ஒரு அறுவது வயது மதிக்கத்தக்க நபர் பஸ்ஸ்டாப்பில் மயங்கி கிடந்தார் அடடா அப்பா வயது நபர் இன்னும் கொஞ்சம் நேரம் போனால் அடிக்கிற வெயிலில் என்ன ஆவார் என நினனத்து 108 க்கு போன் செய்தேன் அலோ என் பெயர் தியாகு இங்க ஒருத்தர் மயங்கி
கிடக்கிறார் உடனே ஆம்புலன்ச அனுப்ப முடியுமா சார் எந்த ஊர் இடம் எல்லாம் கேட்டு விட்டு ஒரு நிமிடம் இருங்க அந்த பகுதி ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம் என்றார்கள் .
பிறகு ஒரு பத்து நம்பரில் இருந்து நான் யார் எங்கிருந்து பேசுகிறேன் என கேட்டார்கள் .
ஒரு வழியாக வந்த ஆம்புலன்சு டிரைவர் சொன்னார் சார் இந்த ஆள் போதையில் கிடக்கிறார்ன்னு . அய்யா போதையில் கிடந்ததல் என்ன
தூக்கி போங்கள் நா வறண்டு இறந்து விட போகிறார் என்றேன்.
போனா போறான் சார் இது டிரைவர்
என்ன அநியாயம் குடித்தவன் உயிர் அவ்ளோ இழப்பமா சண்டைக்கு போனேன் உடனே கூடிய பொதுஜனங்கள்
ஆம்புலன்ச விடுங்க இந்தாள் கொஞ்ச நேரத்தில் எழுந்து போய்விடுவான்னு சொல்லி என்னை தடுக்கிறார்கள்
1.குடியை அரசே விற்கிறது
2.டாஸ்மார்க் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடுகிறார்கள்
3.குடி போதை அதிகமாகியவன் மட்டும் செத்தால் பரவாயில்லையா
அப்போ அரசு செய்வது சரியா
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================