புதிய பதிவர்களே

நிச்சயமா தெரியும் அவர் ஒரு அனானின்னு நான் ஒரு பதிவு போட்டவுடனே வந்து என்னய்யா தியாகு நீ அந்த மாவோஸ்டுதானே திருப்பூரில் குப்பை கொடுபவந்தானே என்கிற ரேஞ்சில் வந்து வசைமாரி பொழிந்து செல்வார் அவர் பெயர்" பாலா "

அடுத்து இன்னொரு அனானி கெட்ட வார்த்தையில் திட்டுவார் -அது பார்பன
எதிர்ப்பு போடும்போது மட்டும் மற்றபடி அனானிகள் தொந்தரவுன்னு எதுவும் இல்லை (ஒரு வேளை நடப்பு சூழ்நிலைகள் பார்க்கும் போது அனானி ஆபத்து எனக்கு இருப்பதாக சொல்கிறார்கள் )

அரசியலப்பாரு எனது பெயரை கேட்காதே என சொல்வது எனக்கு எப்போதுமே
உவப்பானதில்லை .

மக்களிடம் போகிறோம் என சொல்பவர்கள் சொந்த பெயரில் போகலாம் என நினைக்கிறேன்

எனக்கு இதில நம்பிக்கை இல்லை நான் தியாகு என்ற பெயரில் எப்போதும்
இயங்கி வந்துள்ளேன் .

மக்கள் - அரசு - அரசியல் இந்த தளங்களில் பதிவுலகம் என்பது மெய்யுலகம் இல்லை என சொல்பவர்கள் ஏன் அதில் இயங்க வேண்டும்

இயங்குவது உண்மையானால் ஏன் பெயரை மறைக்கவேண்டும் சரி

பெயரை மறைப்பது புரட்சிகர அரசியல் என்றால் பதிவுலகம் மெய்யல்ல
என ஏன் சொல்ல வேண்டும் .

முன்னுக்கு பின் முரணானதன்மை தெரிகிறது .

இவர்களை தவிர அனானிகள் என்பவர்கள் தனக்கென்று ஏதும் பதிவில்லாம
இயங்குபவர்கள் . எனவே அனானி ஆப்சனை உபயோகித்து பதில் போடுபவர்கள்

மேலும் பதிவு இருப்பவர்களே ஒரு முரண்பாடான இடத்தில் தேவை இல்லாத
கமெண்டை அனானியா போட்டு விடுவார்கள் .

இப்படி அனானிகள் பலவகைப்படுவார்கள் ..

அன்பாக கண்டிக்கும் அக்கறையுள்ள அனானிகள் , திட்டும் அனானிகள்
பாராட்டும் அனானிகள் , திரித்துவிடும் அனானிகள் . பொய்யை உண்மைபோல\
பேசும் அனானிகள் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்

புதிய பதிவர்கள் இந்த அனானிகளை கண்டு அஞ்சி நடுங்கி உதறலெடுக்க
வேண்டியதில்லை

அப்புருவுடு பெற்றபின் வெளியிடும்படி தனது செட்டிங்கை வைத்து கொள்ள வேண்டும்

மேலும் பதிவுலகில் ஒருத்தரின் கருத்தை பெரிசா எதிர்பார்த்து எதையும்
எழுத தேவை இல்லைன்னு நினைக்கிறேன் .

கமெண்டு போடுபவர்கள் கல்வி பின்புலம் , அவர்களின் சமூக பார்வை
அவர்கள் விரும்பும் விசயங்கள் என பல வகையான பின்புலத்தோடு
அவர்களை அனுகலாம் அவர்கள் அனானிகளாக இல்லாத பட்சத்தில்
அனானிகள் விசயத்தில் இதையெல்லாம் எப்படி கண்டு கொள்வீர்கள்

மொத்தமாக ஒரு நிலைப்பாடு வாழ்த்துகிறாயா நன்றி

திட்டுகிறாயா அதற்கும் நன்றின்னு சொல்லிட்டு போயிகிட்டே இருக்கனும்

ஒரு முறை எனக்கும் அதியமானுக்கு அரிவால் தூக்கும் அளவுக்கு சண்டை
வந்தது இதை மூட்டி விட்டது அனானி என்பது பிற்பாடு தெரிந்தது
(உபயம் டோண்டு இராகவன் )

அதனால் அனானிகள் தவிர்க்க முடியாத அங்கம்
ஒரு முறை தமிழ் மணம் காசி சொன்னார்

அனானிகள் சொல்வது பலநேரங்களில் சரியான கருதாக இருக்கும்
ஒரே அடியா மறுத்துட கூடாதுன்னு

அதுவும் உண்மைதான்

பதிவர்களை உருவாக்குகிறோம் என்பதால் அனானிகளையும்
உருவாக்குகிறோம் என்பதாகவே அர்த்தம்

ஆனால் அனானி செய்தி என்பது மொட்டை கடுதாசி போலவே
ஒரு நேர்மையற்ற செயலாக அனானிகள் உணர்ந்து கொள்ளனும்

ஒரு கருத்தை சொந்த பேரை போட்டுத்தான் வெளியிடமும் இது
தார்மீக ரீதியானது
அனானியா வந்தாலும் ஆக்கபூர்வமா பேசனும் இது நேர்மையானது

திரித்து விட அனானி ஆகாதீர்கள் இது வேண்டுகோள்

ஆகவே அனானிகளை பற்றி தெரியாமல் ஆற்றுக்குள் இறங்காதீர்கள்


அனானிகள் பற்றி ஒரு நண்பர் இப்படி குறைபட்டுள்ளார்:
நன்றி :
bloggun.wordpress.com

நாளுக்கு நாள் அனானிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கம்பியூட்டர் உலகை வைரஸ்கள் தாக்குவது போல பதிவுலகில் அனானிகள். இவர்களின் தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். இதுவரை அவர்களுக்கு பிடிக்காத பதிவர்களையும், பிடிக்காத பதிவுகளையும் தாக்குதல் நடத்தி வந்தார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாக ஒருசில அனானிகள், பிரபல பதிவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அந்த பிரபல பதிவர்களால் அனானிகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனபது அனைவருக்கும் தெரிந்த விடயம். அப்படி இருக்கும்போது, பிரபல பதிவர்களை ஏன் அவர்களை தாக்கவேண்டும்?

இந்தவித தாக்குதலால், நல்ல எண்ணங்களை, தரமான கருத்துக்களை, உண்மையான செய்திகளை, வழ்க்கைக்கு தேவையான வாழ்வியல் முன்னேற்றங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த பதிவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் என்று தெரிகிறது. அனானிகளின் செயலால் எல்லா பதிவர்களும் சில் பிரபல பதிவர்களின் நல்ல தரமான பதிவுகளை படிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.

எந்தவிதமான எதிர்பார்ப்புக்களும் இல்லாமல், நல்ல பதிவுகளை கொடுக்கும் பதிவர்களை தாக்குவதால் இந்த அனானிகளுக்கு என்ன பயன்?
அனானிகள் யார்?
இவர்களின் லட்சியம் என்ன?

இவர்களுக்கு எந்தவிதமான லட்சியமோ / குறிக்கோளோ கிடையாது. இவர்களுக்கு நினைப்பது எல்லாம் மற்றவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும். இதனால், இவர்களுக்கு பயனும் கிடையாது.

யார் இந்த அனானிகள்?

யார் இந்த அனானிகள்? என்று ஆலசி ஆராயும்போது பலவகையான உண்மைகள் வெளிவருகிறது. இவர்கள் ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டவர்கள், திறமையில்லாதவர்கள், எதிர்த்து நின்று வாதம் செய்யும் தைரியம் இல்லாதவர்கள், பொறாமை கொள்பவர்கள், அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள், மனிதனாக உடலளவில் இருந்தும் மனதளவில் 5 அறிவுள்ள விலங்குகள் என்ற தகவல்கள் வெளிவருகிறது. இதன் மூலம் இவர்களை ‘மனநோயளிகளின்’ என்று கூட சொல்லலாம்.

அனானிகளின் லட்சியம் என்ன?

இந்த மனநோயாளிகளுக்கு லட்சியம் எல்லாம் கிடையாது. இவர்களால் முடியாத ஒரு விடயத்தை, வேறு யாரவது செய்யும் போது வெறுப்பு ஏற்படுகிறது. தங்களுடைய எரிச்சலை வெளிப்படுத்த அனானியாக மாறி பின்னூட்டம், மெயில் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதனால், இவர்களுக்கு அற்ப சந்தோஷம் கிடைக்கிறது. மற்றவருடைய வெறுப்பில் ஆனந்தப்பட்டு குளிர்காயும் ——————கள்.

அனானிகளை என்ன செய்யலாம்?,

1) அனானிகளிடம் இருந்து பின்னூட்டம் / மெயில் போன்றவைகள் வந்தால், அதை பொருட்படுத்த்க் கூடாது. பதிவர்கள் எந்தவித மன உளைச்சலுக்கும் ஆளாகவேண்டாம். தெரு ஓரத்தில் பைத்தியக்காரன் ஒருவன் இருந்தால் நாம் பரிதாபப் படுவோம். அதோபோல, இவர்களைப் பார்த்தும் பரிதாபப் படவேண்டும். ஏனென்றால், இவர்களும் அந்த பைத்தியக் காரன் போல மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

2) பதிவர்கள் பதில் பின்னூட்டம் இடவேண்டாம். திறமையில்லாத மனநோயளிகளாக உள்ள இந்த அனானிகளுக்கு நேரத்தை செலவு செய்யவேண்டாம். அவ்வாறு செய்யும் போது நமது தரமும் குறைந்து விடும் அல்லவா.

3) அனானிகள் இடும் பின்னூட்டங்களை அவர்களுடைய ஐ.பி முகவரியை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாம். அப்படி கண்டுபிடித்து விட்டால். அவர்க்ளை ஒண்றும் செய்யவேண்டாம். கீழ்ப்பாக்கம் அல்லது ஏர்வாடிக்கு ஒரு ரூபாய் செலவு செய்து போன் போட்டு தெரியப்படுத்தவும். மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

4) பதிவுர்களே உங்களுடைய நன்பர்கள் / தெரிந்தவர்கள் யாராவது அனானியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்குத் தெரியாமல் மனநிலை மருத்துவரை அணுகி வைத்தியம் செய்ய ஏற்பாடு செய்யவும். பாவம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள், பைத்திங்கள் அப்படித்தான் செய்யும் என்று நமக்குத் தெரியும் அல்லவா.

அனானிகளுக்கு :

நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். பைத்தியங்களை தங்களை பைத்தியங்கள் என்று ஏற்றிக்கொள்ளாது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லவேண்டியது கடமை. நல்ல மனநிலை மருத்துவரை அணுகி உங்கள் நோயைக் குணப்படுத்தவும்.















--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

11 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post