பதிவர்கள் சங்கம் ஏன் அவசியம்

இது நாள் வரையிலும் இல்லாத ஒரு மிரட்டலை ஒரு சில அமைப்புகளால் பதிவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

இதை எழுதலாம் இதை எழுத கூடாது என அடிப்படை மதவாத கும்பல் முதல்
கம்யூனிசம் பேசும் நபர்கள் வரை ஒரு அதிகார போக்கை கையில் எடுத்து வருகிறார்கள்

ஐம்பது பேர் சேர்ந்து தனிப்பட்ட ஒரு பதிவரை மிரட்டுதலும் எழுதி வாங்குதலும்
எளிது அந்த இடத்தில் அந்த மனிதன் தான் சொல்ல விரும்புவதை சொல்ல முடியாத சூழலில் அல்லது அவன் சொல்வதை யாரும் ஏற்காத சூழலில் தான் சொன்னது தவறுதான் என மன்னிப்பை கோருகிறான் .

அவனது அடிப்படை கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறதை எல்லாரும் பார்த்து கொண்டு சும்மா இருப்பதா ? என்பதே எனது கேள்வி .

ஒரு பதிவர் எழுதியது எங்களது மனதை வருத்தம் கொள்ள செய்கிறது என்றால்
முறையாக விளக்கம் கேட்கவேண்டும் அதற்கு முறைப்படி பதிந்துள்ள சங்கத்துக்கு (சங்கம் அமையும் பட்சத்தில்) கடிதம் அனுப்ப வேண்டும் .

அங்கே வைத்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் அல்லது எழுதிப்பெற வேண்டும் என நினைக்கிறேன் (இதில் மாற்று கருத்து இருந்தால் சொல்லலாம்)

இதுவரை நடந்து முடிந்த விசயங்களை மீண்டும் சொல்லி நீ ஏன் அன்னைக்கு
இதை சொல்லவில்லை என சொல்லி மீளா விவாதத்துள் போவது சரியல்ல

ஒரு விரிவான விவாதம் நடத்தப்பட்டு முதலில் தமிழ்நாட்டளவில் ஒரு சங்கத்தை பதிவர்கள் பதிவு செய்ய கோருகிறேன்.

தியாகு என்பவர் என்னை திட்டி விட்டார் என ஒரு நபர் போய் போலீசில் புகார்
கொடுக்கும் முன்பு சங்கத்துக்கு வந்து தெரிவிக்கட்டும் முடியாத பட்சத்தில் போலீசுக்கு போகலாம்.

சங்கம் என்பது கட்ட பஞ்சாயத்து அமைப்பாக இருக்காது . கருத்து சுதந்திரத்தில் தலையிடாது.

ஆனால் தனிமனிதனை மிரட்டும் போக்கை கட்டாயம் தடுத்து நிறுத்தும்
கும்பலாக அராஜகத்தில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கும்.

இதை தனிநபராக யாரும் செய்ய முடியாது முறையான அமைப்பின் மூலம்
பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் மூலமே செய்ய முடியும் என நினைக்கிறேன்

மூத்த பதிவர்கள் குழலி , ரோசா வசந்து , அசுரன் ,சுகுணா திவாகர், மற்றும் வளர்மதி ஆகியோரின் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன் .

வலைபதிவில் எழுதவே அஞ்சும் நிலமை மாற்றினால்தான்
பல்வேறு கருத்துக்கள் உருவாகும் , சிந்தனை விஸ்தாரப்படும்

அது அரசியல் ரீதியான ஒடுக்குதல்களை எதிர்த்து நிற்கும்


மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் .

குறைந்த பட்சம் ஏழு நபர்கள் இருந்தால் பதிவு செய்து விடலாம் .










--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

58 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post