திடீரென திடுக்கிட்டு
எழுந்தேன் …
யாரோ பேசியதாக
மிக அருகே இருப்பதாக அந்த பனிரெண்டு மணிக்கு தோன்றியது தற்செயலாகத்தான் ………. மெதுவாக
எழுந்து அறையின் இரவு விளக்கை போட்டேன் நேற்று படித்து முடிக்காம வைத்த லெனின் புத்தகத்தை
திரும்ப எடுத்து கொண்டேன் .
திரும்ப ஒரு அசைவு ஒரு பேச்சின் முனுமுனுப்பு .
யார் யார் என அறையெங்கும்
கத்தினேன். லீவுக்கு போய் விட்ட
குழந்தைகளும் மனைவியும் இருந்தால் கொஞ்சம் என் மீது சந்தேகபடுவார்களே என வெக்கம் வந்தது.
குழந்தைகளும் மனைவியும் இருந்தால் கொஞ்சம் என் மீது சந்தேகபடுவார்களே என வெக்கம் வந்தது.
திரும்ப படுத்துவிட்டேன்.
ஒரு உருவம் சுமார் முன்னூறு கிலோ எடை இருக்கலாம் . அது கனவும் இல்லை நினைவும் இல்லை
.
நான்காமபரிமாணம்
என்கிறார்களே அப்படி ஒரு பரிமாணத்தில் என்னை தொட்டது.
நீ யார் என்கிறேன்.
அடச்சே இந்தகிரக
வாசிகள் தொல்லையே தாங்க முடியலைன் நீ வேற என்று திரும்பி படுத்து கொண்டேன்.
மிஸ்டர் ……………………..
என்னப்பா வேண்டும்
உனக்கு
அதன் கையில் இருந்தது.
என்ற மாதிரி பார்த்தது.
என்னடா கிரகம்
என்று நினைத்து கொண்டது அதுக்கு எப்படி புரிந்ததோ
நான் இப்போ சொல்வது
மிக அவசரம்
என்ன சொல் என்றேன்.
அதுக்கு எப்படி தமிழ் தெரியும் என யோசிக்க அது தமிழில் பேசவில்லை ஆனால் அது பேசியது எனக்கு மொழிபெயர்பாகிதான் வருது
சாராம்சமாக நம்மை விட அதிக முன்னேற்றத்தில் இருக்கிறார்களாம். அதன் ஒரு பகுதியாக இங்கு வேவு பார்க்க வந்திருக்காம் இந்த பிசாசு .
சாராம்சமாக நம்மை விட அதிக முன்னேற்றத்தில் இருக்கிறார்களாம். அதன் ஒரு பகுதியாக இங்கு வேவு பார்க்க வந்திருக்காம் இந்த பிசாசு .
நமக்குள் நாமே அடித்து கொள்ளும் திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக சொன்னதும் ………….
அதானே பார்த்தேன்
நம்மளை நம்மாளுகதானே அழிப்பானுகன்னு நினைச்சுட்டேன்
அந்த உருவம் மிக
நிதானமாகவும் தேர்ந்த தந்திரத்துடனும் பேச ஆரம்பித்தது
கண்களை பார்த்தால்
குதிரை கண்கள்.
அதன் முழு உருவத்தையும்
அதனால் மறைக்க வெளிபடுத்த முடிகிறது,.
நமது சிந்தனையை
படிக்க முடிகிறது .
என்ன ஒரு ஆச்சரியம்
.
எங்களை அழித்தால் நீங்கள் திரும்ப உருவாக்க பல நூறு ஆண்டுகள் ஆகும் என்று நான் நினைத்ததும் அதன் கையில் இருந்த ஒளி வடிவங்களில் முப்பது நாட்களில் நமது கட்டிடங்களை கட்டும் திட்டம்
வெளிபட்டு அனிமேசனில் காட்டியது .

மிக மிக தந்திரத்தை
நம்ம கிரகத்தை சேர்ந்த யாரோதான் சொல்லி இருக்கனும் என அதனிடம் போட்டு வாங்கினேன்.
உண்மைதான் மனிதர்களில்
சிலரை நான்காம் பரிமாணத்து கொண்டு சென்று விட்டதாம்.
என்னை கொண்டு செல்லவா
என கேட்க வந்திருக்கும் பாவம்
ஆனால் எனது நடுமூளையின்
எதோ ஒரு நியூரான் அதன் கட்டு பாட்டில் வரலையாம் (அட ஆச்சரியம் )
அதனால் என்னிடம்
பேசுகிறதாம் .
மிக சிலரை கவர்ந்து
கொண்டவுடன் பூமி அழிந்த வுடன் இங்கு அவர்கள் வருவார்களாம் .
எனக்கு ஒரு டவுட்
ஒரு வேளை நான்காம் பரிணாமத்தில் இப்போதே இருந்தால் என்ன செய்வது ?
கேட்டே விட்டேன்
.
அந்த ஊடுருவலை
ஒத்து கொண்டதுடன் அதற்காக மகிழ்ச்சி கொண்டது.
பால் வண்டி சத்தம்
கேட்டு எழுந்து கொண்டதும்
மறுபடி அவனை காணோம்
.
இந்த கிரகத்தை
பிடிக்க அயல் கிரக சதியா இதை யாரிடம் சொல்லலாம்
என வாய் முனு முனுக்க
போனை எடுத்து பாஸ்கருக்கு காதை கடித்தேன்.
மச்சி நீ தனியா
இருக்காதே என் ரூமுக்கு வந்துடுன்னான்.
இப்படி யாரிடம்
சொன்னாலும் நம்பலை, அயல்கிரக வாசிகள் அவர்களை பற்றிய கற்பனைகள் கதைகள் செய்திகள்னு நிறைய தேடி பார்த்தேன்
ஆனால் எதுவும் நான் பார்த்த (பார்த்தேன்னு கூட சொல்லமுடியலை)
அறிந்த அந்த அயல் கிரக வாசி வேறு ஒரு பொருள்.
ஆனால் எதுவும் நான் பார்த்த (பார்த்தேன்னு கூட சொல்லமுடியலை)
அறிந்த அந்த அயல் கிரக வாசி வேறு ஒரு பொருள்.
நான்காம் பரிணாமம் வேற்று கிரகம் என்னை ஒரு மாதிரியா பார்க்க ஆரம்பிச்சாங்க
மீண்டும் அவனை
பார்பேனா பார்த்தால் எங்களை விட்டுட சொல்லனும்
என நினைச்சிட்டேன்.
ஒரு வேளை எனக்கு கனவுதான் வந்ததுன்னு முடிவு செய்திருப்பேன் திரும்ப அவனை பார்க்காமல் இருந்திருந்தால். என்னுடைய நிறைய கேள்விகளுக்கு அதை பதில் சொல்ல வச்சிடனும் அப்படியே கொஞ்சம்
நகையெல்லாம் அடமானத்தில் இருக்கு அயல்கிரக வாசி தயவால் திருப்பிடனும் என உள்மனம் அடித்து கொண்டது .
அட சனிப்பயளே உனது கிரகமே ஆபத்தில் இருக்கிறச்ச சுயநல கோரிக்கையா என நடுமண்டையில் ஒரு கேள்வி பிறந்தது.

அடுத்த நாளும்
அந்த உயிரினம் வேற்று கிரக வாசியை பார்த்தேன்.
அதனுடன் ஐன்ஸ்டின்
இருந்தார். அவர் போய் சேர்ந்தாரா அல்லது அவரது எலக்ட்ரான்களை உள்வாங்கி அவரை போன்ற அவரது பிம்பத்தை உருவாக்கி கொண்டார்களா தெரியலை .
“தம்பி எப்படி
இருக்கே, நான் இப்போ வேறு கேலக்சியில் இருக்கேன் ,
அந்த (நமது பூமி)கேலக்சி அழிய
போகுது என்றார் “
என்ன கொடுமை சார் இதுன்னு தலையை சிலுப்பிட்டு எழுந்துட்டேன்
யாரோ எங்கோ பாட்டு
போட்டார்கள்
“உள்ளத்தில் நல்ல
உள்ளம் உறங்காதென்பது ………………………..”
குறிப்பு :
voyager record
விண்கலம் 1977 ஆம் ஆண்டு பூமியில் இருந்து ஏவப்பட்டு இப்போது சூரிய மண்டலத்தைத் தாண்டிப் போய்க் கொண்டு இருக்கிறது. சூரிய மண்டலத்தை துல்லியமாக ஆராயும் நோக்கில் இந்த விண்கலம் ஏவப்பட்டது. எதற்கும் இருக்கட்டும் என்று இந்த விண்கலத்தில்
வெளியுலக மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் VOYAGER GOLDEN RECORDவைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மின்காந்தத் தகடு. (கேசட்) இதில் நம் பூமியின் பல்வேறு சிறப்புகள் படங்களாகவும் ஒலிகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பூமியின் படங்கள், மனிதர்களின் படங்கள், பல்வேறு ஓசைகள்,மொழிகள், இசைத் துணுக்குகள் etc .தகடில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜிம்மி கார்டரின் செய்தி இப்படி சொல்கிறது:
"பிரபஞ்சத்தை நோக்கி இந்த செய்தியை அனுப்புகிறோம். 200 பில்லியன் நட்சத்திரத் தொகுதிகளை நோக்கி ; பிரபஞ்சத்தில் இருக்கும் அறிவார்ந்த நாகரீகங்களில் ஒன்று இந்த செய்தியை அறிந்து கொள்ள முடிந்தால் அவர்களுக்கு எங்கள் செய்தி: நாங்கள் எங்கள் பூமியைக் கடந்தும் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.உங்களுடன் கைகோர்த்து புதிய உலக நாகரீகங்களின் சேர்க்கைக்குத் தயாராக உள்ளோம்"
நன்றி :சமுத்ரா
https://en.wikipedia.org/wiki/Four-dimensional_space

Tags
short story