சண்டை

"அடிக்காதே நிறுத்து , போதும் இரண்டு பிள்ளைக்கு தகப்பனா நீ ? பொம்பளை புள்ளையை இப்படி போட்டு அடிக்கிறியே "

"அவளை கொல்லாம விடமாட்டேன் இன்னைக்கு இரண்டில் ஒன்று நடந்தாகனும் "

தவ்விக்கொண்டு ஒரு கையில் லுங்கியை பிடித்து கொண்டு இன்னொரு கையில்
குழவிகல்லை தூக்கியபடி அவன் .

"போதும் சாமி இந்த மனுசனோடு வாழ்ந்தது இப்பவே அம்மாவீட்டுக்கு போகிறேன்" அழுது தேம்பிய முகத்துடன் அந்த பெண்.

வாரம் ஒரு முறை அல்லது இருமுறை நடப்பதுதான் என ரோட்டில் வேடிக்கை
பார்த்தபடி இருக்கும் கூட்டம் .

இன்னைக்குடன் அவர்கள் இருவரும் பிரிந்து போய் விடுவார்களோ என முதல்பார்வையில் பார்பவர்கள் சொல்லிவிடுவார்கள்

"பைக்கில் சரியா உக்கார தெரியுதா உனக்கு "

" அதெல்லாம் உக்காருவோம் நேரா பார்த்து ஓட்டுங்க"

சண்டை போட்ட அந்த இருவரும்தான் அடுத்தநாள் சாயுங்கால ஆட்டம் சினிமாவுக்கு கிளம்பியாச்சு .

நமுட்டு சிரிப்போடு பார்க்கிறாள் முனியம்மா பாட்டி

"அடேய் இவங்க சண்டை போடுவதை பார்த்தால் அத்துகிட்டு போயிடுவாங்களோன்னு நினைச்சேன் ஆனா இப்ப சோடி போட்டுகிட்டு கிளம்புறதை பார்த்தியா ன்னது"

நான் சொல்லி வைப்பம்னு சொன்னேன்

"அதெப்படி இப்படி அடிக்கடி சண்டை போட்டுகிறாங்க மறுபடி சேர்ந்துகிறாங்க பாட்டி"

அப்போது பாட்டியின் வாயில் இருந்து வந்தது போயிலை எச்சல்ல
அந்த தத்துவம்

" சண்டை போடுறது புருசன் நம்ம மேல அன்பா இருக்கானான்னு சுரண்டி பார்க்கத்தான்"

"இதெல்லாம் உனக்கு எங்க தெரியபோகுது அதெல்லாம்
காலாகாலத்துல கல்யாணம் ஆகியிருந்தா தெரியும்

போனா ஒத்தைக்கா வத்த பயலே "என்றாள் .

இந்த கிழவிக்கு எப்படி இதெல்லாம் துல்லியமா தெரியுது

அப்போ அந்த தாத்தா கூட எத்தனை சண்டை போட்டுச்சோன்னு
நினைச்சுட்டு பழையபடி

ரஸ்யாவில் குடும்ப சூழ்நிலைகள் புரட்சிக்கு பிறகு மாறிவிட்டதா?
என்கிற புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன்











--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post