நடு இரவில் அந்த காவல் நிலையத்தில்

விடிந்தால் சுந்தந்திர தினம் ..

சுமார் 2 மணி இருக்கும் சார் போலீசில் என்னை பிடித்து விட்டார்கள் வந்து கூட்டிட்டு போங்க என ஒரு போன் வர முழித்து கொண்டேன்

"ஏம்பா "

"" வேலை முடிச்சு - டீ சாப்பிட வந்தோம் " சந்தேகத்தின் பேரில் பிடிச்சுட்டாங்க சார் "

பக்கத்து வீட்டு பையன் அவனது உடன் வேலை பார்த்த இருவரும் அழாத குறையாக
போனில் கதற பைக்கை எடுத்து போனால் ஏட்டு "வாங்க இவங்க நடுராத்திரீல எதுக்கு வெளிய போனாங்க"

"சார் பாவம் தெரிந்ஞ்ச பசங்கதான் வேலைக்கு போயிட்டு வந்து இருக்காங்க " இது நான்

சரி விட்டுடுங்க ஏட்டையான்னு இன்னொரு ஏட்டையாவிடம் சொல்ல

அவர் சார் இப்படியே விட்டு கிட்டே இருந்தா என்னாவுறது

ஆரம்பிச்சுட்டார்

"சார் இவனுங்க அங்க இந்து முன்னனில இருக்கானுக

ஏற்கனவே பிரச்சனை செய்து கேஸ் இருக்கும் போல தெரியுது"

பசங்க கதறி கொண்டே இல்லை சார் நாங்க எதுக்கும் போவதில்லை

"இல்லை சார் இவங்க எந்த சங்கத்திலும் இல்லை "

" இல்லைன்னா என்ன இப்ப கேசு போட்டுடலாம் "

நான் அமைதியாக அவரை பார்த்தேன்  உடனே முதலில் பேசிய ஏட்டையா

சரி சரி விடுங்க ஏட்டையா சாருகிட்ட ஒரு ஐநூறு ரூபா வாங்கிட்டு

ஜீப்புக்கு பெட்ரோல் போட்டுட்டு கிளம்பலாம்

என சொல்ல அதற்குள் இன்ஸ்பெக்டர் வர கிளம்பி விட்டார்கள்

கேள் வி :

1.சந்தேகம் என்றால் விசாரித்துவிட்டு அனுப்ப வேண்டியது தானே
ஏன் கேசு போடனும் சும்மா காச்சுக்கும்

2. சுந்தந்திர தினம் அன்னைக்கு மட்டும் ரவுண்ட்ஸ் போனா போதுமா
மற்றநாள் என்னாவது

இப்படி பல கேள்விகள் ஓட  அந்த பசங்களுக்கு டீ வாங்கி கொடுத்து வீட்டுக்கு
கூட்டி வர விடிந்து விட்டது

வாழ்க சுதந்திரம்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post