காலை பொழுது என்றாலே எட்டுமணிவரை மெதுவாகவும் பிறகு நான்காவது கியரில்
பறக்கும் வண்டி போலவும் நேரம் வேகமெடுக்கும் .
அதுவரை தினமலரின் விளம்பரம் முதல் டீக்கடை பெஞ்சுவரையிலும் படித்து வரும்
எனக்கு எட்டு அடித்தால் சட்டை தேய்க்காதது , வண்டிக்கு பெட்ரோல் போடாதது
எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்கும் .
வெளிநாட்டில் எல்லாம் வீட்டில் இருந்தே வேலை செய்றாங்களாம் அதெல்லாம்
இங்க வரப்பிடாதா? என்னை போல இருக்கும் ஆட்கள் இங்கேயே வீட்டில்
உக்கார்ந்து லுங்கியை கட்டிட்டு அப்பப்போ குழந்தைகளை கொஞ்சிண்டு வேலை
செய்யலாமே :)
இந்த ஊர் முதலாளிகள் அப்படி வேலை செய்யவிட்டாலும் வீட்டுக்கு ஒரு
செக்யூரிட்டி போட்டுடுவான்கள் .
ஆபிஸ் என்றது ஞாபகம் வந்தது அங்கிருந்து ஒரு பையில் கொண்டு வந்தேனே
எங்க அதுன்னு ஒரே பதட்டத்தோடு வைத்த இடத்தில் காணாமல் இருக்கவும்
தேடும் அவசதில் விழுந்தது ஒரு பெரிய அட்டை பெட்டி .
டமார் என்ற பெரிய சத்தம் கேட்டதும் அடுத்த ரூமில்
இருந்த கனகா ஓடி வந்தாள் .
"வைச்சா வச்ச இடத்துல எதாவது இருக்குதா "
"என்ன வச்சீங்க இப்படி எல்லாத்தையும் தள்ளி விடுறீங்க"
"ஏய் என்னோட ஆபிஸ் பைல் எங்கடி "
குழந்தை வைச்சு இருந்தா பார்த்தேன்
என்ற கனகாவுக்கு விழுந்தது கன்னத்தில் ஒரு பளார்
என்ன தெணாவட்டு இருந்தா ஆபிஸ் பைல குழந்தைக்கு
விளையாட கொடுப்ப
இல்லைங்க பார்த்தேனு சொன்னேன்
கண்களின் வழியும் கண்ணீரை துடைத்தபடி
மறுபடி அடிப்படிக்கு போய்விட்டாள்
அம்மா அம்மா பைல பாத்தியா
நாந்தான் வாங்கி வைச்சேன் அதுக்கேண்டா அவளை போயி அடிச்ச
சும்மா அவளுக்கு சப்போர்ட் செய்யாதம்மா
கிசு கிசுக்கும் குரலில் அம்மா அவளுக்கு போட்டது நல்லதுதான்
இப்போ வரவர திமிரு அதிகமாகிடுச்சு சரி சரி போ
நான் பேசிக்கிறேன் ..
கனகா நல்ல பெண்தான் ஆனால் எதையும் பொறுப்பா
செய்வதில்லை என்பது எனது கருத்து .
அதற்கு அடி உதைதான் சரி என்பது என் அப்பா காலத்தில் இருந்து
வரும் பழக்கம் இந்த அம்மாவும் அவரிடம் நிறைய வாங்கித்தான்
இப்போ சமத்தா இருக்குன்றது என்னோட கருத்து ..
இப்பவும் அம்மா அவளை அடிக்கையில் எனக்கு சப்போர்ட்
செய்வது அவரால் அடிக்க முடியாதென்பதாலும் நான் ஆம்பளை தனத்தை
அடிப்பதன் மூலம் காட்டும் போது வெளியே அவளை சப்போர்ட்
செய்வது போல நடித்தாலும் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி அம்மாவுக்கு
ஆனால் பாவம் கனகா அடி வாங்கி அந்த நேரம் அழுதாலும்
பிறகு காப்பி கொண்டு வந்து தறுகிறாள் .
பாவம் இந்த ஜீவன் என்று கையை பிடித்தாள், உதறிட்டு போயிட்டாள்
இப்படி பெண்களை அடிப்பதை எவன் சொன்னவன் என
எனக்கு நானே கேட்டு கொண்டு தோணிய பச்சதாபத்தை அடக்கிட்டு
ஆபீசுக்கு கிளம்பி போயி ஒரு அரை மணி நேரத்தில் அழைப்பு வந்தது
தங்கச்சி ஊரில் இருந்து வந்து இருப்பதாகவும் அரைநாள் லீவு போட்டுவிட்டு
வரவேண்டும் என்றும் அம்மாவின் அழைப்பு .
அலுவலகம் இருப்பது திருவல்லிகேணி வீடு இருப்பதோ மைலாப்பூர் எப்படி
உடனே போறது .
பஸ்ஸ பிடிச்சு வீடு போறச்ச தங்கச்சி உக்கார்ந்து அழுகிற காட்சிதான்
தெரிந்தது .
எப்படும் இந்நேரம் அழுகாச்சி சீரியலை பார்த்துட்டு இருப்பார் அம்மா
இன்று மாற்றாக தங்கையின் உண்மை அழுகாச்சி
என்னம்மா ஏன் அழுகிறா ?
புருசன்காரன் அடிச்சிட்டானாம்டா ?
ஏன் அடிச்சானாம்
இவ தனிகுடித்தனம் போகலாம்னிருக்கா அதுக்கு என்ன சொல்லனும்
இஸ்டம்னா வரனும் இல்லைன்னா இஸ்டமில்லைன்னு சொல்லிடனும்
அத விட்டுட்டு இப்படி அறைந்தால் நியாயமா ?
இதை விடப்படாதுடா செளந்தரு உடனே அவனுக்கு போனப்போடு
அம்மா பேசி முடிச்சிட்டியா ?
எல்லாம் சரியா போயிடும் பொறு மாப்பிள்ளை
வந்து கூப்பிட்டு போவார் என சொல்லவும் தங்கை
இன்னும் அதிகமாக தேம்பவும் உள்ளே சென்று விட்டேன்
அடச்சே இதுக்கு போய் ஆபிசில் இருந்து வந்தமேன்னுதான்
வழக்கம்போல கனகா எனது லுங்கியை எடுத்து தரவும்
குடிக்க மோர் தரவும் என விசயத்தை கண்டுகிடாத மாதிரியே
திரிஞ்சா
ஏன் கனகா "இதப்பத்தி உன்னோட கருத்த சொல்லவே இல்லை"
என்னங்க சொல்றது
பொண்டாட்டிய அடிக்கிறவன் கூடயும் வாழ்ந்துதானே ஆகனும்
என்றாள்
சாதாரணமாகத்தான் சொன்னாள் கனகா இருந்தாலும்
எனக்கு வாழ்ந்த்துதானே ஆகனும் என்பதை
கொஞ்ச உறக்க சொன்னதாக பட்டது .
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Tags
சிறுகதை