கல்வியும் -கல்வியை தனியார் மயமாக்கியதும்




கல்வியும் -கல்வியை தனியார் மயமாக்கியதும்

மார்க்சிய கருத்தின் படி கல்வி என்பது என்ன?
கல்வி என்பது கருத்தியல் ரீதியாக முதலாளித்துவத்தை பாதுகாக்கும் கருவியே என்கிறார் அல்தூசர்

1.முதலாளித்துவம் என்பது சரியானது (reasonable) என்ற கருத்தை புகுத்துவது
(உங்களது வகுப்பு தோழர்களை பாருங்கள் அவர்களை விட அதிக மார்க்கு வாங்குங்கள் என்ற போட்டியை வகுப்பறையில் ஏற்படுத்துவதன் மூலம்)
2.பிற்கால தொழிலாளர்களை ஆணைக்கு இணங்க அதாவது அதிகாரத்திற்கு இணங்க செயல்பட வைப்பது( வகுப்பில் உங்களின் ஆசிரியர் ( அதன் குறியீடு ) சொல்வதை செய்ய வேண்டும் என சொல்லி– அதிகாரத்துக்கு கீழ்படிவதை கற்று கொடுப்பதன் மூலம் பிற்கால தொழிலாளர்களை உருவாக்குகிறது கல்வி)
ஆகவே வேலை பார்க்கும் இடத்திற்கு உரிய ஒரு ஒழுங்கமைப்பு மற்றும் கீழ்படிதலை கற்று கொடுப்பதே முதலாளித்துவ கல்வியின் அடிப்படை நோக்கம் .
பள்ளி கூடங்கள் ஒரு மறைமுகமான பாடதிட்டத்தை கொண்டுள்ளது.





 1.குழந்தைகள் பள்ளி சீருடைகளின் வழியே அழகாக தோற்றமளிக்க பழக்கபடுத்த படுகிறார்கள்.
2.சரியான நேரத்திற்கு வருதல் என்பது பயிற்றுவிக்கப்படுகிறது( இன்னைக்கு பள்ளிக்கு லேட்டா வந்தான் என்றால் நாளைக்கு கம்பெனிக்கு லேட்டா வருவான்)
3.வழிகாட்டுதலை பின்பற்றி நடக்க சொல்லி தரப்படுகிறது ( தொழிற்சாலையில் வழிகாட்டுதலை புரிந்து கொள்ள உதவும்)
4.மேலும் டைம் டேபிளை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை சொல்லி தரப்படுகிறது ( வேலையின் போது டைம் டேபிள் படி வேலை செய்தால் மட்டுமே தொழிற்சாலையில் வெற்றி கிடைக்கும் )
5.அதிக நேர உழைப்பின் மகத்தும் மேலும் மிகை நேர உழைப்பை வலியுறுத்தல் ( ஹோம் ஒர்க்) இதெல்லாம் ஒத்திகை
இதன் மூலம் மாணவர்கள் அவர்களை அறியாமலேயே
1.எந்த கேள்வியும் இன்றி சமூகத்தின் ஆதிக்க சக்திகளை ஏற்றுகொண்டு விடுகிறார்கள் ( பள்ளி தலைவர்களை உருவாக்குதல் அவர்களுக்கு கீழ் படிந்து நடத்தல்)
2.பெரும்பான்மை கருத்துக்கு கீழ்படிதல்( வகுப்பில் ஒரு மாணவன் கேள்வி கேட்டால் அதற்கு நகைசுவை பதிலை சொல்லி அல்லது அதட்டி உக்கார வைத்தல் ) கற்று தரப்படுகிறது
3.டீச்சர்களின் அறிவுரையை பின்பற்றல் எந்த கேள்வியும் இன்றி இதே போல சமூகத்தின் தலைவர்களின் அறிவுரையை பின்பற்றுதல் எந்த கேள்வியும் இன்றி செய்யப்படுகிறது.


ஆகவே கல்வியே  தொழிற்சாலைகளுக்கு  தொழிலாளியை உற்பத்தி செய்யும் ஒரு கருவி மற்றும் கருத்தியல் எனும் போது அதில் தனியார் பள்ளி –அரசாங்க பள்ளி என்கிற வேறுபாட்டை மட்டும் காணுதல் அல்லது தனியார் மயத்தை மட்டும் எதிர்த்தல் என்பது முதலாளித்துவ எதிர்ப்பு அல்ல .
சமூக சமத்துவமின்மை :
சமூகம் சமத்துவமின்மை என்பது ஒழிக்கப்பட வேண்டும் ஆனால் அதை பள்ளியில் ஏற்று கொள்ள செய்யப்படுகிறது . முதல் மார்க் வாங்கின பையனுக்கு பரிசுகள் கொடுப்பதெல்லாம் இதற்குத்தான்.
அவனை அங்கீகரிப்பதன் மூலம் – சமத்துவமின்மை என்பது இயற்கையானது என பள்ளி கூடங்களிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது.







தனியார் பள்ளிகளின் முதலீடு:
கேபிடல்(முதலீடு) என்பது எல்லா துறைகளிலும் அரசினால் ஊக்குவிக்கப்படுகிறது அதன் கால்கள் பரப்பாத இடமே இல்லை தற்போது முதலீடு போய் உக்கார்ந்திருக்கும் இடம்தான் கல்வி கூடங்கள்.
பெரிய பெரிய கட்டிடங்கள் , நீச்சல் குளங்கள் , யோகா , கராத்தே , தனி கையெழுத்து பயிற்சி என நிறைய விசயங்களை விளம்பரப்படுத்தி.
இவற்றை இன்றியமையாத தேவைகளோ என எண்ண வைத்து .
கல்வி வியாபாரமாக்கி கொழுத்த லாபம் சம்பாதிக்க படுகிறது.

தனியார் பள்ளிகளின் தரம் :
கல்வி என்பது வியாபாரம் என்று ஆனபின் நல்லா வியாபாரம் செய்வதுதானே லாபம் தரும் எனவே ஆசிரியர்கள் அடிமை படுத்தபடுகிறார்கள்.
குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு சேர்க்கப்படும் ஆசிரியர்கள்
வாரம் 32 முதல் 40 பீரியட்க்கு வேலை வாங்க படுகிறார்கள்.
மேலும் நோட்டு திருத்துதல், வாரம் ஒரு பரீட்சை வைத்தல் என்று மிக அதிகமான உழைப்பு சுரண்டலை நடத்தி எப்படியாவது மாணவனை மனப்பாடம் செய்யவைத்து . பரீட்சையில் அவன் வாந்தி எடுப்பதை, பெரிசா கொண்டாடி விளம்பரப்படுத்தி  கொழுத்த லாபத்தை அடைய .
சாட்டையை முடுக்கி விடுகிறார்கள்.
மறுபக்கம் அளவான பாடதிட்டமும் அதிகம் மாணவர்களை அல்லது ஆசிரியர்களை கசக்கி பிழியாத பள்ளிகளாக திகழும் அரசு பள்ளிகள்
தோற்றத்தில் நோஞ்சானாக , கல்வியை தராதோ என்கிற தோற்றம் காட்டும் பழைய நாற்காலிகள் , முறையான சோதனை கூடம் இல்லாதது.
முடுக்கி முடுக்கி ஆசிரியர்களை மனப்பாட மெசின்களை உற்பத்தி செய்யாமல்புரிந்து படிக்க சொல்கிறார்கள் இதனால் மாணவனுக்கு பல நேரங்களில்அதிக மார்க்குகளை எடுக்க முடிவதில்லை.இதனால்
அரசு பள்ளிகள் மோசம் என்கிற விசயம் பரப்ப படுகிறது.

அரசு இதில் ஆற்றும் பங்கு மிக முக்கியமானது.

தனியார் பள்ளிகளை ஆய்வு செய்வதோ அதன் அடிமை முறை கல்வியை கண்டிப்பதோ இல்லைமாறாக – பள்ளிக்கு  குழந்தைகள் வராது என சொல்லி அரசு பள்ளிகளை மூடிவிட ஏற்பாடு செய்கிறது .

தனியார் பள்ளி ஆனாலும் அரசு பள்ளி ஆனாலும் அது அடிப்படையில் எதிர்கால சமூகத்துக்கு உழைப்பாளர்களை அடிமை புத்தி உள்ளவர்களையே உற்பத்தி செய்கிறது என விசயம் புரியும் போது/
தனியாரை போல அரசு பள்ளிகளை மாற்றுவதோ / அரசு பள்ளிகளை போல (தனியார் பள்ளிகளில் டைரி முதலிய விசயங்களை கொண்டுவர சொல்வது)
மாற்றுவதோ கம்யூனிஸ்டுகள் செய்யும் வேலை அல்லது சிந்திக்க கூடியவர்கள் செய்யும் வேலை அல்ல.
மொத்த கல்வி அமைப்பே முதலாளித்துவ சமூகத்தை உற்பத்தி செய்யும் உற்பத்தி சாலை என்பதை அறிந்து / இந்த கல்வி அமைப்பை மாற்ற போராடுவது ஒன்றே வழி


 சில அமைப்புகள் செய்வது போல அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்தவும் தனியார் கல்வி மையங்களை எதிர்ப்பதும் என்பதெல்லாம் ஒன்றுக்கும் உதவாது .

கல்வியில் சம்பாதிக்க முடியாட்டி டியூசன் வச்சாவாது முதலாளிகள் சம்பாதித்து விடுவார்கள் ஆனால் அடிப்படையில் கல்வி என்பதே இங்கே கேள்வி கேட்காத அடிமைகளை உருவாக்கி கொண்டே இருக்கிறது என்பதை கவனிக்கனும்.


மக இகவினரின் சமீபத்திய கல்வி தனியார் மயம் ஒழிப்பு என்ற கட்டுரையில் 
//“காசு இருந்தா கான்வெண்ட்… இல்லேன்னா கட்டாந்தரை… கல்வி  வியாபாரம் ஒழிய… வாங்க நக்சல்பாரி வழிக்கு!” என்ற “வழிகாட்டும்” வாசகம்!.//

நக்சல்பாரி வழிக்கு வருவது என்றால் என்ன  கேள்விக்கு அவர்களது பதில்

//கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்க் கல்வி வரை  அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்! நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!”//

அதாவது புதிய ஜனநாயகம் வந்தால் அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்கும் என்பது அவர்களின் வாதம்

கல்வி வியாபாரத்தை ஒழிக்கமே இவர்கள் புரட்சியை கோருகிறார்கள்
நாமும் அதைத்தான் கோருகிறோம் ஆனால் இலவச கல்விக்காக அல்ல

கல்வியின் தனியார் மயம் என்பது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைவு இதற்கு தீர்வு - புதிய ஜனநாயக புரட்சி என்கிற நக்சல் பாரி வழி அல்ல
சோசலிச புரட்சியே

இந்தியா ஒரு முதலாளித்துவ நாடுன்னு அறிவிச்சி புரட்சியை நடத்த வேண்டும் என்கிறோம் .

அவர்கள் சொல்லும் அருகமை கல்வி என்பது என்னவென்றெல்லாம் ஒரு விளக்கமும் இல்லை .

தனியார் கல்வியை ஒழித்து அந்த இடத்தில் அரசு வழங்கும் கல்வியை (தற்போது நிலவரப்பட ஏனோ தானோ ) கல்வியை ஆதரிப்பதல்ல
மொத்த சமூக அமைப்பில் இருந்து - முதலாளித்துவத்தை அதற்கு கல்வி தரும் முட்டு கட்டையை அம்பலபடுத்துவதன் மூலமே

சாதிக்க முடியும் .

சுட்டிகள்

Conventional education makes independent thinking extremely difficult - Education and the signification f life - j.krishnamurthy 

கழிபறைகள் கூட இல்லாத அரசு பெண்கள் பள்ளி

ஆங்கில வழி கல்விக்கு மாறும் அரசு பள்ளிகள் 


அரசு பள்ளிகளை சீர்திருத்த ஒருவேளை இந்த அரசுகள் நடவடிக்கை எடுத்தாளும் அங்கிருக்கும் ஆசிரியர்கள் மனநிலை மற்ற அரசு ஊழியர்களின் மனநிலையிலேயே இருக்கிறது அதை மாற்ற என்ன செய்ய போகிறார்கள் .

புதியஜனநாயக புரட்சிக்கு முன்பாக என்பதே எனது கேள்வி


11 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post