எனது வீடு உனக்கு
திறந்தே இருக்கிறது
வருபவரை நான் மாலையுடன்
வரவேற்பதில்லை
செல்பவரின் மேல்
சேறையும் இறைப்பதில்லை
இதோ என் வீடு
இனி உன்வீடு
நீ வரும் முன்பும்
இங்கு ஆட்கள்
இருந்தனர்
நீ சென்ற பின்னும்
இன்னும் சிலர் இருப்பர்
எனினும் நண்பா
நீ முக்கியம்
எண்ணிக்கை அதிகம்
என நான் இறுமாந்து
இருப்பதில்லை
எண்ணிக்கையில்
ஒன்றென உன்னை
இருத்தி வைப்பதில்லை
நம்பிக்கை
இருப்பதால்-நான்
அமைதி இழப்பதில்லை
அமைதி இழப்பதில்லை
இது உன் வீடு
அது உன் பொறுப்பு
அன்புடன் நண்பன்
தியாகு
Tags
கவிதை