சென்னையில் ஒரு சிறு வீடு நீங்கள் சுலபத்தில் வாடகைக்கு எடுத்து விடலாம்
பம்பாயில் கூட ஒரு இந்திகாரன் தயவால் வாழ்ந்து விடலாம் அமெரிக்காவின்
சிக்காகோ நகரில் கூட ஒரு பெயிங் கெஸ்டாக வாழ்ந்துவிடலாம் அல்லது பிரான்ஸி்ல் ஓட்டல்களில் வேலை பாத்தால் கூட உங்களுக்கு தங்கும் இடம் தறுவார்கள் .
கோடிகோடியாக புரளும் திருப்பூரில் ஒரு வாடகை வீட்டில் இருப்பது , போலீஸ்
ஸ்டேசனில் தினமும் சென்று கையெழுத்து போட்டு அங்கிருக்கும் ஏட்டையாவை காக்கா புடிச்சு வாழ்வதற்கு சமம் .
நூறு கோடியில் பட்ஜெட் போட்டு கம்பெனி கட்டுகிறார்கள் , சுமார் பல லட்சங்களில் ரோடுகூட போடுகிறார்கள் ஆனால் அதில் வேலைபார்க்கும் தொழிலாளிக்கு பத்து பதினொன்றில் ஒரு ரூமு வேணுமேன்னு எந்த முதலாளியும் நினைப்பதில்லை .
தினமும் நூறு பேர் மஞ்சள் பையில் துணிகளை எடுத்துகொண்டு இறங்குகிறான் வேலை தேடி திருப்பூர் பஸ்நிலையத்தில் .
தனியார்மயமாக்கல் , உலகமயமாக்கள் , மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக,
மதுரை, தஞ்சை , புதுகோட்டை முதல் பீகார் மாநிலம் வரை இருக்கும் தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து சிறு தொழில்களும் விவசாயமும் அழிந்து போனதன் விளைவாக பிழைக்க வரும் இடம் இந்த
திருப்பூர்.
வந்த தொழிலாளிக்கு வேலை கிடைத்தவுடன் ஆரம்பமாகிறாது வீடு தேடும் படலம் திருப்பூர் நகரில் தொடங்குகிறது
முதலாம் குடிநீர், இரண்டாம் குடிநீர் , மூன்றாம் குடிநீர் திட்டம் எல்லாம்
வந்தும் வாடகைக்கு குடியிருப்பவனுக்கு தண்ணீர் குடத்துக்கு இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது
வீடு வைச்சு இருப்பவன் எல்லாம் முதலாளிக்கு மேல திமிரு பிடிச்சவனுக,
இருந்தா இரு இல்லைன்னா இடத்த காலி பண்ணு எனபதே முதலில் வாயில் வரும் வார்த்தைகள் .
இரவு பத்துமணிக்கு மேல லைட்டு எரிய கூடாது ,சொந்த காரன்னு எவனும் ஒரு நாளைக்கு மேல தங்கபிடாது பெற்ற அம்மா ,அப்பாவே பார்க்கவந்தாலும், எப்ப கிளம்புவாங்கன்றதுதான் முதல் கேள்வி .
இங்கே கட்டுகிற வீடுகளே ஒரு கணவன் மனைவி ஒரு குழந்தைக்கு அளவா
கட்டப்படுகிறது ,கட்டுவறவன் என்னமோ கடவுளை போல நடந்துகிடுவான் .
நாம அவனுக்கு தினம் பூப்போடாத குறையா கும்பிடனும்னு நினைப்பு .
பிழைக்கவரும் சனங்கள் ஒரு வீட்டை அப்படியே தூக்கிட்டு இங்க வரமுடியாது
அதனால் இங்க இந்த பயலுக வைத்ததுதான் சட்டம். சுமார் இருபதாயிரம் முப்பதாயிரம் அட்வான்ஸ் வாங்கப்படுகிறது (நேர்மையாக திருப்பி செலுத்தபடுகிறதா என்பதை ஆய்வு செய்துதான் கண்டு பிடிக்கனும்)
காலி செய்யும் போது அடுத்த ஆள் வந்தால்தான் தறுவார்கள்
அதுவரைக்கு பேச முடியாது .
ரொம்ப பேசினால் காலிசெய்ய வேண்டியதுதான் .முதலாளி மார்கள் கம்பெனியில் குத்தினால் வீட்டுகாரனுக வீட்டில் குத்துவானுக .
தொழிலாளர் சங்கம் வீட்டு பிரச்சனையில் தலையிடாது அது தொழிற்சாலைக்கு மட்டுமே தலையிடும் (ஆமா எல்லாம் தனிதனியா போராடனும் சிபிஎம் சிபிஐன் தாரக மந்திரம்)
அப்போ வீட்டு பிரச்சனைக்கு யார் தலையிடுவா யாரும் தலையிட முடியாது
வீடு வைச்சு இருப்பது , நாயக்கர் , கவுண்டர்னு சில பெரிய சாதிகாரனுக
போலீஸ் ஸ்டேசனில் அவனுக செல்வாக்குதான் அதிகம்
அப்புறம் இந்த தொழிற்சங்கத்தில் இருக்கும் தோழனுக்கெல்லாம்
பத்து காம்பவுண்டு இருபது காம்பவுண்டுன்னு இருக்கும்போது
அவர்கள் வந்து அப்பாடி தொழிலாளருக்கு பேசுவார்களா?
புரட்சி வந்து தொழிற்சாலைகளை கைப்பற்றுகிறார்களோ இல்லையோ
இந்த வீடு கட்டி வாடகைக்கு விடும் வீட்டுகாரனின் காம்பவுண்டுகளை கைப்பற்றனும்.
அதெல்லாம் நடக்கும் போது பார்த்துகிடலாம் இப்போதைக்கு
சோகத்தை சொல்வதை தவிர வேற என்ன வழி இருக்குன்னு நினைக்கிறீங்க
உங்க ஊரில எப்படி .
வாடகைக்கு குடியிருப்போர் சங்கம் எப்போ ஆரம்பிக்கலாம்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================