யாருடன் வேண்டுமானாலும் சமரச படலாம் - புதுசா இருக்கே

என்னிடம் எனக்கே சில கேள்விகள் இருக்கு தோழர்களே

1.யப்பா தியாகு இந்த பைத்தியகாரன் எழுதியதை தனது தளத்தில் வினவு
போட்டால் தப்பா?

தம்பி தப்பே இல்லை நீ யார் எழுதி கொடுத்தத வேண்டுமென்றாலும் போடு,
அதுக்கு அவங்க எழுதி கொடுத்தாங்கன்னு சொல்லிட்டு போடு தப்பே இல்லை.
அதுக்கு பதில் சொல்றவங்க உன்னையும் ,உனக்கு எழுதிகொடுத்தவனின்
அரசியல் , பெண்ணிய , பெளராணிக நேர்மையும் சேர்த்தே பதில் கொடுப்பாங்க.

2.தியாகு, நாங்கதான் சொல்லிட்டம்ல 1945 வார்த்தை அவர் கொடுத்தார்
3200 வார்த்தையா நாங்க மாத்திட்டம்னு ?

என்னய்யா இது வார்த்தைகளின் எண்ணிக்கையிலா கருத்து இருக்கு
இரண்டடி குறள் இருக்கே அதை விளக்கு நூறு பக்கம் எழுதலாம்
அதுக்காக (சிவராம் எழுதியது குறளுக்கு சமம்னு சொல்லவரலை)
இதை கூட புரிந்து கொள்ள முடியாத நீங்க எப்படி பதிவு எழுதலாம்னு
எங்களுக்கு வகுப்பெடுத்தா எப்படி இருக்கும்.

(அய்யா நீ கொஞ்சம் எழுதுன்னு ஒருத்தர்ட எழுதி வாங்கி நான் கொஞ்சம்
திருத்தி அதை போட்டுட்டா அதாய்யா கூட்டு பதிவு அப்படின்னு சொல்றீக )

3.கூட்டு பதிவுன்னு சொல்லிட்டமே முதல்லயே?

கூட்டு பதிவு பொரியல் பதிவெல்லாம் நீங்க என்ன அர்த்தத்தில் சொல்றீங்கன்னு
தெரியாது நானும் மார்க்சிஸ்டுல கூட்டு பதிவுதான் செய்யறோம்
ஆனால், இந்த கட்டுரை இன்னார் எழுதியதுன்னு போட்டு விடுவோம்.

4.தியாகு ! நீ நரசிம் விசயத்தை நீர்த்து போக செய்வதில்
அந்த சுகுணாவுக்கு துணைபோகிறாயே ?

அய்யா நீர்த்து போனது பொய்த்து போனது எல்லாம் நீங்க செயல்பட்ட
விதமே தவிர நான் கேள்வி கேட்டதனால கிடையாது .இந்த கட்டுரை ,
இன்னார் எழுதியது என போட்டால் என்ன குடிமுழுகி
போயிருக்கும் , அல்லது மணிகண்டன் வந்து கேட்டபோது "ஆமாய்யா
அவர்தான் எழுதி கொடுத்தாரு நான் போட்டேன்னு" சொன்னா கிரீடம்
கழண்டு விழுந்துடுமா .

முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உங்கள் நேர்மைமீது சந்தேகம்
வருகிறது . உங்கள் பின்னால் ஏன் அணி திரள வேண்டும் என்ற சந்தேகமே
தவிர எதிரியின் மீதான (நரசிம்மை எதிர்க்கும்) உங்கள் நோக்கத்தின் மீதள்ள

4.சுகுணாவுடன் எல்லா விசயத்திலும் ஒத்து போகிறாயா?

அய்யா சுகுணாவுடன் உங்க அளவுக்கு கூட ஒத்து போனதே கிடையாது
புலிகள் விசயத்தில் அவர் எழுதிய கட்டுரைக்கு ஒரு பெரிய பதில் எழுதனும்னு
தான் இருக்கேன் . மேலும் சுகுணா இந்த விசயத்தில் முதலில் நரசிம்மை
எதிர்த்து கருத்து சொல்லாமல் சிவராமனை எதிர்த்து பதிவு போட்டதும்
என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அதை அவரிடமே சொல்லிட்டேன்
தமிழ் ம்ணத்தில் இருந்து நரசிம்மை தூக்கனும் என்கிற எனது கருத்தும்
இன்னும் அப்படியே தான் இருக்கு .

5.பைத்தியகாரன் எங்கள் ஆதரவாளர்தான் ஆனால் அவரது கருத்தெல்லாம்
எங்கள் கருத்தல்ல ?

பைத்தியகாரன் இத்தனை நாள் நரசிம்முடன் உக்கார்ந்து தண்ணி அடிக்கலாம்
கடனுக்கு பணம் வாங்கலாம் உதவின்னு போய் நிக்கும் போது நரசிம்மை
புகழலாம் (இதெல்லாம் நண்பர்கள் சொன்னதுதான்) ஆனால் வினவுக்கு
கட்டுரை எழுதி தரம்போது மட்டும் அக்மார்க் மார்க்சியராக உங்களால்
எப்படி பார்க்க முடிகிறது .

பூணூல் போன்ற அடையாளங்களை விடாமல் வைத்து கொண்டு அதன் மூலம்
பார்பன நண்பர்களை பெற்று அதன் மூலம் உதவிகளை பெற்று வாழும் நபர்
பதிவுலகில் வந்தவுடன் அப்படியே மாறி ஒரு புரட்சிகாரனா சக போராளிய
எப்படி பார்க்க முடியுது (நான் கூழ் முட்டை தானுங்க ஏன்னா ஜால்ரா அடிச்சு
வாழும் நிலையில் நான் இல்லாமல் இருக்கேன்) கருணாநிதி கூட தான் எழுதிய கவிதை தான் தான் எழுதினேன்னு போடுகிறார், ஆனால், புரட்சிகர சக்தி என பீற்றி கொள்ளும் நீங்கள் ஏன் அந்த நேர்மைக்கு பதிலா என்னமோ வளவள கொழ கொழன்னு பேசிட்டு இருக்கீங்க


5.ஆனந்த விகடனில் வெளிவராத கடிதங்களை சுகுணா தனது தளத்தில்
வெளியிடுவாரா?

அப்போ ஆனந்த விகடனும் வினவும் ஒன்றா அய்யோ நாங்க வினவ
வேற மாதிரி அறிவு ஜீவின்னும்,முற்போக்கு வலையிதழ்னும் நினைச்சுட்டு
இருக்கோம் செயல்பாட்டில் ஆனந்தவிகடனும் நாங்களும் ஒன்றுதான்னு
சொல்றீங்களா ?

பேசும் போது எல்லாம் நல்லாத்தான் பேசுறீங்க ஆனா செயல்னு வரும்போது
கோட்டை விட்டுறீங்க "ஓபனிங்கெல்லாம் நல்லாதாம்பா இருக்கு உங்கிட்ட "

ஏற்கனவே லீனாவுக்கு எதிரான செயல்பாட்டிலும் "முக்கி முக்கி போய்
தவறான செயல்முறையால " மூக்குடைஞ்சீங்க இப்ப அத மாதிரி
ஓரு பார்பனியவாதி எழுதி கொடுத்த கட்டுரைய போட்டு அதை மறைக்க
என்னமா பேசுறீங்கப்பா

//சிவராமன் உண்மையிலேயே பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை, சொந்த வாழ்க்கையில் எதையும் கடைப்பிடிக்க வில்லை என்ற விமரிசனங்களையெல்லாம், நட்புடன் பழகும்போது அவரிடம் நேரில் சொல்லியிருக்கவேண்டும். கண்டித்திருக்க வேண்டும். தன்னைப் பற்றி சொன்னவுடன் "நீ பத்தினியா?" என்று லாவணி பாடுவது குழாயடிச் சண்டையைக் காட்டிலும் தரம் தாழ்ந்த அணுகுமுறை.//

அப்படியா கண்டிக்கவில்லை என எப்படி தெரியும் இப்போ அவர் சொல்றாரே
பச்சை பார்பான்னு அது தெரியாமையா அவரோடு நீங்க பழகினீங்க அவர விடுங்க
அவர் ஒரு பின்னவீன அரசியல் வாதி நீங்க மார்க்சியவாதியாச்சே ,

நீங்க அவரது பார்பனிய புத்தி தெரியாமலா இத்தனநாள் ஆதரவாளரா வச்சு
இருந்தீங்க ஏன் கண்டிக்கவில்லை? ஏன் இப்ப எழுதி கொடுத்தது அவர்ன்னு
வந்தவுடனே அவர் அப்படில்லாம் இல்லை பூணூல் போட்ட மார்க்சுன்னு
சொல்லபிடாது

//நர்சிம்மின் ஆணாதிக்கத் திமிரையும் வக்கிரத்தையும் எதிர்த்து பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சொந்த வாழ்க்கையில் எப்படி என்று ஆராய்ச்சி செய்து, யார் யார் நர்சிம்மை விமரிசிக்கலாம் என்று தீர்ப்பு வழங்குவாரா சுகுணா திவாகர்? "லீனாவின் கவிதையை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள், மாறுபடுபவர்களும் இருக்கிறார்கள், வேறுபடுபவர்களும் இருக்கிறார்கள். கருத்துரிமைதான் பிரச்சினை" என்று லீனாவுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசிய அதே நாக்குதானே பேசுகிறது? அங்கே பேசியவர்கள் எல்லாம் பெண் விடுதலைப் போராளிகளா என்று உரசிப் பார்த்து தான் மேடையேற்றினீர்களா?//

அய்யா ஒரு விசயத்தை ஆதரிப்பவன் எல்லாம் போய் பார்த்து நீங்களும் பேச முடியாது நானும் பேச முடியாது வலையுலகில் இதெல்லாம் சாத்தியமே அல்ல .
ஆனால் ஒருத்தன் எழுதி கொடுத்ததை போடும்போது இதெல்லாம் தெரிஞ்சுதானே போடனும் இல்லை அப்படியெல்லாம் போட முடியாதென்னா சொல்லுங்க வினவு என்பது லேபிள் அந்த லேபிளை யார் வேணாலும் பயன்படுத்துவாங்கன்னு சொல்லிடுங்க கிட்டதட்ட அப்படித்தான் சொல்லீங்ட்டீங்க

அப்போ வினவு மன்னிப்பு கேட்கனும் அல்லது சுயவிமர்சனம் ஏற்கனும்னு
சொல்றீங்களா?

ஏன் செய்தா ஈகோ கழண்டு விழுந்துடுமா "சிவராமின் கட்டுரையை இல்லை
என சொன்னமைக்கு பல காரணங்கள் இருந்தன எனவே நாங்கள் சொல்லவில்லை இப்போது சொல்லவேண்டிய அவசியம் வந்ததால் சொல்கிறோம் ஆமாம் சிவராமன் எழுதியதுதான் ஆனால் எழுதிய நோக்கம் சரி என்பதால் வெளியிட்டோம்" சொல்லிட்டு நோக்கத்தை
ஸ்டாராங்க சொல்லாம ஆனந்த விகடன்ல போடுவீங்களா , கல்கியில
போடீவீங்களா , குமுதத்தில இப்படியான்னு என்னமோ உளறிட்டு
இருக்கீங்கப்பா ?


//சிவராமனின் தனிப்பட்ட வாழ்க்கையை வினவு தோழர்கள் கட்டுப்படுத்தவியலாது – அவர் ஒரு ஆதரவாளர்; உடன் வேலை செய்யும் சக தோழரல்ல. பல்வேறு சொந்த அரசியல் நிலைப்பாடுகள் கொண்டுள்ள ஒருவர் எமது அரசியலின் அத்தனை நிலைப்பாடுகளையும் அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பதோ எமது தோழர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் அதே நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தோழர்கள் நிர்பந்திப்பதோ சாத்தியமற்றது. பிரச்சினைகளின் அடிப்படையில் இணைவது தான் சாத்தியம்//

அய்யா கார்க்கி நல்லாதானய்யா இருந்த ஏன் இப்படி சொந்த வாழ்க்கையில் பார்பானாக பார்பனிய
பணியாளாக இருக்கும் ஒருவன் வினவில் எப்படி கட்டுரை எழுதலாம்

ஒரு நியாயமான கேள்வி இரயாகரன் கேட்டாரு (எத்தனை கருத்து வேறுபாடு இருந்தாலும் நான் மதிக்கும் ஒரு மனிதன் இரயா) இரதி எழுதியதை போடுவது புலி எழுதுவதை போடுவதும் ஒன்றுதான்னு அதுக்கு ஒரு பதினைஞ்சு பக்கம் எழுதினீங்க அதெல்லாம் கிடையாதுன்னு . புலியை பாசிஸ்டுன்னா ஆதரிக்கு இரதி பாசிஸ்டு கிடையாது என்ற புதிய அனுகுமுறையை வைத்தீர்கள் ( அப்போ இரயாகரன் பேசியது எவ்ளோ சரியா இருக்குன்னு இப்பதான் நான் உணர்கிறேன் தாங்கஸ் இரயாகரன் அந்த நேரத்தில் உங்களுக்கு ஆதரவாக பேசாமல் போனதற்கு வருந்துகிறேன் )இப்போது சிவராமன் பார்பனிய ஆதரவாளர்னா அவரது கட்டுரை பார்ப்பனிய கட்டுரை கிடையாது சுத்தமான அக்மார்க் மார்க்சிய அழகியல் கட்டுரைன்னு சொல்லபோறீங்களா?
(இன்னொரு நாள் தண்ணி அடிக்கையில் நீங்கள் இப்படி சொன்னதை சொல்லி
கிண்டலடிக்கலாம் இந்த பைத்தியக்காரன்)



//இந்த விவகாரத்தில் அவரது செயல்பாட்டினூடாகவே அவரை நாம் எடை போடுகிறோம். அவரது சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களையும் தாண்டி இவ்விவகாரத்தில் அவர் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கிறார் – அவர் எமது தோழர்களுக்கு சில தரவுகளைத் தந்துதவுகிறார் எங்கள் தோழர்கள் அதைத் தமது பதிவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். //


என்ன சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களை தாண்டி எழுதி கொடுத்துட்டாரு , என்ன நேர்மையான நிலைபாட்டை எடுக்கிறார் (தான் எழுதி கொடுக்கவில்லை என முன்பு சொல்லி ஆமா நான் எழுதினேன்னு
சொல்லி அதை பிறகு நீங்க ஆமா கூட்டு தளம்னு சொல்லி நேர்மையா பேசினீங்களே அந்த
நேர்மையா?)
ஒரு சின்ன விசயம் இது பெரிய அரசியல் தர்க்கம் எல்லாம் தேவை இல்லை
அவர் எழுதி கொடுத்தார் நாங்கள் போட்டோம் நோக்கம் சரியாக இருக்கான்னு
கேட்கலாம் அதுக்கு இவ்ளோ சப்பை கட்டா?

தியாகு நரசிம் விசயத்தை நீர்த்து போக செய்வது சரியா?

மீண்டும் சொல்கிறேன் பதிவுலகத்தில் எவனும் யோக்கியதை கிடையாதென இதன் மூலம்
தெரிகிறது . நரசிம் செய்தது பெரிய தவறென்றால் அவரை செய்ய வைத்தது இந்த சந்தன முல்லை
போன்ற பதிவர்களின் உள் அரசியல் என்பதும் கவனித்தில் கொள்ளப்படவேண்டியது.
ஒன்னும் தெரியாத ஒரு புது வலைபதிவரல்ல இந்த சந்தனைமுல்லை அன் கோ
அவர்கள் தரப்பு குற்றத்தை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும் .

அதுதான் நியாயம் என்பது எனது வேண்டுகோள்

இல்லை நரசிம்முதான் நரசிம்முதான்னு கூவுனீங்கன்னா
அது நல்லது கெட்டது இரண்டையும் ஆராய்பவந்தான் ஒரு இயக்கவியல்வாதி
என்கிற கருத்தை மறுப்பதாகும் .

ஒரு சார்பு நிலை எடுப்பதன் மூலம் வினவை ஒரு போலீஸ் ஸ்டேசன் மாதிரி
யார் வேணும்னாலும் பயன்படுத்த முடியும் என்ற நிலை வரும்
( சிவராமன் எழுதி கொடுத்ததை சந்தனமுல்லை சரிபார்த்து சில வார்த்தைகள்
சேர்த்து கொடுத்தது )
அதை தவிருங்கள் வாழ்க புரட்சிகர அரசியல்
//எதிராக இன்னொருவர் கொள்வதானால், அவர் ஜெயேந்திரன்
கைதான சமயத்தில் எழுதிய
கட்டுரையை ம.க.இ.க சிறு வெளியீடாக கொண்டுவந்ததைக் கூட 'ஒரு குடிகாரனிடமிருந்து எப்படி கட்டுரை எழுதி வாங்கலாம்.. ம.க.இ.க தனது தோழர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளை வலியுறுத்த்திக் கொண்டே ஒரு குடிகார கபோதியிடம் கட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார்களே.. அதுவும் ஆனந்த விகடன் போன்ற ஒரு பார்ப்பன பத்திரிகையில் வேலை செய்கிறார் இப்போது' என்று ஒருவர் சொல்லி விட முடியும்..
அன்று உங்களை எப்படி எடை போட்டார்களோ அப்படியே இன்று சிவராமனை எடை போட்டிருக்கிறார்கள் சுகுணா..//

தனிபட்ட வாழ்வின் பார்பனியத்தை கடைபிடித்தால் பரவாயில்லைன்னு வேற எங்காவது போய் சொல்லிடாதீங்க வாயால சிரிக்க மாட்டாங்க

இந்த லட்சனத்தில மார்க்சியத்த நீங்க புரிஞ்சு வைச்சு இருக்கீங்க


வருத்தமா இருக்கு தோழர்

குறிப்பு :

சுகுணா சோபாசக்தி கிட்ட ஒரு லட்சம் வாங்கினார் , சோபாசக்திக்கும் இன்னொரு பெண்ணும் செக்ஸ் தொடர்பு இருக்குன்னு எழுதும் தமிழச்சி அவர்களே இதை ஏன் முன்பே சொல்லவில்லை (ஏன் சொல்லவில்லை என
ஏன் வினவு கேட்கவில்லை)
அப்போ என்னா விசயம் என்றால் சுகுணா அம்பலப்படுத்தினா அவர்மேல
அவதூறு கிளப்புவீங்க நீங்களெல்லாம் பெரியார பத்தியும் பெண்ணியம் பத்தியும்
பேசுவீங்க நல்லா இருக்குங்க தமிழச்சி

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

8 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post