அன்றாட வாழ்வென்பது மிகுந்த அலுப்புதட்டுவதாக இருக்கிறது ஒரு உழைக்கும் வர்க்கத்து தொழிலாளிக்கும் மத்தியதர தொழிலாளிக்கும் என உலகம் தனிதனியான் விசயங்களை கொண்டிருக்கவில்லை பணக்காரர்களுக்கு பொழுதுபோக்கு என்பது மிக சாதாரணமாக கிடைக்கும் இந்த உலகில் சீரியல்கள் சினிமாக்கள் தவிர பரவலான மக்களுக்கு பார்த்து சிரித்து கைதட்டி சிரிக்க ஒரு பொழுதுபோக்கான அம்சம் இருக்க கூடாதா அது கிரிக்கெட்டாகவோ கபடியாகவோ கிட்டிபுல்லாகவோ இருக்கலாம் .
மற்ற இரண்டும் உலகத்தை தமிழன் கைப்பற்றாமல் தனக்குள்ளே
அடித்துகொண்ட நாட்களால் தன்னுள்ளே தங்கி விட்டது கிரிக்கெட் வெள்ளைகாரர்கள் விளையாடியது என்பதால் உலகமெங்கும் அதன் விளையாட்டை புரிந்துகொண்டு விளையாட ஆட்கள் இருப்பதாலும் அது உலகவிளையாட்டாக பரிணமித்து வந்துள்ளது .
மக்களை கவரும் விசயங்களை (சேகுவேரா உட்பட அனைத்தையும் தனக்குள்ளே வரித்துகொள்கிறா முதலாளித்துவம் இதையும் வரித்து கொண்டது )
இன்று மாப்பியாக்கள் ஆதிக்கத்தில் தான் மதமும் இருக்கிறது டாடாவும் பிர்லா போன்ற பணக்கார எஜமானர்கள் தான் இந்துமதத்தை தூக்கி பிடிக்கிறார்கள் . எனவே மதம் மீண்டும் மீண்டும்பூக்கிறது ஓக்கே மாபியா ஆதிக்கத்தில் பணக்காரர்கள் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு எப்படி மக்களிடையே பரவியது.அதைபோன்ற மாபியா ஆதிக்க சக்திகளிடம் இருக்கிற மற்ற விளையாட்டுகள் ஏன் சென்றடையவில்லை என ஆராயலாம் இதன் மூலம் மேலும் மேலும் மக்கள் கிரிக்கெட் எனும் லைட்டில் விழுகும் விட்டில் பூச்சிகளாகாமல் தடுக்க முடியுமா முடியாது ஏனெனில் இதயமற்ற உலகின் இதயமாக மதம்இருக்கிறதென்றார் மார்க்ஸ் கிரிக்கெட் என்கிறேன்நான். .
கிரிக்கெட்டும் மதமும் ஒன்றுதான் அதன் காரணங்களை ஒழிக்காமல் விளைவை ஒழிக்க முடியாது
கிரிக்கெட் ஒரு கேம் என்பதை விட தப்பித்தலுக்கான வழியாகி விட்டது. பாகிஸ்தான் ஆடுகளத்தை சிதைப்பதன் மூலம் தனது மதபக்தியை சிவசேனா காட்டுகிறதென்றால் பாகிஸ்தானுக்கெதிரான உலக கோப்பை போட்டியில் வெல்வதை தேசபக்தியாக இந்திய தேசபக்த வெறியன் கொள்கிறான் என்றால்
கிரிக்கெட் அது ஒரு விளையாட்டு எனும் பரிணாமத்தில் தங்கி இருக்கவில்லை என உறுதியாகிறது .இப்போது அதுவென்ன அது ஒரு மதம் அதன் கைகால்கள் முளைத்து அனைவரிடமும் சென்றுவிட்ட மதமானது . ரேடியோவில் ஒலிக்கும் ஒரு பாடலை போல கிரிக்கெட் தன்னை மறக்க உதவும் ஒரு சாதனம் என்கிற வகையில் எந்த வேறு உருவமும் எடுக்காமல் இருக்க முடியாது ஏனெனில் அதில் பணம் பரிமாறபடுகிறது . அடிப்படையில் இந்த உலகின் குறிகிய வேலை பளு இதன் டென்சன் இதை அலுப்பூட்டும் சங்கதிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது . எனவே மதத்தை போலவே பல்வேறு விசயங்கள் மைண்டு டைவர்சனுக்கு மனிதனுக்கு உருவாகி வருகிறது .
இந்தவகை தப்பித்தலுக்கு காரணம் அதிகநேரம் வேலை அதன்னூடான டென்சன் ஆகியவையே இதை மாற்றும் வரை
இம்மாதிரி சாதனங்கள் வளர்வதை தடை செய்ய இயலாது
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================