இன்று காலை எழுந்தவுடன் நான் நினைக்கவில்லை
எதாவது ஒரு காரணத்துக்காக போலீஸ் ஸ்டேசனுக்கு நான் வரவேண்டி இருக்கும் என்று, பழைய பைக்குகளை வரிசையாக நிறுத்தி இருந்தார்கள் , நாங்கள் போகும் போது இன்ஸ் ஒருத்தரிடம் கோபமாக பேசிக்கொண்டு இருந்தார் .
சுந்தர் அண்ணனும் அவரது மகனும் எனக்காக காத்திருந்தார்கள். சுந்தர் ஒரு ஆறு அடி இருப்பான் சிகப்பு அவனது மனைவி அவனை விட்டு ஓடியபின்
தனியாக இருந்தவனை சுந்தர் அண்ணனும் அவரது மனைவியும் சேர்ந்து இன்னொரு கைவிட பட்ட பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
தானுண்டு தன் வேலை உண்டுன்னு சொல்வாங்களே அப்படி பையன்.
சுந்தர் அண்ணனை போல இல்லை இவன் ,இந்த உலகத்தில் நடக்கும் விசயங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நம்புகிறவன்.
ஆனால் சுந்தர் அண்ணனின் மருமகள் செம அழகு யாரோ ஒருத்தனை காதலித்தாலாம் – திருமணத்திற்கு பிறகும் அவனுடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள்
பிறகு அவனுடனேயே சென்று விட்டாள். ஏன் முன்னமே ஓடலை என்று நான் நினைத்து அதை சுந்தர் அண்ணனிடம் கேட்கவில்லை.
காதலுக்கு கண்ணில்லை ஆனால் காலிருக்கு இல்லையா?
ஸ்டேசன் வாசல் மிகமிக போரடிக்கும் விசயம் எப்படி ஆகினும் என்னை இவர்கள் அழைத்து வந்து விடுகிறார்கள் .
நீங்கதான் நல்லா பேசுவீங்கன்னோ , எங்களுக்கு போலீசுன்னா பயம்னோ எதாவது ஒரு காரணம் இருக்கும் அவர்களின் தர்க்கங்களை விட அவர்களின் மேல்
ஏற்படும் எனது இரக்கமே இங்கு என்னை அழைத்து வருகிறது.
“வாங்க வாங்க செளக்கியமா “
என்றார் ஏட்டு
என்னுடன் வந்தவர்கள் என்னை பார்க்க இவருக்கு என்னை நல்லா தெரியும் அவர் என்னுடைய பங்காளி எல்லாம் இல்லை பல தடவை போலீஸ் ஸ்டேசனுக்கு பஞ்சாயத்துக்கு போன அனுபவம்
ஆள் மாறி இருந்தார் முன்பெல்லாம் டை அடிச்சது தெரியாது இளமையா இருந்தார் இப்போ கொஞ்சம் அரை மண்டை மாதிரி ஆகிபோச்சு , போனதடவை ஒரு பிரச்சனைக்கு வந்தாரு , அதுக்கு முன்னால தண்ணீர் பிரச்சனைக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்தாருன்னு முழங்க ஆரம்பித்தார் ஏட்டு .
இந்த ஏட்டு எப்படின்னா இந்த லோகத்தில் நடக்கும் எந்த விசயத்தையும் போலீசில் வந்து சொல்ல கூடாது , அடுத்து போலீஸ் என்பவர்கள் கேஸ் மட்டுமே போடும் நிறுவனம் என்பதாகத்தான் பேசுவார். அதிலும் இவர் பேச்சுக்கு நாம பதில் பேச கூடாது ஆனால் இதெல்லாம் என் கூட வந்த மாகாளிபப்பனுக்கு தெரியாது.
என்ன பிரச்சனை என்றார் .
இந்த பெரியவரை அடிச்சிட்டாங்க என்றேன் .ஏன் எதுக்கு என்றதும் . இவர் ஒரு சண்டையை விலக்கி விட போனார் அதான் அடிச்சிட்டாங்க என்றேன்.
ஓ அப்படி சொல்லுங்க – அய்யா பெரியவரே நீங்க ஏன் விலக்கி விட போனீங்க என்றார் .
உடனே மாகாளி சொன்னார் பெரியமனுசன் இல்லையா அதான் என்றார்.
யோவ் நானே போலீஸ் ஆனால் சண்டையை விலக்கிவிட மாட்டேன் தெரியுமா ?
ஏன்னா அப்படித்தான் இரண்டு பேர் சண்டையில் ஒரு எஸ் ஐ போய் விலக்கிவிட ஒருத்தன் கத்தியை சொருகிட்டான். பிறகு காப்பாத்திட்டோம்
நாங்களும் மனுசங்கதான் குடும்பம் பிள்ளை குட்டி இருக்கு …………………..
ஆனால் எங்க எல்லாருக்கும் இப்படி பொறுப்பில்லாம பேசுறாரேன்னு ஒரே எரிச்சல்.
அதற்குள் எதோ ஒரு இடத்தில் இருந்து போன் வந்ததும் ஒரு இன்ஸ் நாலு கான்ஸ் கிளம்பி போனாங்க ………
நம்ம ஏட்டு இன்னும் லெக்சர முடிக்கலை.
அதுக்குள்ள மாகாளி கேட்டுவிட்டான் சார் அப்போ எது நடந்தாலும் கண்டுக்காம போயிடனுமா?
எங்களுக்கு சொல்லிட்டு போயிடு என்றார் ஏட்டு
எங்கள் விவகாரம் வர . அதை பற்றி இன்னொருத்தரை காட்டி அவர் பேசுவார் என்றார் .
அவர் எங்களை இன்னொரு இன்ஸ் விடம் அழைத்து சென்று அனுமதி வாங்கிட்டு எங்களுடனேயே கிளம்பி அடிச்சவனை பார்க்க வந்தார் .
அவனது பத்தினி வெளியே வந்து கூப்பாடு போட அவனை ரோட்டுக்கு இழுத்து வந்து ரெண்டு அறை கொடுத்துவிட்டு இனிமே உம்மேல பிரச்சனை வர கூடாதுன்னு எச்சரித்துட்டு போனார் ..
என்ன உலகம்டா அடிவாங்கினவனுக்கு அறிவுரையும் அடிச்சவனுக்கு சும்மா ரெண்டு மிரட்டலும் , திருப்பி அடிச்சுடு அப்பதான் ரெண்டு பேரு மேலயும் கேஸ் போட முடியும்னும்
சொல்கிற உலகத்தில் சோணி மாதிரி அடிவாங்கிட்டு வந்து கேஸ் கொடுப்பது கொடுமை அதுக்கு கூட போவது அதை விட கொடுமை என உலகத்தின் மொத்த கொடுமை
எத்தனை என சிந்தனை சுழன்றது .
இப்படியே விடக்கூடாது எதாவது செய்யனும் ......................ரொம்ப அதிகமில்லை கொஞ்சம் மூளையை உபயோக படுத்தனும் என்ன செய்யலாம் என்று
சிறுமூளை யோசித்தது.
அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்
அண்ணே வணக்கம் ! ஆகா எப்படி பட்ட மனிதன் பதவிக்கு வந்து கொஞ்ச நாளில் இரண்டு ஏக்கர் நஞ்சை புஞ்சை நூறு பவுன் நகை எல்லாம் சேத்துட்டாராம்.
எந்த பார்ம் கிடைத்தாலும் கையெழுத்து போட்டு காசு பார்பதில் கில்லாடி நம்ம தலைவர்.
நானும் மாகாளியும் போயிருந்த போது .. தலைவருக்கு விளங்கவில்லை .
என்ன சமாச்சாராம் என பேசிக்கொண்டே சம்சாரத்தை தேநீர் கொண்டு வரச்சொன்னார் .
அது மின்சாராத்தின் வேகமாய் வாயில் வைக்க முடியாத ஒரு தேநீர் கொண்டு வந்தது.
விசயத்தை சொன்னோம் . ஊர் பொது கோவில் கதவை அடிச்சிட்டார் இந்த -----------பய நீங்கதான் திறக்கனும்.
துள்ளி குதிச்சு எழுந்தார் தலைவர் இதோ உடனே போனை போடுகிறேன்னு போனை போட்டு சிலருக்கு
அறிவுரை கொடுத்தார் சிலரை வரச்சொன்னார் அந்த இடத்துக்கு பறந்தார் .
அடுத்த நாள் கோவில் கதவு திறக்கப்பட்டது .
இப்போதெல்லாம் நான் போலீஸ் ஸ்டேசன் போவதில்லை
உக்கார்ந்து ஐடியா கொடுப்பதோடு சரி
ஆனால் அந்த ஏட்டு சொன்னது என்னமோ மனசை உறுத்தியது யாரு அடிச்சிகிட்டா உனக்கென்ன வந்தது வழிய பாத்துட்டு போன்னு சொன்னது .
சில வாக்கியங்களை நாம கவனமா சொல்லனும் போல போனவாரம் அவர் ராத்திரி ரவுண்ட்ஸ் வரும்போது ஒரு நாய் துரத்தி பின்புறம் கடித்ததில்
ஒரு கிலோ சதை இழந்திருந்திருக்கிறார் மனுசன் காலை வரை யாரும் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலை .
மாகாளி சொன்னான் ஊர் குளத்தில் உக்கார்ந்து கடலை தின்றுகொண்டிருக்கையில் குளத்தில் உக்கார்ந்து கல்லெறிந்து கொண்டிருக்கும் சின்ன பையனை வேடிக்கை பார்த்திருந்தேன்
கல் எறிகையில் புறப்பட்ட அலை அந்த ஏரியெங்கும் மிதந்து சென்றது. கடைசிவரை போயிருக்கும் .

Tags
short story