என்ன தோழரே இப்படி ஆகிட்டீங்க


















சிவாஜியை கிழித்த மொண்ணை கத்தி


எல்லாருக்கும் மத்தியானம் சோறு போட்ட எம் ஜி ஆர பாசிஸ்டுன்னு திட்டியாச்சு
அன்னை தெரசாவ திட்டியாச்சு வேற யாருடா கிடைச்சான்னு பார்த்தா நம்ம சிவாஜி கிடைச்சார் நடிப்புக்குன்னு அகில உலக அளவில் தமிழர்கள் தலைநிமிர்ந்து சொல்லிகிறமாதிரி ஒரு நடிகர் இருந்தார்னா அது சிவாஜின்னு சின்ன புள்ளகூட சொல்லும் .

அவரு நம்ம காங்கிரசில் இருந்தது அவரது கலை வாழ்க்கையின் சாதனைகளை காலில்போட்டு மிதிக்க ஏதுவாப்போச்சு நம்ம புதியகலாசார தோழர்களுக்கு .

//ஆகவே சிவாஜி கற்றுக் கொணடு நிகழ்த்திக் காட்டிய ஸ்டைலாக – புகைவிடுவது, கம்பளியுடன் இருமுவது, தலையைப் பிய்த்து நிம்மதி தேடுவது, தரை அதிரவோ – நளினமாகவோ நடந்து வருவது போன்ற ஜோடனைகளுக்கும், சர்க்கஸ் வித்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. சீனியர் சங்கராச்சாரியையப் பார்த்து அப்பராக நடித்ததைப் பெருமையுடன் குறிப்பிடும் சிவாஜி, தனது வித்தியாசமான வேடங்கள் பலவற்றையும் எங்கிருந்து கற்றார் என்பதை எங்கேயும் கூறியதில்லை.//

ஒரு நடிகனை விமர்சிக்கும் முறை பாருங்கள் நடிகராக சிறப்பான முறையில் ஒரு முன்மாதிரியாக இருந்தார் என அவரை போட்டியாக நினைத்த நடிகர்களே ஒத்துகொள்ளும் நிலையில் அவரது நடிப்பு ஒரு சர்கஸ் வித்தை என நையாண்டி செய்கிறார்கள் பு.கவில்

//அதனால்தான் பராசக்தி படத்தில் ஏழைகளின் துன்பத்தை எழுதி பேசிய கருணாநிதி – சிவாஜி ஜோடி, 1981 இல் 'மாடிவீட்டு ஏழை' படத்தில் இலட்சாதிபதியின் துன்பத்தை எடுத்துரைத்தது. அப்போது இருவரும் இலட்சாதிபதிகளாக இருந்தார்கள் என்ற விசயம் அவர்களது கொள்கையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் இருவரும் கட்டிப்பிடித்து அழுதார்கள். எதை நினைத்து அழுதார்களோ தெரியவில்லை!//

பராசக்தி வசனம் எழுதும்போது கருணாநிதி வறுமையில் இருந்தார் . மாடிவீட்டு ஏழையில் அவர்கள் இருவரும் லட்சாதிபதிகளாக இருந்தார்கள் என்பதால் நடிப்பும் அப்படியே தத்ரூபமாக வந்தது .

இப்படித்தான் இவர்களின் அனைத்து அணுகுமுறைகளும் இருக்கின்றன.

ஒரு அனுபவம் மட்டுமே கலையாக வெளிப்பட முடியும் என்கிற கலையை பற்றிய மொண்ணை பார்வை இது .

அப்போ பிச்சைகாரனாக நடிக்க ஒரு நடிகன் பிச்சைகாரனாக அவன் நிஜமாகவே தள்ளப்படனும் என்பது இவர்களது பார்வை .

மொண்ணை மார்க்சியர்கள் என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் தரமுடியாது .

ஒரு அழகான ஓவியத்தை ஒரு பணக்காரன் தீட்டவே முடியாது
ஒரு அழகான கவிதையை ஒரு லட்சரூபா சம்பளம் வாங்குபவனோ ஒரு பிராமணனோ எழுதவே முடியாது அப்படி எழுதினாலும் அது மொக்கை அல்லது சர்கஸ் கோமாளி செய்வது போன்ற ஜோடனை வேலை.

அவர்களது கலையின் உன்னதத்தை தீர்மானிப்பது அவர்கள் இருக்கும் வர்க்க பின்னனிதான் என்பது சாதிரீதியா இளயராஜாவ ஒதுக்கினாங்களே அதைப்போன்றது .


//பால்கனி, பெஞ்சு டிக்கட் என்ற இரு பிரிவையும் கவர்ந்த சிவாஜிக்கு சாதிகளைக் கடந்த ரசிகர்களே அதிகம். இருப்பினும் தேவர் சாதி மக்கள் இருக்கும் ஊர்களில் சிவாஜி மன்றாடியார் – தேவர்மகன் சிவாஜி ரசிகர் மன்றங்களாக இருந்ததை அவர் ஆதரித்தார். 70 – களின் சில படங்களில் 'நான் தேவன்டா' என்று அடிக்கடி வலிந்து பேசி தன் பெருமிதத்தைக் காட்டிக் கொண்டார். இவ்வளவு இருந்தும் பின்னாளில் அவர் ஆரம்பித்த தனிக் கட்சிக்கு டெபாசிட் வாங்கிக் கொடுத்த சில தொகுதிகளில் தேவர்சாதி மக்கள் அதிகம் கிடையாது.//

தேவர் சாதி காரர் என்பதால் தேவர் சாதி ரசிகர்கள் அதிகம் என சிவாஜிக்கு சாதிகாரன் என்ற பட்டத்தை வலிந்து தறுகிறார்கள்

நிஜத்தில் எல்லா சாதிக்காரனும் புகழும் ஒரு நடிகர் என்பதே உண்மை

ஒரு நடிகனாக அவரது நடிப்பு மிக சிறந்ததாக இருப்பதில் இந்த மதிப்பீடு எதுவரை என்றால் நடிகனாக இருப்பினும் அவர் ஒரு மேட்டுகுடி வர்க்கம் எனவே தூற்றுப்பட வேண்டியவர் என சொன்னீர்கள்

என்றால் ஒரே வார்த்தையில் சிவாஜி என்கிற பண்ணையார் ஒரு பெரும் பணக்காரனாக மாறியவர் என்பதை சொல்லிட்டு போக இத்தனை பெரிய கட்டுரை தேவை இல்லை அதுதான் உண்மை

சிவாஜிக்கு நடிக்கவே தெரியாது என சொல்லி அதற்கு சப்பை கட்டாக அவர் நடித்த பாத்திரங்கள் நிஜத்தில் அவர் இருந்த நிலையை சொல்லுதுன்னு ஒரு டுபாக்கூரான சித்திரத்தை தரதேவையில்லை .

நடிப்பில் சிறந்தவனை சிறந்தவன் என சொல்லாமல் இருக்க எத்துணை முயல்கிறீர்கள் அப்படிபார்த்தால் உங்கள் பார்வைபடி இன்னும் சினிமாவே எடுக்கப்படவில்லை இன்னும் நடிகனே பிறக்கவில்லை .

ஒரு கலைஞனை பார்பப்தில் இருக்கும் ஒரு பெரிய குறைபாடாக இதை கருதுகிறேன் மக இகவில் சேர்ந்து பிறகு நடிகனாகி வளரும் ஒரு மொக்கை நடிகனாக இருந்தால் ஒரு வேளை சிவாஜி புகழப்பட்டு இருக்கலாம் என்பது

கலையை அந்த நடிப்பை அந்த உழைப்பை அவமதிப்பதாகும் .

நடிப்பு என்பது ஒரு உழைப்புதானே . ஒரு உழைப்பை இப்படி கேவலப்படுத்த எப்படி உங்களால் முடிகிறது .

என்னவென்றால் அந்த உழைப்புக்கு கொடுக்கும் ஊதியம் அதிகம் என்பதை தவிர
நடிப்பெனும் உழைப்பின் மீது இருக்கும் உங்கள் வெறுப்புக்கு எந்த காரணமும் கிடையாது .

சோசலிச சமூகத்தில் ஒருவேளை நடிகர் திலகத்தின் படங்கள் தடை செய்ய படலாம் அப்போது உங்களுக்கு எப்படி நடிப்பது என்பதை சொல்லி காட்டகூட ஒரு ஆள் இல்லாமல் போகும் .

சிவாஜியின் நடிப்பை நிராகரிக்க முடியாது என்பது மிகப்பெரிய உண்மை அதை சுத்தி வளைச்சு எப்படி சொன்னாலும் சரி


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

22 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post