உன் அறைகளை
சுத்தம் செய்யாதே
எனது மூச்சுக்கள்
சிதறி கிடக்கலாம்
உன் கைப்பைக்குள்
சில நேரம்
என் இதயம் இருக்கலாம்
நகத்தை வெட்டிக்கொள்
எனது கடிதங்களின்
ஓரங்கள் கிழிந்து விடாமல்
படி !
மீண்டும் நீட்ட முடியாதபடிக்கு
மடங்கி போகலாம் இதயம்!
நான் தந்த பேனா
எனது கைக்குட்டை
எப்போதோ தந்த முத்தம்
எல்லாம் இருக்கிறதா
என இன்னொரு முறை பார்!
நாம் பேசிய மரத்தையும்
அதன் அருகிருக்கும் அமர்வையும்
பத்திரமாக பார்த்துக்கொள்
நமக்கு பிறகும் அங்கே
காதல் கொட்டி கிடக்கலாம்.
போர் முடிந்த பிறகு
நாம் பேச அங்கே
அமர்வுகள் இல்லாமல் போகலாம்!
எப்போதும் டோக்குகள்
வெடிக்கும் நாட்டில்
இதைத்தவிர நான்
வேறெந்த தாஜ்மகாலை
தரமுடியும் உனக்கு!
-தியாகு
சுத்தம் செய்யாதே
எனது மூச்சுக்கள்
சிதறி கிடக்கலாம்
உன் கைப்பைக்குள்
சில நேரம்
என் இதயம் இருக்கலாம்
நகத்தை வெட்டிக்கொள்
எனது கடிதங்களின்
ஓரங்கள் கிழிந்து விடாமல்
படி !
மீண்டும் நீட்ட முடியாதபடிக்கு
மடங்கி போகலாம் இதயம்!
நான் தந்த பேனா
எனது கைக்குட்டை
எப்போதோ தந்த முத்தம்
எல்லாம் இருக்கிறதா
என இன்னொரு முறை பார்!
நாம் பேசிய மரத்தையும்
அதன் அருகிருக்கும் அமர்வையும்
பத்திரமாக பார்த்துக்கொள்
நமக்கு பிறகும் அங்கே
காதல் கொட்டி கிடக்கலாம்.
போர் முடிந்த பிறகு
நாம் பேச அங்கே
அமர்வுகள் இல்லாமல் போகலாம்!
எப்போதும் டோக்குகள்
வெடிக்கும் நாட்டில்
இதைத்தவிர நான்
வேறெந்த தாஜ்மகாலை
தரமுடியும் உனக்கு!
-தியாகு
Tags
கவிதை