சாவு

அந்த பழைய கேட் என்மேல் விழும்வரை தெரியாது; சாவு இப்படித்தான் இருக்குமென்று,
நினைவு தப்பி விழுந்து கிடக்கிறேன் என நினைக்கிறேன் , அதெப்படி நினைக்க முடியும்
ஆனால் அப்படித்தான் உணர்கிறேன் .

சிக்னலில் நின்று கையேந்திய பிச்சைகாரனுக்கு பணம் போட்டு இருக்கலாம்,
இன்னொரு வீடு வேண்டும் என்ற அண்ணனுக்கு விட்டு கொடுத்து இருக்கலாம்
,என்ன மடத்தனம் செய்து விட்டேன் "மாமியார்" வந்தார் ; வந்தவங்களை வாங்கன்னு
சொல்லவே இல்லை .

என் கையில் ஊசி குத்தி கொண்டு இருக்கிறார்கள், ஆள் தேறுவது கஸ்டம்
என சொல்கிறார்கள் முழு முதுகுத்தண்டுமே உடைந்து நொறுங்கி விட்டதாக
சொல்கிறார்கள் .

இன்சூரன்ஸ் இருக்கான்னு தம்பி கேட்பது கேட்கிறது ; கட்டாமல் விட்டதாக்
மனைவி சொல்கிறாள் .

ஒரு முருங்கை காய் கொடுங்கள் என கேட்ட அந்த சிறுமிக்கு கொடுத்து
இருக்கலாம்தான் ஆனால் காலம் கடந்து விட்டது .

நேற்று வரை நான் நினைக்கவில்லையே சாவேன் என்று ஆனால் இன்று
வந்துவிட்டது . கையை தூக்கி பேச நினைக்கிறேன் முடியவில்லை .

மரணம் வரும்போது சொல்லிக்காம வரும் என்பார்கள் ஆனால்
என் விசயத்தில் அது சொல்லிட்டு வந்து இருக்கலாம் நானும்
தயாராக இருந்து இருப்பேன் .

சொத்து பிரிக்காமல் கிடப்பதாக அப்பா சொல்லிட்டே இருந்தார்
ஒரு வேளை மனைவிக்கு எதும் கொடுக்காமல் போவார்களோ?
அப்படி கொடுக்காவிட்டாலும் என்ன செய்யமுடியும் .

நேற்று வரை எல்லா மடலுக்கும் பதில் எழுதி விட்டேன் யாராவது
மடல் அனுப்பி இருக்கலாம் யாருக்கும் எனது பாஸ்வேடை
கொடுக்கவில்லை இப்பதான் ஞாபகம் வருகிறது .

இனிமேல் எனது மடலுக்கு யார் பதில் கொடுப்பது கவலை பட
என்ன இருக்கும் அதான் சாவு வந்துடுச்சே

செத்து ஒழின்னு நிறைய பேரை சொல்லி இருக்கேன் ஆனா
எனக்கு சாவு வரும்போது தெரிகிறது அப்படி சொல்ல கூடாதுன்னு
சொல்லிக்காம வருவதை ஏன் சொல்லனும் ஒரு சாபமா
லாஜிக் பத்தி நினைக்கிறேன்.

கடவுள் மேல் கோபமாக வந்தது அவர் கொடுக்கும் வாழ்க்கையை
அவர் எவ்ளோ சீக்கிரம் பிடுங்கிடுறார் .

ஆமாம் கொடுக்கும் போது சொல்லிட்டா கொடுத்தார் . எப்ப கொடுத்தார்
யாருகிட்ட கொடுத்தார். ஒன்றும் தெரியாது

கடவுள் என்றதும் ஞாபகம் வந்தது இப்ப கடவுள் வருவாரா
என்னப்பா எப்படி செத்தேன்னு கேட்பாரா பொறுத்து இருந்து பார்க்கனும்.

எப்படி பொறுத்து இருப்பது பொறுமைக்கு நேரம் இருக்கே சாவுக்கு
நேரம்  காலம் இல்லையே ?.

உயிரோடு இருக்கும் போது கீதை படி மோச்சம் கிடைக்கும்னு
சொன்ன அந்த ஆள் இப்போ கட்டிலுக்கு பக்கத்தில் நிற்கிறார்

கேட்கனும் அவர்கிட்ட எங்கய்யா நான் கீதை படிச்சேன் உங்க
கிருஸ்ணர் வரலையேன்னு .

எப்படி கேட்க முடியும் ...............

இதயம்  துடிக்க வில்லைன்னு சொல்லிட்டார் மருத்துவர்

பில்லுக்கு பணத்துக்கு ஓடுகிறான் மகன்

அழுகையை நிறுத்தாமல் இருக்கிறாள் மனைவி

பில் தொகையை சொல்லீஎப்படியாவது கட்டிட்டு தூக்கிட்டு
போங்கன்னு சொல்கிறாள் நர்ஸ்

பணம் அந்த கிருஸ்ணரை மறந்து இப்ப்போ பணத்துக்கு
வந்துட்டேன் எப்படி பொறட்ட முடியும்  செத்தவன்
யாருகிட்ட கேட்க முடியும் .

ஆமாம் பணத்துக்கு மரணமில்லையா அது சாவு இல்லாததா
அப்போ பணக்காரனுக்கு மரணமில்லையா

எப்படியாவது போகட்டும் எனது பில் தொகையை யார் கட்டுவாங்க
கட்டாவிட்டால் என்ன செய்வாங்க

சே செத்த பின் என்ன பில்லு இருக்கிறவன் படும் கவலையை
ஏன் செத்தவன் படனும் ........................


அந்த சைரன் சத்தமும் அழுகையும் கேட்குது
பூ வாசம் கொஞ்சம் அதிகமாகிட்டது .

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post