பாசத்தை அள்ள முடியாத பணம்

மெல்லியதாக நினைவில் இருக்கிறது அத்தை என்னை தூக்கி வளர்த்தது
அந்த வீடு மாமாவின் சைக்கிள் அதை ஓட்டும்போது கீழே விழுந்து கை உடைத்து கத்துகிட்ட சைக்கிள் என சிறுவயது நினைவு அள்ளி கொண்டு போகும் மலை பகுதியான அந்த வறண்ட மண்தரையில் விளையாண்ட கபடி
வெற்றி தோல்வியை மீறி கிடைத்த நண்பர்கள் .

அத்தை வீடு என்றால் அம்மாவின் வீடுதான் எனக்கு

இந்த வருடம் தீபாவளிக்கு கண்டிப்பா போகனும் என நினைத்து
போய்விட்டேன் . தீபாவளி வந்ததை விட என் வரவு அத்தைக்கு
சந்தோசம் தந்து இருக்கும் அதிகமா .

வழக்கம்போல் கட்சி புத்தகத்தை புரட்டியபடி மாமா ,
நீண்ட தாழ்வாரத்தில் என் வரவை பாத்ததும் ஓடி வந்த அத்தை
வாடா என சொல்லுகையில் மனதில் ஏற்படும் பாச உணர்வு
எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத அன்பு அது

"முனியாண்டி, டேய் அவங்க வீட்டுக்கு போகதடான்னு எத்தனை தடவை சொல்றது "

அத்தை வீட்டுக்கு போய் வந்ததும் ஆரம்பித்த அம்மாவின் பேச்சு இதுதான்
அம்மாவுக்கு அத்தையை பிடிக்காதென சொல்ல முடியாது ஆனால்
ஏனோ மாமாவுக்கு கட்சியில் சேர்ந்ததில் இருந்து
போராட்டத்தால் வேலை போச்சு "கம்யூனிசம் " பேசி பிழைக்க தெரியாதவரானார் மாமா .

ஏழ்மை அவருக்கு சுமை அல்ல ஆனால் அத்தை . அவருக்கென்ன வென
வெள்ளை வேட்டியை மடித்து கட்டிகொண்டு எங்காவது கட்சி கூட்டத்துக்கு
போய்விடுவார் . வீட்டில் ஏழ்மையை மீற விடாமல் பாதுகாத்தது அத்தை மட்டுமே

அவர்களது ஏழ்மை கூட ஒரு அழகுதான் எனக்கு

அதிலும் அவர்களது செம்மையான வாழ்க்கை அதிரச்செய்யும் எனக்கு

"ஏம்மா . சொந்த அத்தை வீட்டுக்கு ஏன் போககூடாதுன்னு சொல்ற "

"கஸ்டப்படுறாங்க காசு பணம் கேட்பாங்க, கொடுக்காட்டி பொல்லாப்பு "

"அப்ப கொடுக்க வேண்டியதுதானே "

"இங்கென்ன கொட்டியா கிடக்கு அள்ளி கொடுக்க"

கொடுக்க என்ன இருக்குன்றத விட மனசு வேண்டும் என சொல்ல நினைப்பேன்
அம்மாவுடன் மேலும் முரண்படாமல் பேசாமல் இருந்துவிடுவேன்.

உறவை பணம்தான் தீர்மானிக்கிற உலகில் வாழ்கிறோமா வெறுப்புடன்
உக்கார்ந்து விட்டேன்.

ஐடி கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கும் எனக்கு அத்தைக்கு
கொடுத்து உதவ இஸ்டம்தான் ஆனால் வீட்டில் அனுமதி இல்லை .

அத்தை பொண்ணை பார்க்கனும் என்ற ஆசையையும் அடக்கி கொண்டேன் .

தம்பி நல்லா இருக்கியா இது அத்தை சில நாட்களில்
அவரது போன் வந்தது

நல்லா இருக்கேன் அத்தை நீங்க எப்படி இருக்கீங்க

நான் நல்லா இருக்கேன்பா மக உங்க ஊரிலதான்
மேனேஜரா இருக்காலாம்

தூக்கி வாரி போட்டது "அப்படியா" என்றால்

சம்பளம் என்னைக்காட்டிலும்

இருபதாயிரம் அதிகம்

அந்த வருடம் தீபாவளிக்கு ஊருக்கு போனதும்

அம்மா சொன்ன முதல் வார்த்தை அத்தை பார்த்துட்டு
வாடா சீயம்னா ரொம்ப இஸ்டாம் இதை கொடுத்துட்டு
பார்த்துட்டு வாடா ?

முனியாண்டி பஸ்சுக்கு நிற்கிறான்

வாத மரத்தில் ஏறும் அணிலை துரத்தும் நாயை பார்த்தபடி .

இனி தீபாவளிகள் வரும் ஆனா போன தீபாவளிக்கு
ஏன் வரலைன்னு அத்தை கேட்கும் கேள்விக்கு
மட்டும் இவனால் பதில் சொல்ல முடியாது

தீபாவளி முடிந்த பின்னும் பட்டாசு சத்தம் கேட்டபடி
இருந்தது குப்பையை அள்ளும் லாரிகளில் போகிறது
தீபாவளி ...





--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

9 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post