வினவை நோக்கி வினவு

தருமி ஒரு கேள்வி கேட்பார் திருவிளையாடல் படத்தில் "நானேதான் எழுதினேன் அய்யா மண்டபத்தில யாரோ எழுதி கொடுத்ததையா வாங்கி வந்தேன் "
என சொல்லிட்டு நக்கீரனின் கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல சிவாஜியை
அழைத்து வருவார் நாகேஸ் .

ஆனால் இந்த விசயத்தில் நாகேஸ் - சிவாஜி எல்லாரும் ஒன்றுதான்
ஆனால் பாட்டில் பிழை இருக்கத்தான் செய்கிறது .

ஆனால் பாட்டை எழுதிய நோக்கம் வேறு வேறானது எப்படி :

இதோ இந்த நரசிம்மின் விசயத்தில் ஒரு பார்பானான பைத்தியகாரன் என்ற சிவராமன் எழுதி கொடுத்ததை போட்டு அதுதான் தங்களது அரசியல் அல்லது அதுதான் தங்களது நிலைபாடென சொல்லி ஒரு புரட்சிகரபதிவை போட்டு
தமிழ் மணத்தில் பதிவர்களின் ஆதரவை கோரி இருக்கிறீர்கள்

அதற்கு இந்த பார்பனிய வாதியின் கட்டுரையை உங்கள் சொந்த கட்டுரை போல
போட்டு உள்ளீர்கள் இந்நிலையில் நான் சுகுணாவின் பினாமின்னு சொல்ல எதாவது அறுகதை இருக்கிறதா வினவு அண்டு அசுரனுக்கு.

லீனா விசயத்தில் எனது நேர்மறையான நியாயமான கேள்விகளை என்மீதான
தனிமனித தாக்குதலை கையாண்டு எதிர்கொண்ட நீங்கள் , இன்று சந்தனமுல்லை என்ற பெண்பதிவருக்கு ஆதரவாக களம் இறங்கியது கண்டு
நானும் ஆதரவு தெரிவித்தேன்.

ஆனால் நீங்கள் எழுதவில்லை அந்த கட்டுரை வேறொரு நபர் எழுதியது என
தெரியும்போது . நீங்கள் பதிவுலகத்தை அன்றாடம் அலசி ஆராய்ந்து காயப்போட்டு வருவதாக நான் நினைத்தது எவ்வளவு முட்டால்தனம்

அதே நேரத்தில் இந்த சந்தன முல்லை ஒரு வன்னிசாதி காரராக தன்னை அடையாளபடுத்தி கொள்பவர் என தெரியும் போது சாதிரீதியான உங்கள்
ஆதரவும் பொய்பித்து போகும் போது நான் என்ன நினைப்பது

அட நான் என்னமோ கோட்பாட்டு ரீதியாக இவர்கள் பேசிவிட்டதாக ஒரு நிமிடம்
நினைச்சு மெச்சி போனேன் .

சாதிரீதியாகவும் இல்லை வர்க்க ரீதியாகவும் இல்லை கட்டுரையும் சொந்த கட்டுரை இல்லை எழுதிகொடுத்தவன் வேற ஆள் எனும் போது உங்கள் மீது எனக்கு இரக்கம்தான் வருகிறது.

நீங்கள் இவ்ளோ விசயமும் தெரிந்தல்லவா எழுதிக்கிறீர்கள் என
நாங்கள் நினைத்து வந்தோம் அந்த புரிதலுக்கு ஒரு சலூட் என்பதாகவே
எங்கள் நினைப்பு இருந்தது .

மேலும் ஒரு பெண்பதிவரை காக்க எழுந்த உங்கள் அரசியல் நேர்மை
அந்த கட்டுரை எழுதியவன் பார்ப்பான் என்பதை அவரது நடவடிக்கை
பச்சை பார்பனியதனம் என்பதும் தெரியவந்த போது
உங்கள் வீரமிக்க உரையின் நடுவில் பொத்தல் விழுந்தது தெரிகிறது .

என்ன இருந்தாலும் தோழர்களை நாம் எதிர்க்க கூடாதென சொல்லும் எனது
நண்பர்கள் தோழர்களின் பேச்சு இப்போது எனக்கு வேறுமாதிரி கேட்கிறது .(எதிர்த்தது சரிதான் என்பதுபோல கேட்கிறது)

ஆக பிளாக்கில் பஞ்சாயத்து பண்ணனும் அதுக்கு யார் எழுதியதை போட்டால்
என்னவென்ற உங்களில் அவசரம்தான் புரிகிறது.

எல்லாவற்றையும் சந்தேகப்படு என்கிறார் காரல் மார்க்ஸ்

வினவில் இருந்து வெளிவரும் கட்டுரை யார் எழுதியது எந்த பார்பான்
பார்பனிய எதிர்ப்பை மழுங்கடிக்க எழுதியதோன்னு நினைக்க தோணுது

இந்த சிவராமனை பற்றி புட்டு புட்டு வைக்கிறது

சுகுணாவின் பதிவு (நன்றி சுகுணா திவாகர் நீங்கள் எழுதவில்லை எனில்
யாருக்கும் தெரியாமலேயே போயிருக்கும் )

நீங்கள் ஆதரித்த சந்தன முல்லை ஆர்குட்டில் வன்னிய போரத்தில் இணைந்து தன்னை சாதி அடையாளபடுத்தி கொள்பவர் தான்

//1.ஆர்குட்டில் வன்னிய ஃபோரத்தில் இணைந்து தன் சுயசாதி அடையாளத்தை உறுதிசெய்கிற சந்தனமுல்லையைப் புரட்சித்தலைவியாகச் சித்தரிக்கிற வினவு //

அப்போ இது தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் பார்பன திமிர் பிடிச்ச ஒரு பதிவருக்கும் நடந்த சண்டை இல்லை இது ஒரு ஆதிக்க திமிர் பிடிச்ச பெண்ணுக்கும் அதே போல ஆதிக்க சாதி திமிர் பிடிச்ச நபருக்கும் நடந்த சண்டை

(இதிலபோய் நான் வர்க்கம் பெண்ணியம் எல்லாம் தேடி தேடி அலைந்து
சோர்வானதுதான் மிச்சம்)

இந்த சண்டையை விளக்கும் ஒரு நபர் அதே பார்பனிய வாதி சிவராமன்
ஆகா இதெல்லாம் தெரியாம பல தோழர்கள் வந்து ஆகா சூப்பர் வினவு

உங்கள விட்டா யாரு இருக்கா விடாதீங்கன்னு இன்னும் பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்காங்க

//2.ஆனால் 'நாகவல்லி' என்னும் மூடநம்பிக்கை தொடருக்கு நீங்கள் வசனம் எழுதியது பதிவுலகமே அறிந்த கதை. அது எப்படி சிவராமன் இந்த மானம், வெட்கம், சுயகூச்சம், குற்றவுணர்ச்சி இதுவெல்லாம் இல்லாமல் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடிகிறது?//

தொடர்கள் மனிதனை சீரழிக்கிறது , சினிமா அதைக்காட்டிலும் சீரழிக்கிறது எனவே சினிமா விமர்சனம் காலத்தின் கட்டாயம் என சொன்ன நீங்கள் சினிமா சீரியல் எழுதும் ஒரு நபர் எழுதிய கட்டுரையை எந்த வர்க்க பின்புலமும் கேட்காமலா போட்டீர்கள் (இனிமேல் புத்தி சொல்கிறேன் பேர்வழின்னு கிளம்பிடாதீங்க நல்ல கோபமில்ல கெட்ட கோபம்தான் வரும் எனக்கு )

அப்போ என்னமாதிரி பிற்போக்கான சீரியல் எழுதுகிறவன் ஆனாலும் கட்டுரை எழுதினால் போடுவீர்கள் அதான் வினவு தளம் -உழைக்கும் மக்களின் தளம் (சிபி எம்மாதிரி இந்த விசயத்துக்கு மட்டும் கட்டுரை வாங்கமட்டும் பயன்படுத்துவது தப்பில்லைன்னு சொல்றீங்களா?)

அடுத்து இந்த சிவராமின் லட்சணம்
/இந்துமதத்தின் அடையாளமாகிய குங்குமத்தை நெற்றியில் அணிந்துகொள்கிற,
இன்னும் பூணூலைக் கழற்றாத, தீபாவளி, சித்திரை முதல்நாள் போன்ற பார்ப்பனப் பண்டிகைகளுக்கு நான் உட்பட நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி வாழ்த்துக்கள் அனுப்புகிற பச்சைப் பார்ப்பான் நீங்கள்/

அதாவது பூணூல் போட்டு இருந்தாலும் அவர் மார்க்சை நம்புகிறார்னு காதில்
பூ சுற்ற போறீங்களா பாசு

///''இப்போது நான் பூணல் அணிவதில்லை. சடங்குகள் செய்வதில்லை. மத அடையாள சின்னங்களை பூசிக் கொள்வதில்லை. அதனால் பார்ப்பன சாதியிலிருந்து வெளிவந்துவிட்டேன் என்று சொல்லாதே. புற அடையாளங்களல்ல... அக அடையாளங்களே சாதிக்கான அடித்தளம்" என்று சர்வஜாக்கிரதையாக எழுதுகிறீர்கள். பூணூலையே கழற்றாத உனக்கு எதற்குப் புண்ணாக்குப் பார்ப்பன எதிர்ப்பு?////

சரியான கேள்வியை முன்வைக்கிறார் சுகுணா

ஆனால் சுகுணாவின் பினாமின்னு என்ன திட்டிய அசுரனும் வினவும்
இப்போது சிவராமன் என்ற பார்பானின் பினாமியாக மாறிபோனது
ஒரு முரண்நகை இந்த விசயத்தில் நான் ரொம்ப இரக்கமும் வருத்தமும்
படுகிறேன் தோழர்களே.

முடிந்தால் சிவராமனோ அவது பினாமியா செயல்பட்ட வினவோ பதில் சொல்லட்டும் தெரியாமத்தான் கேட்கிறேன் அதெப்படி உங்களால் மட்டும் பூரணமா நடிக்க முடியுது சந்தனமுல்லையை - தாழ்ந்தசாதி பெண்ணாக காட்டி

நரசிம்மை உயர்ந்த சாதி பார்ப்பான் திட்டிட்டான் என சொல்லி அதை ஒரு பார்பான வைச்சு எழுதவச்சு அதில் உங்க பேர போட்டு ஆதரவு தாருங்கள் என எழுத ஒரு தில்லு வேணும்யா ,வாழ்க உங்க தில்!


வளர்க மண்டபத்தில போறவன்கிட்ட எழுதி வாங்கும்
உங்கள் உத்தி !


(ஒரு வேளை நாங்கள் ஏன் பாராளுமன்றத்துக்கு போனோம் என்பதற்கு பதில் சொல்லும் சிபிஎம் ஓட்டு கட்சி காரனுகள வச்சே ஓட்டு கட்சியை தோற்கடிக்கும்
தந்திரம் போல இதுவும் ஒரு தந்திரம்னு சொல்லி உட்கட்சி தோழர்களை நம்ப வைக்க போறாங்களோ )

எல்லாவற்றையும் சந்தேகப்படு - அய்யா காரல்மார்க்ஸ்

உன் தத்துவம் வாழ்க்கை முழுக்க எனக்கு கைகொடுக்கும்யா கை கொடுக்கும்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

43 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post