கந்தன் எனும் மனிதன்

பனி ஊடுருவி இருக்கும் காலையில் எழுந்து தேனீர் கடைக்கு செல்வது எப்போதுமே அழுப்பு தட்டாத ஒரு விசயமாகத்தான் இருக்கும் .

கந்தையாவை நாள் தவறாமல் பார்ப்பேன் கந்தன் நான் சிறுவனாக இருந்ததுமுதல் அந்த தெருவில்தான் வேலை அவருக்கு.

வணங்கங்கைய்யா தவறாமல் அவர் அடிக்கும் வணக்கம் அது .

என்ன கந்தா சவுக்கியமா என்பேன். டீ வெளியிடும் மூச்சை சுவைத்தவாறே
எனது பதிலுக்கு கூனி குறுகி பதிலளிப்பார் கந்தன் .

எத்தனை வயதென இன்னும் சொல்ல இயலவில்லை கந்தனுக்கு ஒரு குடும்பம்
எங்கள் தெருவின் கடைசியில் இருக்கிறது .

சலப் சலப் பென கருஞ்சாக்கடை வளைந்தோடுகிறது .

எந்த கரையில் அவை சேருமென தெரியாதபடிக்கு ஒருநாள் கூட மாறாமல் அதே நாத்ததுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கந்தனுக்கு அதை விடாமல் தள்ளிகொண்டு இருக்கிறார் .

வீட்டுக்கு வரும் கந்தனுக்கு சிலவேளைகளில் நான் டீ கொடுப்பேன் இதுவெல்லாம் தாத்தாவுக்கு தெரியாமல் நடக்கனும் இல்லாவிட்டால் வீடு ரெண்டாகிடும் .

"என்னடா நினைச்சுட்டு இருக்கே மனசுல "

கண்ட பயலெல்லாம் உள்ளார விட்டுட்டுன்னு கத்தி ஊர கூப்பிடுவார்.

அவரும் வாத்தியார் வேலை பார்த்தவர்தான் "சாதி இரண்டொழிய வேறில்லை சான்றுங்காள் இட்டார் பெரியோ இடாதார் இழிகுலத்தார்" என்பதை தப்பா சொன்னார் என் காதை பிடித்து அழுதாலும் விடமாட்டார் .

பசிக்குதுன்னு கேட்கிறானா அவனுக்கு கொடு ஆனா வீட்டுக்குள்ள விடாதே என்பது அவரது வாதம் அல்லது ஆணவம் எங்கேயாவது எதாவது யோசனையில் போய்கொண்டு இருந்தாலும் கந்தன் என்னை பார்த்த மாத்திரத்தில் அய்யா என்பார் .

எனக்கும் கந்தனுக்கும் ஒரு நேசம் இருந்தது . அது இந்த சாதி எல்லைகளை கடந்தது . கந்தனது காக்கி டவுசர் முதல் கலைந்த தலை வரை ,எனக்கு ரொம்ப பரிச்சயம் . ஒரு டீயும் பன்னும்தான் கந்தனது காலை உணவு . இரவில் கொஞ்சம் சாராயம் குடிப்பது கந்தனுக்கு பழக்கம் .

இதெல்லாம் கந்தனிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது.

பிள்ளைகளை பெற்று படிக்க வைத்து பிறகு தள்ளாத வயதில் மடத்தில் சென்று ஆன்மீக உரைகளை கேட்டு தனது இறுதி காலத்தை பிரயோசனப்படுத்தும் தாத்தாவை எல்லாருக்கும் வருவதுதானே என நினைத்த இரத்த அழுத்தமும், பிறகு சர்க்கரையும் பிறகு கண்பார்வை கோளாரும் படுக்கையாக்கிவிட்டது .

சில மதிப்பீடுகள் நோய்வாய்படுக்கையில் உடைகிறது தாத்தாவுக்கு எந்த மதிப்பீடும் எந்த காரணத்திலும் உடைய கூடாது . காலையில் துணியில் தண்ணீரை நனைத்து உடலை துடைத்துதான் ஆகனும் .
கையை பிடித்து சூடத்தட்டில் வைத்துவிட்டு நெற்றியில் திருநீரை இடுவது என அன்றாடம் அவரது வேலைகள் தட்டாமல் நடந்து வரனும் .

மாதக்கணக்காக வைத்து மலம் அள்ளி போட யாரால முடியும் என அம்மாவின் புலம்பலை ஒரு வாரத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார் தாத்தா. மலம் வெளியேறவில்லை . மூன்று நாட்கள் நாலு நாளானதும் வீட்டுகுள்ளேயே மலம் கழித்து வீடே நாத்தம் தூக்கியதும் ,கந்தனை அழைக்க வேண்டியதாகிப்போனது எந்த கந்தனை வீட்டுக்குள் வரக்கூடாதென திட்டினாரோ அதே கந்தன் .

மலத்தை கையால் அள்ளித்தான் சுத்தம் செய்தார். அரை மயக்கத்தில் கந்தன் வந்ததை அறிந்த தாத்தா வெற்று வெளியை உற்று நோக்கியபடி இருந்தார் .

மெள்ள அழைத்து அவர் சொன்னதாக எனது ஞாபகத்தில் இன்னும் இருக்கிறது
"கந்தனுக்கு டீ கொடு"

தாத்தா இறந்தபின் மூன்றாம் நாள் வைத்த குவாட்டரை யாருக்கு கொடுப்பதென அம்மா கேட்கையில் சொன்னேன் "அந்த கந்தனுக்கு கொடு"

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post