ஒரு புனைவு கதை

இந்த லோகம் எப்போதும்போல் அதுபாட்டுக்கு சுத்தி கிட்டே இருந்துச்சு ,
நீங்களும் நானும் தள்ளி விடலைன்னாலும் இரவும் பகலும் வந்து போயிகிட்டேதான் இருந்துச்சு , அந்த பள்ளி கூடத்தில சின்னுவும் , கங்காவும் ஒன்றா படிக்க ஆரம்பிச்சு ஒரு வருடம் ஆச்சுங்க அவங்களுக்கும் தெரியாது உலகம் தானா சுத்துதுன்னு.

மரத்தடி பள்ளிகூடம்தான் அதுன்னாலும் ஆசிரியர் சரியா வருவார்
பாடம் நடத்துவார் எல்லாம் சரியா நடக்கும் மற்றபடி பரீட்சை அட்டை
எல்லாம் காலண்டர் அட்டைதான்.

எட்டாப்பில் சின்னுவுக்கு ஒரு தோஸ்து மாதிரி இருந்தது சில பொண்ணு
பிள்ளைகளும் இந்த கங்காவுதான் கங்காவுக்கு நிறைய பிள்ளைங்களும் தோஸ்துதான் சின்னுவோட நோட்டை கங்கா ஒருதடவை கேட்காம எடுத்துட்டு போயிட்டா , அவ சின்ன பொண்ணுங்கிறதால சரி நம்ம நண்பந்தானேன்னு கேட்காம எடுத்துட்டா, அடுத்த நாள் கொடுக்கும்போது சின்னுவுக்கு ஒரே கோபம் ஏன் கேட்காம எடுத்தேன்னு சின்னு கேட்க சண்ட வந்துடுச்சு .

அதில இருந்து சின்னுக்கும் கங்காவுக்கும் ஆகாது , சின்னுவோட பிரண்டுகிட்ட அவன் ஒரு சிடுமூஞ்சின்னு கங்கா சொல்லிட்டா . அதைபோயி சின்னு கிட்ட இந்த பிரண்டு சொல்லிட்டான் அப்பவும் சண்டை .

எல்லாரும் ஒன்னா உக்கார்ந்து சாப்பிடையில சின்னுவும் கங்காவும்
உக்கார்ந்து சாப்பிட மாட்டாங்க அதான் சண்டையாச்சே . இவங்க சண்டைய சிலபேரு காமெடியாக்கனுமேன்னு நிறைய போட்டு கொடுத்தாங்க அதில சில பசங்களும் சில பொண்ணுங்களும் அடக்கம் .

இப்படியே கொதிச்சு கொதிச்சு அதிக சூடா இருந்த சின்னு ஒரு நாள்
போடி கீழ்சாதிக்காரி , அடிச்சு கொன்னு போடுவேன்னு திட்டிட்டான் .

அப்போ அழுதுட்டே வீட்டுக்கு போனா கங்கா அவங்க அப்பாகிட்ட சொன்னதும் அந்த நேரத்தில வீட்டுக்கு வந்த அவங்க சாதி தலைவர் என்னா விசயம்னு கேட்கவும் சரியா இருந்தது .
விசயத்தை கேள்வி பட்டதும் அந்த கட்சிகாரருக்கு ஒரே கோபம் வந்துட்டது இந்த விசயத்த விடக்கூடாது ராசப்பான்னு அவரு சொல்லியும் கேட்காம . கங்கா விசயத்தை ஒரு வன்கொடுமை ரேஞ்சுக்கு கொண்டு போயி பள்ளிகூடத்தில சொல்லிட்டாரு .

சின்னு அழுதுட்டே வந்து மன்னிப்பு கேட்டான் . ஆனால் நம்ம நாட்டாமைக்காரர் அதை அத்தோட விடலை ,அவன் மன்னிப்பு கேட்டா போதுமா இதில ஒரு சாதியோட மானம் , மரியாதையே அதுல அடங்கி இருக்கு, அப்புறமா பொம்பள பிள்ளைங்க எப்படி பள்ளிகூடத்துக்கு வரும்னு கேட்டாரு அவரு கேட்டதில நியாயம் இருப்பதையும் ஆனா அந்தளவுக்கும் மேல மன்னிப்புக்கு மேல என்னதான் செய்ய முடியும்னு மக்கள் யோசிச்சுட்டு இருந்தாங்க
.
ஆனா செய்த தவற உரு ஏத்தி ஏத்தி ஊருக்குள்ள இருக்கிறவன் எல்லாம் ஆம்பளத்தனம் செய்யதான் லாயக்கு, பொம்பளைகளை அடிமையாக்குறானுக ,நான் மட்டும்தான் பெரிய சரியான ஆளு என் முன்னால ஊர் ரஸ்தாவில மன்னிப்பு கேட்டு காலில் விழுகனும்னு சொல்லிபுட்டாரு .

சின்னுவுக்கு ஒன்னும் புரியலை அதான் மன்னிப்பு கேட்டாசு அப்புறம் அவங்கப்பாகிட்ட மன்னிப்பு கேட்டாச்சு ஆனா இன்னும் ஊரிலயும் மன்னிப்பு கேட்க சொல்றாங்க அது ஏன்னு புரியலை .

- தொடரும்
























--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

9 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post