டாஸ்மாக் போன மாணவி



சினிமாவுக்கு போன சித்தாளு மாதிரி டாஸ்மாக் போன மாணவி என்று இனிமேல் கதைகள் வந்தாலும் வரலாம். டாஸ்மார்க் நடத்தினால்தான் உங்களுக்கு இலவசமா மிக்சி கிடைக்கும் என்கிறது அரசு. மிக்சியை வாங்கி சட்னி அரைச்சி பள்ளிக்கு அனுப்பிய பெண் டாஸ்மாக் போயிடுச்சி .
பெண்களால் ஆளப்படும் ஒரு நாட்டில் பெண்கள் டாஸ்மாக் போக கூடாதா?
டாஸ்மாக்கை எதிர்க்க விரும்பாத கலாசார காவலர்கள் பேசுகிறார்கள் "ஆகா ஒரு மாணவி போகலாமா சரக்கு அடிக்கலாமா?".

எதுவுமே வீட்டுக்கு வந்தால்தான் பிரச்சனையா? இத்தனை குடும்பங்கள் சீரழிகிறதே, அதை மூட கூடாதா? டாஸ்மாக்கை என போராடினோம்.

இந்த புரட்சியாளர்களுக்கு வேற வேலை இல்லை, நாங்கெல்லாம் விவரமா பிழைக்கிறோம் என சொன்ன மத்தியதரவர்க்கம் தனக்கு அரசியல் , அதன் மூலம் கிடைக்கும் இலவசம் ஓட்டுக்கு கிடைக்கும் காசு இதையெல்லாம் வாங்கி கொண்டு மக்களை சீரழிக்கும்  டாஸ்மாக் போன்றவற்றை கண்டுகொள்ளாமல் இருந்தது.




மாறாக இரண்டு வாரங்களுக்கு முன் சில பெண்கள் பாண்டிசேரியில் டாஸ்மாக்கை உடைத்தார்கள் அவர்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் .






 -------------------------------------------------------------------------------------------------------------------------
மடிக்கணினி மாணவர்களை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும். மிக்சி க்ரைண்டர் மகளிரின் நேரத்தை சேமிக்க உதவும்."
ஜெயலலிதா


மற்றபடி தமிழகத்தின் பொதுஜனம் இந்த மது அரக்கனை பற்றி பெரிசா கவலை பட்டுக்களை ஏன் தெரியுமா?

குடிகாரன் குடிக்கிறான் நமக்கென்ன வந்தது என்கிற மனோபாவம் தான் 
போராட கம்யூனிஸ்டு இருக்கான் நமக்கென்ன என்கிற சுயநலம்தான்.

இப்போ வீட்டுக்குள் வரும் தொலைகாட்சி மாதிரி உங்க வீட்டுகுள்ள பிரச்சனை வந்துடுச்சா?

இது குறித்து சந்தோசபட முடியாது, வருத்தம் கோபம் எல்லாம் அரசு மேல வருது, மேலும் போராடாமல் இருந்த நம்ம ஜனங்க மேலயும் வருது .

இந்த பெண் டாஸ்மாக் படி ஏறியது அவளது தனிபட்ட ஒழுக்க சீர்கேடு அல்ல இந்த சமூக பொருளாதாரத்தின் பாதிப்பு.

அரசின் தவறான பொருளாதார கொள்கையின் விளைவு.

நேரம் போகவில்லை அனைத்து மாணவிகளும் இன்னும் டாஸ்மாக் போகவில்லை ஆனால் மாணவர்கள் நிறைய பேர் போயிட்டாங்க .
சாராம்சமாக : 
நமது இயக்கமறுப்பியல் சிந்தனை படி; குடிப்பது ஒரு குழுவின் வேலை அவர்கள் மட்டுமே குடிப்பார்கள் என்றும் , அதை எதிர்த்து போராடுவது இன்னொரு குழுவின் வேலை அவர்கள் இப்படி போராடிகிட்டே இருப்பார்கள் என்றும் , நமது வாழ்க்கை நமது சித்தத்தின் படி நமது கொள்கையின் படி நடந்து செல்லும் என்றும், பேசுவது தவறானதாகும்.

சமூகத்தில் இருக்கும் அனைத்து விசயங்களும் தனிநபரை , ஒரு குடும்பத்தை பாதிக்கும் -குடும்பம் தனிநபர் என்பது சமூகத்தின் ஒரு அங்கமே .

எனவே இங்கு பிரித்து பார்த்து இயக்கமறுப்பியல் ரீதியா சிந்திக்காமல்,
அனைத்து இயங்கி கொண்டும் மாறிகொண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து ஒன்றை ஒன்று பாதித்தும் வருகிறது என்கிற இயக்கவியல் சிந்தனையை கைகொள்ள வேண்டுகிறேன்.

தன்னெழுச்சியாக சில போராட்டங்கள் நடைபெறுகிறது


செய்யாறு: செய்யாறு அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் கடைக்குள் புகுந்து  மதுபாட்டில்களை உடைத்தனர். 



சிங்கம்புணரி: பிரான்மலையிலுள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பெண்கள் மீண்டும் முற்றுகையிட்டு மதுபாட்டில்களை உடைத்தனர். கடந்த மாதம் 7ம் தேதி,பெண்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகையிட்டனர். அதிகாரிகள் சமாதானம் பேசி குறிப்பிட்ட தேதிக்குள் மாற்றுவதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. 











கடந்த பத்தாண்டுகளில்நாம் எந்த குறிப்பிட்ட உற்பத்தி சாலைகளையும் ஏற்படுத்தவில்லை. விவசாயம்செழிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. வேலைவாய்ப்புக்கு நாம் முழுக்க பன்னாட்டுபி.பி.ஓ நிறுவனங்களையே நம்பி இருக்கிறோம். பி.பி.ஓ பொருளாதாரம் வீழ்ந்தால் கணிசமானபேர் வேலையில்லாமல் தெருவில் இறங்க நேரிடும் அளவுக்கு நாம் தொழில்துறை சார்ந்துஎந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் தொலைநோக்கின்றி இருக்கிறோம். இந்த சூழல் தான்நம்மை மதுவிற்பனையை முழுக்க நம்பியிருக்கும் நிலைமை நோக்கி தள்ளி இருக்கிறது.
 ஆல்கஹால் உபயோகம் அமெரிக்காவில் குறைந்து வருவதாக இந்த சார்ட் காண்பிக்கிறது . ஆனால் பள்ளி மாணவர்கள் குடிப்பதால் 
பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் பாலியல் வன்முறைகள் நடப்பதாக அமெரிக்காவில் இருக்கும் காலேஜ் மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் 
வெப்சைட் சொல்கிறது 

http://www.collegeparents.org/members/resources/articles/student-statistics-alcohol-consumption-and-abuse



விழித்து கொள்வோம் போராடுவோம்.

அரசின் இலவசங்கள் தேவை இல்லை நமது நாட்டின் சமூக ஒழுக்கம் குடும்ப அமைப்பு ஆகியன கெடகூடாது என அணிதிரள்வோம் ,
 ======================================================================
இவ்வாண்டு 9.12 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு லாப்டாப்கள், 25 லட்சம் குடும்பங்களுக்கு மின் கருவிகள், 12,000 குடும்பங்களுக்கு தலா ஒரு கறவை மாடு, மேலும் 1 லட்சம் குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் என்ற ரீதியில் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இவற்றிற்காக 2353 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது 
=====================================================================


-------------------------------------------------------------------------------------------------------------

நன்றி தினதந்தி:
கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாய் பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகள் வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திய போது செல் போனில் செக்ஸ் படம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து நேற்று மதியம் சமூக வளைத்தளங்களில்  3 வயது  சிறுவன் மற்றும் 5 வயது சிறுவனுக்கு மது கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்புக்கு உள்ளாக்கியது.
இந்த பரபரப்புகள் அடங்கு வதற்குள் கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர்  16 வயதான பிளஸ்-2 மாணவி திவ்யா (பெயர் மாற்றப் பட்டுள்ளது).கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சீருடையில் பள்ளிக்கு கிளம்பினார்.இருந்த போதிலும் திவ்யாவுக்கு காதல் தோல்வியால் பள்ளி செல்ல பிடிக்கவில்லை. இதையடுத்து காதல் தோல்வியை சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள -முடிவு செய்தார்.

தனது செல்போனை எடுத்து தோழிகள் 3 பேருக்கு அழைப்பு விடுத்தார். தோழிகளும் திவ்யா அழைத்த பீளமேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு வந்தனர். அங்கு   அவர்களுக்கு திவ்யா மதுவிருந்து கொடுத்தார். பின்னர் திவ்யாவும் அவரது தோழிகளும் அங்கேயே பொழுதை கழித்தனர். தொடர்ந்து மாலையில் மீண்டும் மது அருந்தினர்.
தோழிகள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் மதுவாடை வெளியே தெரியாத  அளவுக்கு அளவாக  குடித்தனர். ஆனால் காதல் தோல்வியில் இருந்த    திவ்யாவோ எதைப் பற்றியு-ம் கவலைப்படாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். போதை தலைக்கேறியதும்  திவ்யாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தோழிகளிடமே தகராறில் ஈடுபட்டார். இதனால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தோழிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி இருந்தனர். நேரம் செல்ல செல்ல திவ்யாவின் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியது.

அவரது தோழிகளில் ஒருவர்  தனது  ஆண் நண்பருக்கு போன் செய்து திவ்யாவின் ரகளை குறித்து விளக்கமாக கூறினார். இதைத் தொடர்ந்து அந்த மாணவர் தனது  பைக்கை எடுத்துக் கொண்டு பீளமேட்டில் உள்ள வணிக வளாகத்துக்கு வந்தார். அங்கு போதையில் இருந்த திவ்யாவை மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினார்.

ஆனால் திவ்யாவோ அந்த வாலிபரை ஆபாசமாக திட்டி மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்தார். இதையடுத்து தோழிகள் 3 பேரும் சேர்ந்து திவ்யாவை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றினர். பின்னர் அந்த மாணவர் திவ்யாவை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதற்காக பீளமேட்டில் இருந்து குறுக்கு பாதையில்  துடியலூர் நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது திவ்யா போதையில் பாட்டுப் பாடியபடி ரகளை செய்து கொண்டே வந்துள்ளார். சேரன் நகர் தாண்டி துடியலூர் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த திவ்யா ரோட்டில் தவறி கீழே விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவர் மோட்டார் சைக்கிளை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு திவ்யாவை எழுப்ப முயன்றார். அந்த மாணவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய திவ்யா போதையில் தகாத வார்த்தைகளால் வசை பாட தொடங்கினார். நடுரோட்டில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் பள்ளி சீருடையில் மாணவி ஒருவருடன் மாணவர் மல்லுகட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவி அருகே சென்று பார்த்த போது தான் அவர்களுக்கு மாணவி போதையில் இருப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்க முயன்றனர். பொதுமக்களையும் காலால் எட்டி உதைத்து ரோட்டில் வட்டமடித்தார். பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி, மாறி ஆபாசம் கலந்த தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார்.

தகவலறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு குவிந்தனர். ஒருவரையும் விடாமால் வளைத்து வளைத்து திட்டிக் கொண்டிருந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் துடியலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் பெண் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.மாணவியின் நிலை கண்டு பதறிய போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர். ஆனால் மாணவியோ போலீசாரை கூட அடையாளம்  தெரியாமல்  தனது வேலையை தொடர்ந்தார்.

சகட்டுமேனிக்கு வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார். அவரிடம் போராடிய போலீசார் இனிவிட்டால் சரிப்படாது என்று கருதி அங்கு இருந்த டாக்ஸி ஒன்றில் திவ்யாவை குண்டு கட்டாக தூக்கி காருக்குள் போட்டனர்.பின்னர் துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.அங்கு போதையை தெளிய வைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் வீட்டு முகவரி மற்றும் பெற்றோரின் செல்போன் எண்ணை பெற்று அவர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

போதையில் இருந்த மகளின் நிலையை கண்டு அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர். போலீசார் திவ்யாவுக்கு அறிவுரைகள் கூறி அவரது நலன் கருதி வழக்கு ஏதும் போடாமல் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 முறை மதுஅருந்தி தகராறில் திவ்யா ஈடுபட்டு உள்ளார். ஆனால் அவை வீட்டுடன் முடிந்து உள்ளதால் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் நேற்று அளவுக்கு அதிகமான போதையால் துடியலூர் பகுதியையே ரணகலமாக்கி விட்டார்.

இந்த சம்பவம் காரணமாக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது இன்று தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பள்ளி பருவத்திலேயே மாணவ, மாணவிகள் தகாத செயல்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர். எனவே பெற்றோர் பள்ளியில் படிக்கும் தங்களது பிள்ளைகளின் செயல்களை கண்காணித்தபடி இருக்க வேண்டும். இல்லை யென்றால் அவர்களிள் எதிர்காலம் சீரழிந்து விடும் என்று கூறினர்.

---------------------------------------------------------------------------------------------------------------------
சின்னஞ்சிறுவர்களுக்கு ஊத்தி கொடுத்து சந்தோசம் அடையும் வக்கிரமும் தொடந்து அரங்கேறுகிறது





 திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுவனை மது குடிக்க வைத்த கொடூர சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே வேறொரு சிறுவன் மதுகுடிக்கும் அடுத்த வாட்ஸ்அப் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது பொதுமக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத் தில் 4 வயது சிறுவனை மது குடிக்க வைக்கும் வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்அப்பில் வெளியானதைத் தொடர்ந்து மதுவை குடிக்க வைத்த தாய்மாமன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். 


மேற் குறிப்பிட்ட திருவண்ணாமலை செய்தி :
_---------------------------------------------------------------------
இளைஞர்கள் சிலர், நான்கு வயது சிறுவனுக்கு டம்ளரில் மதுவை ஊற்றி கொடுக்கும் காட்சி “வாட்ஸ்அப்”, “பேஸ் புக்”கில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
1 நிமிடம் 37 விநாடிகள் ஓடிய காட்சியில், சிறுவனை வலுக்கட்டாயமாக மது குடிக்க வலியுறுத்துவதும், குடித்து முடித்ததும் டம்ளரை வேகமாக சிறுவன் வீசி எறிவதும் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் மற்றும் இளைஞர்கள் மது குடிக்கும் இடம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு வாகனத்தில் “TN25 AJ 8209” என்ற பதிவு எண் இருந்தது. அந்த வாகனம், திருவண்ணாமலை மாவட்ட பதிவு எண் கொண்டது. இதனால், தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் இந்த வாட்ஸ்அப் காட்சிகள் நேற்று கிடைத்துள்ளது.

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post