வாழ்க்கை ஏன் சுவராசியமற்று போகிறது


நல்ல கேள்வி

இதன் உள்ளே வாழ்க்கை ஏன் மெக்கானிக்கலா அதாவது

இயந்திரதனமாக இருக்கிறது என்னும் கேள்வியும் பதிலும்

இயந்திரத்தனமான நடவடிக்கைகளே வாழ்வில் சலிப்புதட்ட காரணம்

ஒரு மூக்கு அறுவை சிகிச்சை நிபுணர் வாழ்வில் காலை முதல்

மாலைவரை

மூக்கை பற்றியே சிந்திக்கிறார்

மூக்கை அறுக்கிறார் தைக்கிறார் அல்லது ஆலோசனை வழங்குகிறார்

எப்போதாவது சினிமாவுக்கு போகிறார்

அல்லது புகை பிடிக்கிறார்

இருந்தாலும் மூக்கை விட்டு வேறு சிந்தனைகள் குறைவே.\


இதில் ஒரு விசயம் நமக்கு தெரியவருகிறது

நமது தொழில்

தொழில் என்றால் என்ன ?

நாம் உயிர் வாழ தேவையான உணவு உற்பத்தி மற்ற பொருட்கள்

தேடுதல் ஆகியவற்றின் மொத்தமே தொழில் என்கிறோம்

அதில் நமது வேலை முறை என்ற ஒன்று நமக்கு வந்தடைந்துள்ளது .

தொடர்ந்து ஒரே வேலையை செய்பவனால் அந்த வேலை எளிதில்

முடிக்க முடிகிறது எனும் நிலை .

அவனுக்கு சாய்ஸ் கிடையாது இந்த உலகில்

(இது சரி என்றோ தவறு என்றோ சொல்ல வரவில்லை நாம்

மேற்கொண்டு போகலாம்)

நான் ஒரு வருடம் மருத்துவனாக இருக்கே இன்னொரு வருடம்

எஞ்சினியராக இருக்கேன் என யாரும் சொல்லமுடியாது

சாதாரண கூலித்தொழிலாளியாக இருந்தாலும்

ஒரு டேபிள் தொடைக்கும் ஹோட்டல் தொழிலாளியாக இருந்தாலும்

ஒரு நாட்டின் பிரதமராக இருந்தாலும்

வேலை மாற்றம் அல்லது வேலை செய்யாமல் கொஞ்ச நாள் இருத்தல்

அல்லது கொஞ்ச நாட்கள் ஓபியம் வரைய போவது என்பதெல்லாம்

முடியாது.

ஆகவே வேலை எனும் நுகத்தடியில் யாரும் தப்பிக்க முடியாது.

வேலையை கர்மா என்றும் அதில் இருந்து தப்பிக்க பற்றற்ற வேலை

செய்யனும் என்றும் கீதை சொல்லுது

அதாவது வேலை செய்யனும் அது தான் செய்தது எனும் அகம்பாவம்

கூடாது .

இப்படி இருந்தால் வேலை நுகத்தடியில் இருந்து விடுபடலாம்

இது சமூக முழுமைக்கு எப்படி சாத்தியம்

ஏதேனும் ஆதாரம் இருக்கான்ற கேள்விக்கெல்லாம்

கீதை உபதேசித்தவரிடமோ, கேட்டவரிடமோ பதில் இல்லை

ஆனால் கர்ம யோகம் என ஒரு யோக முறையா அது இன்ரும்

இருக்கு

சரி மேட்டருக்கு வாங்க

வாழ்க்கை என்பது என்ன

அதன் நோக்கம் என்ன

முழுமுதல் பயந்தான் என்ன என்ரெல்லாம் சிந்திக்க துவங்கினார்கள் முன்னோர்கள்

வாழுதல் என்றால் என்ன என்ற கேள்வியே தப்பு

வாழ்தல் வாழ்க்கை எல்லாம் கேள்விக்கும்

பதிலுக்கும் அப்பாற்பட்ட சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது

என சொல்லப்பட்டு

அந்த சக்தியின் விருப்பத்தை பொருத்து நீ வாழவோ சாகவோ

செய்வாய் என முடிக்கப்பட்ட ஏராளமான உரைகளில்

வாழ்வின் நோக்கம் வாழ்க்கைக்கு பிறகு உள்ள நிலையை அடைய என சொல்லப்படுகிறது சரி இந்த சித்தாந்த மேட்டரை எல்லாம் விடுங்க


அன்றாட வாழ்க்கை சலிச்சு போச்சு ?

இது ஏன் மறுபடியும் கேள்வி வருது .

அதான் கடவுளை உண்மையை நிலையை அடையத்தான் வாழ்க்கை என சொல்லிட்டம்ல

எனும் ஒரு குரல் கேட்குது

போராட்டமே வாழ்க்கை போராட்டம் என்பது மகிழ்ச்சி எனும்

குரல் கம்யூனிஸ்டுகளிடம் கேட்கிறது .

வரலாறு என்பதே வர்க்க போராட்டங்களின் வரலாறுதான் என சொல்றாங்க

என்னடா வம்பா போச்சு .

இதென்ன புதுசா என நிமிர்ந்து உக்கார்ந்தால்

வாழ்வின் பயன் போராடுதலே என்கிறார்க்ள் அவர்கள்

சரி

போராட்டம் என்றால் என்ன

வாழ்வில் போராட்டம் என்பதை வச்சி கொண்டால் சலிப்பு போயிடுமா

நமது பழைய கேள்விக்கு பதில் வருமா

வாலுபோயி கத்தி வந்தது கதையா

சலிப்பே இருந்து இருக்கலாமோ

தேவை இல்லாத வம்ப வாங்கிட்டமோன்னு நினைப்பு வருதா

தொடரும் ...........................

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post