இணைய உறவுகள் மெய்யா?

இந்த கேள்வியே வித்தியாசமாக இருக்குதா

உறவுகள் என்றால் முன்பெல்லாம் கூட படித்த

நண்பர்கள் அல்லது உடன் பணியாற்றும் நண்பர்கள்

என்றும் ஒரு குறிப்பிட்ட வட்டம் இருக்கும்.

நமது விவாதங்களோ நட்போ அவர்களுடனேயே

முடிந்து விடும் .

திடீரென புதிய குளத்தில் குதிக்கும் ஒரு தவளை தான்

கண்ட புது நண்பர்களையும் கடலையும் விளக்க ரொம்ப
சிரமப்படும் தனது சக தவளைக்கு அந்த நிலமைதான்

எனக்கும் வந்தது.

என்னை ஒரு நண்பர் தேடி வந்து பார்க்கிறார் அனேக

விசயங்களை பேசுகிறார் . நாங்கள் உணவருந்துகிறோம்
மிகுந்த அன்புடன் எனக்கு உதவிகள் செய்கிறார் .

இது சென்னையில் ,

நான் கோவைக்கு செல்கிறேன் அங்கே எனது நண்பர் நான்

இருக்கும் இடம்தேடி வந்து விட்டார் தனது காரை எடுத்துக்கொண்டு

இவர்கள் இந்த லெளகீக உலகில் இதற்கு முன் அனுபவத்தில் உள்ள

உறவு நிலைகளில் இருந்து வந்தவர்கள் இல்லை .

என்னாலோ எனது செயல்பாடுகளாலோ மிகுந்த பலன்

அடைந்தவர்களும் இல்லை

இதையெல்லாம் மற்றவர்களுக்கு நாம் புரியவைப்பது

ரொம்ப சிரமம் .

பள்ளியில் படித்தவன் இன்னும் நண்பனாகவே இருந்தால்

ஆச்சரிய படுகிறார்கள்

அதே நேரம் பள்ளியில் படிக்காமல் ,கல்லூரியில்

கைபிடித்து பேசிய நண்பர்கள் இல்லை ஆனால்

கணினியில் கைகோர்த்த நண்பன் மிக அதிக ஆழமாக

நேசிக்கும் போது இவர்களால் புரிந்து கொள்ள

முடியாதது ஏன்?

அது இருக்கட்டும் மெதுவா புரிஞ்சுக்குவாங்க .

இணைய நட்பில் நட்பின் ஆழம் மட்டும் இல்லை
அறிவின் ஆழமும் மேம்படுகிறதே /

கண்ணுக்கு தெரியாத அந்த நண்பன் மடல்

அனுப்புகிறான் நீ இப்படி பேச வேண்டும் நீ இப்படி
சிந்திக்க வேண்டும் என அவனது அன்பு எனது

அறிவின் புணலை திறந்து விடுகிறது .

சரி நட்பு மட்டுதான் இருக்கிறதா இல்லை இல்லை

பகையும் இருக்கிறது.

பகைவனும் கண்ணுக்கு தெரிவதில்லை .

பகையை வாரி வாரி கொட்டுகிறான்.

ஆனால் பகைவனிடம் நான் எனது அன்பை காட்ட மேலும் மேலும்

முயல்கிறேன் அவனோ , நிஜ பகைவனை காட்டிலும்

சுலபமாக என்னை தவறாக புரிந்து கொள்கிறான் .


நட்பு மட்டும் வேணும் என்பது நடக்காத ஒன்னு

பகையும் இருக்கும் புகையும் இருக்கும் .

ஆனா இணையத்தில் நண்பர்களால் நாம் பெறும் பாடங்களையும் பகைவர்களால் பெறும்

காயங்களும் நம்மை எதையும் தாங்குபவர்களாக மாற்றவே செய்கிறது .

சாப்பிட்டாயா, தூங்கினாயா ஊருக்கு எப்போது வந்தாய் என இரத்த சொந்தகளே கேட்காத
இந்தகாலத்தில் இணையம் ஒரு புது சொந்தத்தை கொடுத்து நம்மிடம் புது இரத்தம் பாய்ச்சிகிறது.

ஆகவே 14 அங்குல் பெட்டியை திறந்தால் நமது சொந்தங்களின் குரல் தேனாய் பாய்கிறது

கணினியே உனக்கு நன்றி

கணினியை பற்றிய எனது கவிதை இதோ
கணினி மனித இதயம் காட்டுமான்னு சந்தேகமா கேள்வி கேட்டு இருந்தேன்
ஆனால் காட்டும் என நிரூபித்தது


கண்முன் உலகம் விரியும்
உள்ளங்கையில் உள்ளது கணினி-ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்

சந்திரனை தொடலாம் - நாளை
செவ்வாயில் வசிக்கலாம் ஒளியின்
வேகத்தை மிஞ்சலாம்விதையின்
பாகத்தை மாற்றலாம் – ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்

கண்டம் விட்டு கண்டத்தை ஏவு
கணைகளால் தொடலாம் உடல்
பிண்டத்துடன் பறக்கலாம் விண்ணில்-ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்

மனிதன் வகுத்த நெறிகள் இங்கு
மனிதனை வாழ விடவில்லை இன்று
மனிதன் படைத்த கருவிகளால் -மனித
மனசை புரிய வழியில்லை -உலகில்
மனிதனை மனிதன் சுரண்டுவது
மடியும் காலம் வருமோ - மீள
வழிகள் காட்டி தருமோ!




* குறிப்பு

1. மனித வாழ்க்கையில் கம்ப்யூட்டர் போன்ற பல அறிவியல்
கருவிகள் வந்தபின்பும் மனிதநேயம் வளரவில்லை
அது வளர்ந்தால்தான் இந்த அறிவியல் முன்னேற்றத்தால் பலன் என்ற கருத்தை வலியுறுத்த இந்த கவிதைஎழுதப்பட்டது

(எழுதிய தேதி :April 24, 2006)

18 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post