காக்கா

காக்கா என்றதும் உங்களுக்கு கருப்பு நிறத்தில் இருக்கும்
அந்த பறவை ஞாபகம் வரும் ஆனால் எனக்கு காக்கா பிடிப்பவர்களை
ஞாபகம் வருகிறது .

எல்லா இடத்திலும் அதிகார வர்க்கத்துடன் இவர்கள்
இருப்பதை காணலாம் இவர்கள் இந்த வேலையை
கலை நுணுக்கத்துடன் செய்வார்கள் .

இவர்களுக்கு நேர் எதிரிடையானவர்கள் காக்கா பிடிக்காதவர்கள்
இவர்களை கண்டால் பிடிக்காது.

இவர்களின் எதிகளை நாம் குருவிகள் என ஒரு பேச்சுக்கு
வைத்துகொள்ளலாம் இந்த குருவிகள் என்ன செய்வார்கள்
தங்களுக்கு கொடுத்த வேலையை செய்வார்கள் ஆனால்
அதை மேலிடத்துக்கோ அல்லது சக ஊழியர்களுக்கோ
சொல்லிக்கிட மாட்டார்கள் அவர்களுக்கு அந்த வேலையை
முடித்தால் போதுமானது சுயதம்பட்டம் பிடிக்காது செய்பவர்களையும்
வெறுப்பார்கள் இந்த குருவிகள் .

ஆனால் காக்காய்களோ சின்ன வேலை செய்தாலும் உடனே
போய் சொல்லிவிடுவார்கள் நான் இந்தமாதிரி அந்தமாதிரி
செய்தேன் இதனால் இவ்ளோ நன்மை என தம்பட்டம் பட்டம்
டம் எல்லாம் அடித்து விட்டு ஓய்வார்கள்

காக்காய்கள் எப்போதும் அதிகாரவர்க்கத்தின் அருகில் இருப்பார்கள்
குருவிகள் நேர் எதிர் இவர்கள் மனதில் அதிகாரவர்க்கத்தை
வெறுத்தாலும் அதிகாரவர்க்கம் தன்னை மதித்துதான் ஆகனும்
என நினைப்பார்கள் தங்களின் திறமைமீது மரியாதை
அதிகாரவர்க்கம் கொடுக்கனும் என நினைப்பது குருவிகளின்
இயல்பு .

ஆனால் காக்காவுக்கு இந்த திறமை கிறமை எல்லாம் தேவையே
இல்லை அது எதை எப்போது சொல்ல வேண்டும் எதை எப்போது
செய்ய வேண்டும் என்பதை மட்டும் யோசிக்கும்.
தனக்கு பிடிக்காதவனை எப்போது மாட்டிவிடலாம் அதற்கு
அதிகாரவர்க்கத்துக்கு என்ன செய்து என்ன சொல்லி
கோபம் ஊட்டலாம் என கணக்கு போட்டே காலத்தை ஓட்டும்
காக்காய் .

ஆனால் என்னதான் குருவி திறமை வைத்து இருந்தாலும்
குருவியை மாட்டி விடுவதில் காக்காய் தனது ரிபோர்ட்டிங்
திறமையால் முறியடிக்கும்.

சொல்வதை நேரம்பார்த்து சொல்லும் குருவியோ இந்த
காக்கா விட்டு எறியும் கல்லை தடுப்பதிலேயும்
திறமையை வளர்ப்பதிலேயும் காலம் செலவிடும்.

எனவே காக்காயிடம் இருந்து குருவி சில நேக்குகளை
கற்றுகொள்ள வேண்டும் என்பது இந்த சின்ன குருவியான
எனது வேண்டுகோள் .
குறிப்பு:
ஆகவே காக்காகளை வெல்ல நேரம் பார்த்து இருக்கனும்
குருவிகள்
காக்காகளி நுணுக்கத்தை கற்றுகொண்டு அதிலும்
தேர்ச்சி பெறவேணும்
அதுவும் ஒரு திறமைதான் என்பதை
குருவிகளுக்கு சொல்லிக்கிறேன்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post