இன்று உனக்கு பிறந்த நாளாம் நன்று !
என் வாழ்த்துக்களை சுமந்துவந்த புறா
உன் அன்பெனும் உறைபனியில் சிக்கி சிலையானது
அதுதான் இன்றுவரை சமாதனாத்தின் சின்னம் !
என் நட்பை தெரிவிக்க நான் ஏறி நின்ற மலையை
இன்று வரை உயர்ந்த சிகரமென உலகில் சொல்கிறார்கள்!
என் அன்பை கொட்டிய இடம் மிக ஆழமான இந்துமாக்கடலெனசொல்லப்படுகிறது !
நிரப்ப முடியாமல் போராடுது அலைகள் !
எரிமலையும் பனிபுயலும்
ஒரே இடத்தில் இருக்குமா
கடும் மழையும் கொடும் வெயிலும்
ஒரே இடத்தில் தோன்றுமா
நம்பாதவர்கள் செல்லுங்கள் என் தோழி
கனடாவில் இருக்கிறாள்!
இன்று ஏன் கடைகளில்
பூக்கள் கிடைக்கவில்லை !
இன்று ஏன் வாழ்த்து அட்டைகள்
கிடைக்கவில்லை!
என் வாழ்த்துக்களை பூமி தட்டில்
எழுதி அனுப்புகிறேன் பெற்றுக்கொள்!
எனது பிறந்த நாள் பரிசாக என்றாவது
ஒரு நாள் ஈழம் கிடைக்கும்!
தியாகு
என் வாழ்த்துக்களை சுமந்துவந்த புறா
உன் அன்பெனும் உறைபனியில் சிக்கி சிலையானது
அதுதான் இன்றுவரை சமாதனாத்தின் சின்னம் !
என் நட்பை தெரிவிக்க நான் ஏறி நின்ற மலையை
இன்று வரை உயர்ந்த சிகரமென உலகில் சொல்கிறார்கள்!
என் அன்பை கொட்டிய இடம் மிக ஆழமான இந்துமாக்கடலெனசொல்லப்படுகிறது !
நிரப்ப முடியாமல் போராடுது அலைகள் !
எரிமலையும் பனிபுயலும்
ஒரே இடத்தில் இருக்குமா
கடும் மழையும் கொடும் வெயிலும்
ஒரே இடத்தில் தோன்றுமா
நம்பாதவர்கள் செல்லுங்கள் என் தோழி
கனடாவில் இருக்கிறாள்!
இன்று ஏன் கடைகளில்
பூக்கள் கிடைக்கவில்லை !
இன்று ஏன் வாழ்த்து அட்டைகள்
கிடைக்கவில்லை!
என் வாழ்த்துக்களை பூமி தட்டில்
எழுதி அனுப்புகிறேன் பெற்றுக்கொள்!
எனது பிறந்த நாள் பரிசாக என்றாவது
ஒரு நாள் ஈழம் கிடைக்கும்!
தியாகு
Tags
கவிதை