”வர்க்க முரண்பாடுகளை
கணக்கில் எடுக்காத தேசிய இன போராட்டங்கள்
வெற்றியடையாது
“ என்கிற வசனம் .
இதன் மூலம் தமிழ் தேசியத்துக்காக பல ஆண்டுகள் போராடி சிறையிலேயே உயிர் துரந்த ஒரு கைதியை சிறை அதிகாரிகளிடம் போராடி தாங்களே அவரது ஈம கடமைகளை செய்யும் போது கதாநாயகன் சொல்கிற வசனம்.
தற்போது தமிழ் தேசியம், ஈழத்தை உள்ளடக்கிய தமிழின விடுதலை என்கிற போராடும் அனைவருக்கும் நல்ல பதில் இது.
தேசியம் என்பதே கேபிடல் வளர்வதற்கான ஒரு அமைப்பு முறைதான் என்று தேசிய இனப்பிரச்சனையில் லெனின் மிக தெளிவாக வரையறை செய்கிறார்.
இலங்கையில் கூட புலிகள் வர்க்க முரண்பாடுகளை புறக்கணித்து தோல்வி அடைந்தனர்
“இப்போ கூட ஒன்றும் காலம் போயிடலை நான் வாழவிரும்புறேன்னு கருணை மனு அனுப்பிட்டீங்கன்னா தூக்கில போடுவதை நிறுத்திடுறேன்”

”எனக்கும் வாழனும்னு ஆசை இருக்கு “
”ஆனால் அதை உன்னிடம்
கெஞ்சி கேட்டு ஏன் வாழனும்” என்கிறார்
படத்தின் கதாநாயகன் அதாவது ஆர்யா
இவர் பல்வேறு நாடுகளில்
புரட்சி போராட்டங்களில் ஈடுபட்டவர் என கருதிஸ்பெசல் கோர்ட்
அவருக்கு தூக்கு தண்டனை அளிக்கிறது.
இதன் மூலம் புரட்சியாளர்கள் தங்களது வாழ்க்கையை மற்றவர்கள் போல் மிக உச்சாணி கொம்பில் வைக்காமல் கொள்கையை மிக அதிக உயரத்திலும் வாழ்க்கையை அதற்கு பின்னாலும் வைக்கிறார்கள் என உணர்த்தபடுகிறது.
“இல்லை அரசாங்கத்தை எதிர்த்தேன் எனவே என்னை துப்பாக்கியால் சுட்டு கொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்”
ஆகா படத்தில் என்னமோ வழக்கத்துக்கு மாறா பேச போறாங்கன்னு ஊன்றி கவனித்தேன்.கொஞ்சம் மசாலா கலந்து / பகத் சிங் வாழ்வையும் சேகுவேரா வாழ்வையும் கலந்து ஆயுதம் தாங்கி போராட்டத்தை இவர்கள் செய்தார்கள் என புரிந்து கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது இந்த படம் .
கதை :
பல நாடுகளில் பல போராட்டங்களை (பெரும்பாலும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள்)முன்னின்று நடத்தி,அதன் அடுத்த கட்டமாக இந்தியாவில் கொட்டப்படும் மேல் நாட்டின் குப்பைகளை தடுக்க முயலும்
ஆர்யா / மனித வெடுகுண்டாகி வெடிக்கும் முயற்சியில் தோற்று கைதாகிறார்.
பாலு என்கிற பாலுச்சாமி (ஆர்யா) (மதுரையில் தூக்கு மேடை ஏறிய தோழர் பாலுவின் நினைவாக வைத்திருக்கலாம்)அவரை காப்பாற்ற துடிக்கும் அவரது சக போராளிகள், இவர்களுக்கு உதவும் விஜய் சேதுபதி (தூக்கு போடும் நபராக அரசுப் பதிவேட்டின்படி தகுதியுள்ள தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தொழிலாளி யான எமலிங்கம் (விஜய் சேதுபதி),
ரண தண்ட னையை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட சிறை அதிகாரி மெக்காலே (ஷாம்),இவர்கள் மூன்று பேரும் மூன்று விசயங்களை பேசுகிறார்கள் .

1.சிறையில் இருந்து தப்பிப்பேன் என சொல்லும் பாலு
2.சிறையில் தூக்கிலிட்டுவிட்டுதான் மறுவேலை எனும் சிறை அதிகாரி ஷாம்
3.தூக்கு போடும் வேலையை செய்ய மாட்டேன் எனும் விசய் சேதுபதி
என்ற மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் வழியே கீழ் கண்ட முரண்களை பேசுகிறார் இயக்குனர்
1.சமூகத்தின் மீது போராளிகளின் கருத்து அதற்காக அவர்கள் செய்யும் போராட்டங்கள்
2.தூக்கிலிடுதல் போன்ற அரச வன்முறை அதற்கெதிரான நிலைபாடு
3.கடமையை செய்வது என்கிற அரசின் ஒடுக்கு முறை எந்திரத்தில்
கடமை என்ற வார்த்தை மூலம் ஏமாற்றபடும் போலீஸ் ராணுவம்
இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் சில முகங்களின்
பிரதிநிதிகள்
அவர்களின் சிந்தனையினூடே பொதுவுடமை பேசப்படுகிறது.
"தூக்கு தண்டனையை நிறுத்துங்கள்
பொதுவுடமையையை சரியா புரிஞ்சிகங்க"
இரண்டு முரண்பட்ட கருத்துக்களாகும் இவை
தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி இறுதி லட்சியமாக
போராடுபவர்கள் எங்கும் சொல்வது கிடையாது.
லெனின் / மாவோ/ சே யாருமே போராளிகளான தாங்கள் தங்களது உயிருக்காக போராடியதில்லை .
உயிரை கொண்டு மற்றவர்களை விடுவிக்க போராடினார்கள்.
இந்த படத்தை இப்படி சுருக்கி பார்க்கலாம்
1.சமூகம் வர்க்க பேதமும் ஒடுக்குமுறையும் கொண்டது
2.அதன் மூலம் தவிர்க்க இயலாத வகையில் சமூகமாற்றத்தை கோர வேண்டிய போராளிகள் உருவாகிறார்கள்
(இந்தியாவை முதலில் சுரண்டினார்கள் தற்போது குப்பை தொட்டி ஆக்குகிறார்கள் )
3.அரசின் ஒடுக்குமுறை கருவி “கடமை” என்கிற போலி வாக்கியங்களால் ஏமாற்ற படுகிறது
4.ஆனால் மதம் சார்ந்த ஒழுக்கம் சார்ந்த அறம் சார்ந்த மனிதர்களுக்கே இந்த அமைப்பு முறை எதிரானது அதன் போராட்டம் தான் இந்த படம்
ஆனால் இந்த கருத்துக்களை சொல்ல அமைக்கப்பட்ட திரை கதை இருக்கே அதன் மூலம் :
பொதுவுடமை என்பது சாகச வாதம் போல சிருஸ்டிக்கப்பட்டு இருக்கிறது
- பொதுவுடமை என்பது சாகசவாதம் அல்ல.
(கதாநாயகனை தப்பிக்க பிரயத்தனம் எடுக்கும் பல முயற்சிகள்)

பாலுசாமிக்கு பின்னால் இருப்பவர்களிடையே நடைபெறும் உரையாடல்களில் கூட எங்குமே தத்துவார்த்த புரிதல் / நடைமுறை வாழ்வின் பிரச்சனைகள் அவர்களின் கருத்து என்று எதுவுமே காணப்படவில்லை. குருதி புனல் படத்தில் கூட குறைந்த பட்சம் கமலாவது கம்யூனிசத்துக்கு எதிரான கருத்தை பேசுவார் இதில் அம்மாதிரி ஒரு வசனமும் இல்லை ஷாமுக்கு
இவர்கள் ரகசிய குழுக்களை போன்று இயங்குகிறார்கள்
.
மக்களிடம் வேலை செய்வது மக்களை திரட்டிய
போராட்டங்கள் என்று பொதுவுடமையை நேசிப்பவர்கள் செய்யும் எதுவுமே காட்டப்படவில்லை.
சாகசவாதமே படமெங்கும் பொதுவுடமை என்ற பதத்தில் காட்டப்பட்டுள்ளது.(ரகசிய குழுக்களே இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை - தேவை படும் இடத்தில் கட்சி ரகசியமாக செயல்படும் என்றார் லெனின் )
அதனால் மேற்கொண்டு படத்தை நகர்த்த இயக்குனர் செய்யும் விசயம்தான்தப்பிக்க வைக்கும் பிளான்.
இதுவே 1 மணி நேரம் ஓடுகிறது.
புறம்போக்கு என்ற பொதுவுடமை
இன்னும் நிறைய பேசி இருக்கலாம்.
எனது எதிர்பார்ப்பு பாலுவுக்கு கம்யூனிசத்தின் மேல் ஏற்பட்ட ஈர்ப்புக்கு சில காட்சியமைப்புகள் எப்படி எமலிங்கத்திற்கு அடிப்படையில் தூக்கு போடும் வேலை செய்ய முடியவில்லையோ அப்படி சமூகத்துக்கு எதிராக அதன் அதிகாரவர்க்கத்துக்கு எதிராக பாலு போராட முடிவு செய்தது ஏன்?
என்பதை விளக்கும் சில காட்சிகள் அமைத்திருக்கலாம்
ஆனால் ஏன் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு :
படத்தின் தலைப்பு குறித்து இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்
கூறுகையில், “குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் படத்தின் ‘புறம்போக்கு’
என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமான அர்த்ததைக் கொண்டது. ‘புறம்போக்கு’ என்ற
சொல் தமிழில், வழக்கத்தில் கொச்சையாக பயன் படுத்தப்பட்டாலும், இது ஆழமான
அர்த்தம் கொண்ட, வரலாற்று ரீதியாக தமிழர்களின் வாழ்வியலோடு சேர்ந்த சொல்.
புறம்போக்கு நிலம் யாருக்கும் சொந்தமானது அல்ல,
மக்களுக்கு பொதுவானது. மக்கள் தாங்கள் வசிக்கும் ஊரில் குடியிருப்பு
பகுதியைத் தவிர்த்து பொது தேவைக்கு நிலங்களை; ஏரி புறம்போக்கு, சுடுகாடு
புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு, மந்தைவெளி புறம்போக்கு, என்று பொது
நிலங்களை பதினைந்து வகைகளுக்கும் மேல் பிரித்து வாழ்ந்தனர். மேலும், மக்கள்
தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்புகளை கட்டிக் கொள்வதற்கு நத்தம்
புறம்போக்கு நிலங்களையும் விட்டு வைத்தனர்.
இதற்கு மேல் ஊர் பொதுவான சாலைகளுக்கும், பஸ் நிறுத்தம்,
மேலும் பள்ளிகூடம், மருத்துவனை கட்ட அரசு‘புறம்போக்கு’ நிலங்களும் இதில்
அடக்கம். மலைகளும், பனி சிகரங்களும் துருவங்களும் சர்வதேச கடல் பரப்பும்
புறம்போக்கே.. காற்றும், ஒளியும் நிலவொளியும் சிகரங்களும் எல்லையற்ற
அண்டவெளியும் புறம்போக்கே... எதுவும் தனியுடமை அல்ல, பொதுவுடமை தான்.
குழம்பிப் போன இந்த காலகட்டத்தில் பொதுவுடமை கருத்தை
மறுபடியும் மறுபடியும் வலியுருத்தவே ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்று
தலைப்பு வைக்கப்பட்டது.” என்று கூறினார்
Tags
critics on cinima