்டன வீடு ,டிவி, ரூபாய் அரிசி இவை எல்லாம் தரப்பட்டும் மக்களின் மனதில் நீங்காத ரணமானது ஈழ படுகொலைதான் அதற்கு கருணாநிதி பொறுப்பல்லன்னு சொல்லமுடியுமா பொறுப்புன்னு சொல்லமுடியுமா என்கிற விவாதத்தை விட பதில் தெளிவாக தெரிகிறது
தனது பதவியில் உக்கார்ந்து எந்த இனத்தின் தலைவனும் வேடிக்கை பார்க்கமாட்டான் தன் இனம் அழியும்போது .
ரோம் எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனை பற்றி படித்தவர்கள் இங்கே பாருங்கள் கருணாநிதிதான் அந்த நீரோ மன்னன் .
போர் என்றால் அனைத்து விதிமுறைகளையும் மீறிய கொடூர கொலைகார போர் அது ?
அதற்கு உதவி செய்தது மந்திய ஆளும் வர்க்கம் என்றால்அதை எதிர்க்காம் துரோகம் செய்து உள்நாட்டில் எழுந்த மாணவர்கள் வக்கீல்கள் போராட்டத்தை ஒடுக்கியது திமுக அரசு மேலும் இதே மாணவர்கள் அடித்து இன்னொரு மாணவன் உயிரிழக்கும் தருவாயிலும் கண்டும் காணாமல் இருந்தது.
தனது குடும்ப நெட்வொர்க்கில் அனைத்து தொழில்களையும் கொண்டு வந்து மத்திய அரசில் அங்கம் கோரி லேவாதேவி நடத்தியதுடன் ஸ்பெக்டம் ஊழலை செய்து ஊழலை பற்றி உலகுக்கே எடுத்துகாட்டுடன் விளங்கியது கருணாநிதியின் கும்பல்தான்.
இலவசமாக டிவிக்களை வழங்கி மக்களை ஏமாற்றியதுடன் கடும் மின்சார பற்றாக்குறையால் விவசாயம் மற்றும் தொழில் பாதிப்பை ஏற்படுத்தியது அல்லது ஏற்படும் நிலையில் கையாலாகமல் இருந்த இந்த அரசு மக்களை ஒவ்வொரு தேர்தலின் போதும் இலவசம் கொடுத்து மயக்குகிறது /
ஒரு விசயத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும் உள்நாட்டில் குடும்ப சொத்தின் வளர்ச்சி விலைவாசி முதலான மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் மழுப்பல் படுகொலையான ஈழ பிரச்சனையையில் மழுப்பல் என மொத்தமாக மக்கள் விரோத கும்பினியாக இருந்தது ஆளும் தமிழ்நாட்டின் திமுகவே .
அதேவேளை பாசிச செயா இவருக்கு ஒன்றும் குறைந்தவரா என கேட்டால் இல்லை எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் அரசு ஊழியர் போராட்டத்தை இரும்புகரம் கொண்டு ஒடுக்கியது ஜெ தான் . பார்பனிய தந்திரங்களை செயல்படுத்தி ட்திராவிட குலதெய்வ வழிபாடுகளில் மூக்கை நுழைத்து ஆடு கோழி வெட்ட தடை சட்டம் கொண்டு வந்ததன் மூலம் ஒரு பார்பனிய மீட்பு ரட்சகியாகவே ஜெ நடந்துகொண்டார்
மக்களுக்கு ஒரு ஆப்சனும் இல்லை ஒன்று பேய் இன்னொன்று பிசாசு ஆனால் மக்களை ஏமாற்றும் இலவசங்களை அள்ளிதரவில்லை ஜெ இருந்தாலும் அவரும் மக்கள் விரோத போக்கை அடிக்கடி கொள்பவர்தான்
மக்களுக்கு இப்போ உள்ள ஒரே ஆப்சன் ஜெயலலிதா உட்பட எதிர்கட்சிகளை தேர்ந்தெடுப்பதுதான் ஏனெனில் இந்த போலி ஜனநாயகத்தில் அவர்களுக்குள்ளேயே பதவியை மாற்றி மாற்றி தருவதன் மூலமே மக்கள் எதாவது செய்யமுடியும் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் தற்காலிகமாக ஒரு கொள்ளை கும்பலை தடை செய்ய முடியும்
தேர்தலில் ஓட்டுடன் நிறுத்தி கொள்ளாது தொடர்ந்து போராட்டங்களை தொடர்வது மட்டுமே தீர்வாகும்
இது நியாயமற்றதுதான் ஆனால் தற்காலிகமாக நியாயமானது ஏனெனில் கொள்ளையை தடுக்க அநீதியை ஒழிக்க தற்காலிகமாக பாசிச செயாவை தேர்ந்தெடுக்க வேண்டும்
ஓட்டு போடாதே புரட்சி செய் என்பது நிரந்தரம்
ஆனால் அது இப்போ வேலை செய்யாது
இவைதான் சாதனைகளின் பட்டியல் :
24,58,411 வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டிகள் இலவசம்
மெட்ரோ ரயில் திட்டம்
ஒரு லட்சம் புதிய வீடுகள்
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதாரப் பகுதி
மாதாந்திர ஓய்வு உதவி
-- மேற்கண்டவற்றில் இலவசங்களை குறைத்து தொழில் வளர்ச்சிக்கான திட்டம் ஏதுமில்லை அதாவது பிச்சைகாரனாக்கி பிச்சை போடுவது
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================