சிந்தனையில் குடிகொண்டுள்ள இயக்க மறுப்பியல்

இயக்கத்தில் உள்ளவை எல்லாமே மாறிக்கொண்டு இருக்கிறது என்கிறது
இயக்கவியல் . ஆனால் மனிதனோ பதினெட்டாம் நூற்றாண்டுவரை
இயக்க மறுப்பியல் சிந்தனையிலேயே வாழ்ந்து வந்துள்ளான்
அவனது மதம் , கல்வி , அரசு எல்லாமே இயக்க மறுப்பியலை
சொல்வதாகவே இருக்கிறது .

எல்லாம் மாறினாலும் தனது கடவுள் மாறமாட்டார் என வாதிடுகிறான்
காண்பவை எல்லாமே அப்படியே ரெடிமேடா தைத்து வைத்த
ஆடைகள் போலவே இருப்பதாக கற்பனை செய்கிறான்.

மனிதனை ஒரு வாரத்தின் கடைசிநாளில் கடவுள் படைத்துவிட்டதாக
சொல்கிறது அவனது மத புத்தகங்கள் .

ஆனால் அறிவியலின் வியத்தகு வளர்ச்சி இயந்திர இயக்கவியல் , ஜீவ ராசிகளை
பற்றி டார்வினின் ஆராய்ச்சி எல்லாம் உலகம் என்பது யாரோ ஒருவரால்
ஒரு குறிப்பிட்ட எஜண்டாவால் படைக்கப்பட்டதல்ல என முகத்தில்
அறைந்தால் போல சொல்லியது .
ஆராய்வதற்கோ தர்க்கம் செய்வதற்கோ மதவாதி உக்காருவதில்லை
"நம்பிக்கையை " கேள்வி கேட்காதே என்று சொல்லிவிடுவான்.

கிணற்றுக்கு பக்கத்தில் கோவில் வைத்திருக்கும் பூசாரி முதல்
மத அடிப்படையில் கட்சி நடத்தும் ஆன்மீகவியாதிகள் வரை
அனைவரும் சொல்வது நம்பிக்கையின் மேல் கேள்வி கேட்காதே
என்பது தான்

"அந்த காலத்துல நாங்க வாத்தியார கண்டா ஒன்னுக்கு விடுவம்டா
இப்ப நீங்க வாத்திரா எதிர்த்து தைரியமா பேசுறீக"

" அப்பல்லாம் விலைவாசி இம்புட்டா வித்துச்சு , இப்ப கடைக்கு
போயி புளி கேட்டா நாக்க நீட்டு தடவி உடுறேன்கிறான் "

என்பதாக அன்றாட வாழ்வில் இயக்க மறுப்பியல் சிந்தனை கொட்டி
கிடப்பதை காணலாம் .

காலம் என்பது உருண்டு ஓடும் என்பதை ஒத்து கொண்டு மற்றவை
மாறாமல்தானே இருக்க வேண்டும் என நினைக்கும் அப்பாவி சிந்தனை இது.

இடம்,பொருள் ,காலம் என்பதெல்லாம் அறம் , வீடு , இன்பத்தால் மாறாமல்
இருக்க செய்ய முடியாது .

ஜாதி பிடிமானம் கூட இயக்க மறுப்பியல் சிந்தனையின் வெளிப்பாடே
இந்த சாதிக்காரன் காலம் காலமா இப்படித்தான் இருப்பான் என சொல்வதும்
சரி . சாதி அடிமைத்தனத்தை கட்டி காக்க சாதி சங்கங்களை இவர்கள் உருவாக்கும்வதும் சரி . அதே பண்ணயார்தனத்தை வைத்து கொள்ள இயக்க மறுப்பியல் சிந்தனை வகைப்பட்ட எண்ணம்தான்.

அன்று நாம் பண்ணையாராக இருந்தோம் இன்றும் அதே பண்ணையார்தனத்தை
தொடர நமக்கு கட்சி தேவை என கிளம்பி இருக்கிறது இன்றைய சாதி சங்கங்கள்.

கல்வியும் தொடர்ந்து ஏற்படும் வளர்ச்சியை உள்வாங்கி வளராமல் அப்படியே
இருக்கிறது . இன்னும் ஐடிகளில் வேலைகிடைக்காத படிப்புகள் சொல்லிதரப்பட்டு மாணவர்கள் வெளியேறுகிறார்கள் .கல்வி ஒரு அதிகாரத்தின்
அடிப்படையில் சொல்லித்தரப்படுகிறது . மாணவனுக்கு அடிக்கிடைக்கும்
என்பதாலேயே படிக்கிறான் . இந்த பயமுறுத்தல் கல்வி , மனப்பாட கல்வி
உருவானது நூற்றாண்டுகளாகியும் இன்னும் மாறவில்லை .
ஒரு மலர் மலர்வதை போல கல்வியானது மலர்வதில்லை .

ஆக்சிசனும் தயாரிப்பை வெறும் காகிதத்தில் படிக்கும் மாணவன் கிளித்து போட்டுவிட்டு அடுத்த கிளாஸ் போய் விடுகிறான் .
கல்வியில் இயக்கவியல் பாடமாக இல்லை . இயக்கம் அதன் விதிகள்
பாடமாக இருக்கிறது ஆனால் தத்துவார்த்த ரீதியில் இயக்கம் சொல்லி தரப்படுவதில்லை . இயற்பியல் , வேதியல், உயிரியல் என தனித்தனியாக
பிரித்து சொல்லித்தரப்படும் அறிவியல் .

இவை எல்லாம் உலகில் தனித்தனியே நடப்பதில்லை என்றும் உணவு செரிமானத்தில் வேதியலின் செயல்பாடு செறிக்கவைக்கிறது என்றால்
இயற்பியலின் செயல்பாடு சாப்பிட்ட உணவு கீழே வர புவீஈர்ப்பு விசை
பயன்படுகிறது என முழுமையாக விளக்குவதில்லை.

சமூகத்தில் அறிவியல் எப்படி பயன்படுகிறது என்பது சொல்லித்தரப்பட்டாலும்
மறைக்கப்பட்டே சொல்லப்படுகிறது . சமூகம் மாறி வந்து இருப்பதையும் ஏன்
மாறியது என்பதற்கான விதிகள் என்னவென்பதையும் சொல்லிதரப்படுவதில்லை.

இடத்திற்கேற்ற அறம் , வீடு , இன்பம் எல்லாம் மாறி வருகிறது .
இயங்கிகொண்டு இருக்கும் புரோட்டோ பிளாசம்தான் மனிதன்
என்பதை நானே நம்ப மாட்டேன் .

நான் இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன் என்பதாகே
இந்த நானை நீட்டித்து வைக்கும் இயக்க மறுப்பியல் சிந்தனை
எல்லா மனிதனிடமும் ஊடுறுவி இருக்கிறது .

"முரண்பாடுகள் இல்லாத பொருள் இல்லை அந்த முரண்பாடுகளே
பொருள்களை இயக்கும் இயக்க சக்தி "

மதம் இதை மறுக்கிறது இயக்கத்துக்கு காரணம் வெளியில் இருந்து
வந்த ஒரு சக்தி என்கிறது .

திரும்ப திரும்ப ஒரு இயக்கம் நிகழ்கிறது என சொல்லி
இயக்கத்தை சுருக்கி பார்க்கிறது இதுவும் இயக்க மறுப்பியலே

ஏற்கனவே இருக்கும் இயக்க மறுப்பியல் சிந்தனை போக்கில்
வரும் மாணவன் பார்வையில் மதம் அப்படியே உக்கார்ந்து விடுகிறது
கல்வி கற்றதனால் எவனும் இயக்கவியல் சிந்தனையாளனாக
உலகை முழுமையான இயக்கமாக புரிந்து கொண்டவனாக மாறுவதில்லை
ஏன் என இப்போது புரியலாம்.

இலங்கையில் சண்டை நடந்தது , அது முடிந்து விட்டது இனிமேல்
தமிழ் ஈழ பிரச்சனை வராது என்கிறான் இயக்க மறுப்பியல் வாதி

ஆனால் இயக்கவியல் வாதி அதை ஏற்று கொள்வதில்லை மறுபடி
அந்த பிரச்சனை வரத்தான் செய்யும் ஆனால் முற்றிலும் வேறு
தளத்தில் வேறு வடிவத்தில் பிரச்சனை , அல்லது போர் என்பது
நடக்கும் என்கிறான்.

வேலைக்கு போறோம் சாப்பிடுகிறோம் , பெரிசா ஒரு மாற்றமும்
வராது என்கிறான் அற்பவாதியாகிய அன்றாட வாழ்க்கையை நீட்டித்து
செல்லும் ஒரு மனிதன்.

ஆனால் சமூகத்தை ஆராய்கிற இயக்கவியல்வாதி அதை ஏற்றுகொள்வதில்லை
நண்பனே " நீ வேலைக்கு போனாலும் " ஒரு நாள் கூலி கிடைக்காமல்
இருப்பாய் அப்போது நீ சிந்திப்பாய் என்கிறான்.

இயக்க மறுப்பியல் சுத்த சோம்பேரிதனத்துக்கு சிந்தனையை கொண்டு
சென்று விடும் . அது மாற்றத்தை எப்படியாது தள்ளி போட பழகும்
மாற்றத்தை வெறுக்கும் , மாற்றத்து முகம்கொடுக்காமல் தப்பித்து
போகும் அந்த மனம் .

இவ்ளோ நாள் என்ன செய்தேனோ அதை செய்கிறேன் .
என் தகப்பன் என்ன செய்தானோ அதை செய்கிறேன்
ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே எனது வாழ்க்கை
முடிக்கி விடுப்பட்ட ஒரு இயந்திரம் போல .

ஒவ்வொரு நாளும் வீட்டில் இருக்கும் வயதானவர்களால்
போதிக்கப்படுவது இயக்க மறுப்பியல் சிந்தனையே

ஏட்டில் காலண்டரில் வருடம் மட்டும் மாறும் ஆனால்
வாழ்க்கை , சிந்தனை , பொருள் , மனநிலை , வேலை நிலமைகள்
உறவுகள் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது

ஐம்பது வருடத்துக்கு முன்பு எழுதிய நூலை அல்லது நூறாண்டுகளுக்கு
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூல் வேதவாக்காக
வேதமாக எந்த ஒரு பரிசீலனையும் இன்றி படித்து ஓதப்படுவது
ஏற்று கொண்டு சண்டைக்கு நிற்பது மதவாதிகளிடம் காணலாம்


அதை கண்டும் காணமல் செல்லும் போக்கை பொது மக்களிடம்
காணலாம் இதற்கு காரணம் இயக்க மறுப்பியல் சிந்தனையே .

அவர்கள் சொல்லும் கடவுளே இருந்தாலும் எப்படி மாறாமல்
இருப்பார் என்கிறான் இயக்கவியல்வாதி ..

நமது சிந்தனை, கல்வி முறை , வாழ்க்கை ,சூழல் எல்லாமே மாறிக்கொண்டு
இயக்கத்தில் உள்ளதை உணருபவன் அந்த இயக்கத்தில் வடிவத்தை
அதன் விதிகளை புரிந்து கொள்பவனுக்கு மட்டுமே வாழ்க்கை மட்டும்படும் .

இயக்கமறுப்பியல் வாதி பிழைக்கிறான் வாழ்வதில்லை .

நேற்றைய நாளின் கண்ணைகொண்டு இன்றைய புது நாளை
பார்கிறான் .











--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post