யோக்கியன்
இந்த சினிமா உலகத்தில்
நான் யோக்கியன் என்று நடிகர் சிவக்குமார் சொன்னது பலருக்கு கேள்விகளை எழுப்பி விட்டது
.
யோக்கியனாக இருப்பதே
பெரிய சர்டிபிகேட்டா?
ஆயிரகணக்கான மக்கள்
தங்களது இணையை தவிர வேறு இணையை நாடாமல் இருப்பதெல்லாம் பேசும் பொருளாக மாறாமல் .
சினிமா உலகில்
இருந்துட்டு நான் யோக்கியனாக இருப்பது பெரிசில்லையா ? என கேட்பது மிக பெரிய அதிசியமாக
பார்க்கப்படுகிறது.
ஒயின் சாப்பில்
வேலை செய்துட்டு தண்ணி அடிக்காத சராசரி தொழிலாளி,
ரெட் லைட் ஏரியாவுக்கு
அருகிருந்தும் சோரம் போகாதவன் .
இவர்கள் எல்லாம்
ஏன் பேசப்படவில்லை.
அப்புறம் சினிமா
உலகின் கற்பு கரசனாக இருப்பதெல்லாம் பெரிய விசயமாக பேசவும் பாராட்டவும் படுவது மிகுந்த
வேதனை அளிக்கும் விசயம்.
காந்தி ஆட்டு பால்தான்
குடிப்பார் என்பதற்காக, பால் ஆடும் அவருடன் பயணம் செய்ததாம்.
நான் ஆடையே உடுக்க
மாட்டேன் என அவர் சொன்னது கொஞ்சம் ஓவராகத்தான் படுகிறது.
ஏழை எளிய மக்களுக்கு
கிடைக்காத துணி எனக்கு எதுக்கு காந்தி சொன்னாராம்.
அன்றைக்கே ஏழைகளுக்கு
ஆட்டுபால் கிடைக்கவில்லையே?
அப்போ ஆட்டு பாலும் வேண்டாம் என சொல்லலாமே?
என்ன ஒரு சத்திய சோதனை
சில எளிமைகள் பந்தாக்களாகவே கருதப்படும் .
ஆனால் ஏழைகளுக்கு பிர்லா மாளிகையில் ரெஸ்ட் எடுக்க அனுமதி கிடைப்பதில்லை என்ற எளிய உண்மையை சொன்னால்
இவன் கம்யூனிஸ் மாவோயிஸ்ட் என்றெல்லாம் சொல்வார்கள்
ஆகா என்ன எளிமை என்ன வலிமை என்ன மரபு என்ன சத்தியம்
என்ன நெஞ்சுறுதி என போற்றினால்
இவன் நம்ம ஆளுடா அடிக்காதீங்கடான்னு விட்டுடுவானுக ;)

நான் யோக்கியன்
என்பது போன்ற ஒழுங்கங்களும் அப்படித்தான்.
ஒழுக்கமாக இருப்பதே
மேடை போட்டு பேச வேண்டிய விசயமா?
கற்பென்று சொன்னால்
அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்னு சொன்னான் பாரதி.
இந்த குழந்தைகளுக்கு பிர்லா மாளிகையில் இடம் கிடைக்காது ஆகவே
எனக்கும் பிர்லா மாளிகை வேண்டாம் என காந்தி ஏன் சொல்லலை என்று ஜெயமோகனால் வளர்க்கப்பட்ட அடிமைகளை கேட்கலாமா?
பாரதி சொன்னதால் அல்ல , இந்த சமூகத்தின் ஆண்கள் கற்புடன் இருக்கிறார்கள் . அல்லது அதை மீறுகிறார்கள் .
கற்பு என்பதே பெண்ணுக்கு எதிரான சமூக அடக்குமுறை என நினைத்தார் பெரியார்.ஆகவே கற்ப பையை எடுத்துவிடலாம்னு சொன்னார்.
இதெல்லாம் பெண்ணுக்கும் ஆணுக்கும் சமநீதிக்காக அவர் பேசிய விசயங்கள்.
மரபு சார்ந்த சமூகம்
மறைந்து நம்பிக்கை சார்ந்த சமூகம் வந்து , அதிலிருந்து அறிவு சார்ந்த சமூகம் தோன்றியது.
மரபில் இருந்த
எல்லா வற்றின் மீதும் கேள்விகள் எழுப்பபட்டன.
ஏன் பெண்களுக்கு
மட்டும் கற்பு நெறி கடுமை , ஆண்களில் கடவுளே இரண்டு பெண்களை திருமணம் செய்ய அனுமதி
இதெல்லாம் கேள்விக்குள்ளாக்க பட்டது.
அறிவு பகுத்தறிவானது
– மரபு சார்ந்த அனைத்து குறியீடுகளும் கேள்விக்கு உள்ளாக பட்டன.
மரபு சார்ந்த உலகின்
வழி தோன்றுவர்தான் காந்தி போன்றவர்கள்.
அவர்கள் கானும்
கனவு என்பது ஒரு கனவு நிலையான ஒழுக்க நெறிகளை கொண்ட சமூகமாகும் .
ஒழுக்கத்தின் அடிப்படையில்
அமையாத சமூகம் பற்றிய வெறுப்பும் முனுமுனுப்பும் அவர்களை மேலும் மேலும் ஒழுக்கத்தை
நோக்கி நகர்த்தியது.
ஆனால் அனைத்து
ஒழுக்கமும் ஒரு வர்க்கம் சார்ந்து புகழப்படுவது பற்றிய கேள்வியை மார்க்சியம் முதலிய
இடதுசாரித்துவங்கள் எழுப்பின.
காந்தி போன்ற ஆளும்
வர்க்க சாதிகளை கொண்டவர்களின் எளிமை புகழப்படும் போது .
ஒடுக்கப்பட்ட மக்களின் அரை நிர்வாணம் மிகவும் கேலியாக பார்க்கப்பட்டது .
இங்கு ஒழுக்கம், அறிவு , கல்வி எல்லாமே மேல்தட்டு மக்களின் வாழ்வியலுக்கு சாதகமானவை.
ஏதேனும் ஒரு ”லைட் பாய்” தனது ஒழுக்கமான வாழ்வை சொன்னால் அதை எழுத கூட இந்த பத்திரிக்கைகள் முயலாது . ஏனெனில் புகழற்றவனின் ஒழுக்கம் யாருக்கு தேவை இங்கு .
புகழுக்குரியவர்களின் ஒழுக்கம் ஒழுக்கமின்மை இரண்டும் வியாபாரத்துக்கு தேவை இந்த சமூகத்தில்.
ஜெகத் காஸ்பர் /ஜக்கி வாசுதேவ் /நக்கீரன் கோபால் போன்ற ஈழத்தை வியாபாரம் செய்தவர்களுடன் நின்று கொண்டிருக்கிறார் நடிகர் சிவக்குமார்
இந்த நடிகை இந்த நடிகருடன் எடுத்த செல்பிகள் விறுவிறுப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த சமூக ஒழுங்கு ஒருவித அதிகாரத்துடன் நிலைநாட்ட படுகிறது .
”கேள்வி” கேட்டு
தொந்தரவு செய்யும் மாணவனை பிரம்பு மூலம் ஒடுக்குகிறார்கள் அல்லது இருக்கவே இருக்கு
”ஒழுக்கம்” என்கிற கருத்துரு,மேல் தட்டு வர்க்கத்தாரின்
ஒழுக்கம் வியந்தோத படுகிறது.
கமல் ஹாசனின் வாய்
முத்தமும் புகழப்படுகிறது.
இவர்கள் நட்சத்திரங்கலாம் .
கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வார் .
இவங்க மட்டுதாம்
பிறந்தானுகளா நாமெல்லாம் வேஸ்டா பிறந்துட்டமான்னு.
உங்க கிட்ட என்ன
சர்டிபிகேட்பா இருக்கு ?
நான் யோக்கியன்
அதான் என் சர்பிடிகேட்
வேற எதாவது
அதாவது நான் யோக்கியன்
……………………………………………………………………………………
இந்து ஞான மரபு
என்ன சொல்கிறதோ அதன் படி வாழ்பவனே சிறந்த மனிதன்னு சொல்லும் ஒரு கோஸ்டி இருக்கு.
அவர்கள் எல்லாத்துக்கும்
மரபு முலாம் பூசுகிறார்கள்
சாதியா அது மரபில்
இருக்கு
சண்டையா அது மரபில்
இருக்கு
இன குழுவா அதுல
இருந்துதான் சாதி வந்தது
அதனால சாதி தப்பில்ல
இந்து ஞான மரபு
இதை ஏத்து கிச்சு
அதை ஏத்துகள
அவர் யார் அவர்
ஜெர்மன் காரர்
அவருக்கு எப்படி
இந்து ஞானமரபு தெரியும்
என ஒரு கும்பல்
சுத்திட்டு இருக்கு
எல்லாம் சுய சொரிதல்
, நான் அமெரிகாவில் இருந்த ஒரு தேநீர் கடையில்
வாய் கொப்பளித்து
காபி சாப்பிட்டேன் என்னுடன் நண்பர் டேஸ் இருந்தார் இதெல்லாம் விழுந்து விழுந்து
இணையத்தில் எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகிறது.
ஒரு பெண்ணை கெடுத்தவனுக்கே அவனை திருமணம் செய்யலாம் அதற்கு சூழல்தான் காரணம் என்றெல்லாம் கோர்டுகளே பேசுவதற்கு காரணம் என்ன ?
இங்கு பெண்ணியம்
தலித்தியம் , ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் குரல் தேய்ந்து ஒலிப்பதுதான் காரணம்.
நான் யோக்கியன்
என சொல்லும் ஒரு நபர் சமூகத்தின் புகழ் பெற்று இருக்க வேண்டும் என்றால் மற்ற விழுமியங்களில் அவர் எப்படி இருக்கிறார்.
வருமான வரியை சரியாக கட்ட வேண்டும் என்பது ஒரு ஒழுக்கம் தானே அதை தவிர வாய்மை , உண்மை என்று எத்தனையோ மரபியல் சார்ந்த ஒழுக்கங்கள் இருக்கின்றனவே அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு பாலியல் சார்த்த ஒழுக்கத்தை பிரதானபடுத்துவதே பெரிய விசயமா?
பாலியல் ஒழுக்கம் இல்லாதா லாரி டிரைவர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி - நாட்டை ஏமாற்றாமல் இருக்கலாம்.
அதை பேசு பொருளாக ஊடகங்கள் ஆக்காதது ஏன்?
சமூகம் குடி பழக்கத்தை ஒழுங்கீனமாக பார்க்கலாம் ஆனால் பெரும்பாலான அடித்தட்டு மக்கள் குடித்தால் தான் அன்றைய உடல் உழைப்பின் களைப்பில் இருந்து விடு பட முடியும் என்ற நிலையில் இருக்கிறார்களே.
அப்போது நீங்கள் ஒழுக்கமாக கற்புடன் இருக்க யாரோ ஒரு சிலர் கண்ணுக்கு தெரியாமல் உழைக்கிறார்களே அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
சுமார் ஆயிரக்கணக்கான எறும்புகளின் மேல் ஒரு பெரிய எறும்பு உக்கார்ந்து போகிறது.
ஆயிரகணக்கான எறும்புகளின் காதல் கலவி இதெல்லாம் கேவலமாக ஒழுக்க கோட்பாட்டால் ஒடுக்கப்படுகிறது.
அந்த பெரிய எறும்பின் ஒழுக்கம் வியந்து ஓத படுகிறது.
இந்த சமூகமும் அப்படித்தான் . ஆயிரக்கணக்கான தொண்டர்களின் அடியால் வலி பொறுத்தலால் காந்தியின் அகிம்சை பல்லக்கில் போனது.
தனிபட்ட மனிதனின் அகிம்சை என்பது முக்கியமல்ல.
அகிம்சையை தனிபட்ட வாழ்வில் பயன்படுத்த இயலாது -ஆனால் அரசியல் ரீதியா அதை விட்டா வேறு வழி இல்லை என்றால்
தனிபட்ட வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் ஏன் இந்த இடைவெளி
நான் எளிமையாக இருப்பதும் காந்தி எளிமையாக இருப்பதும் வேறு வேறு விசயங்கள் அன்றாட பிரச்சனைகளுக்காக மக்கள் உண்ணாவிரதம் இருப்பதும் மோடி உண்ணா விரதம் இருப்பதும் வேறு வேறு விசயங்கள்

அதனால்தான் இந்திய குழந்தைகளின் ஊட்ட சத்து குறைபாட்டை விட
இந்திய குழந்தைகளின் யோகாவை பெருசு படுத்துகிறார் மோடி .
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை கலைய முயலாமல்
பெண் குழந்தைகளை செல்பி போட்டு ஊக்கம் கொடுக்க சொல்கிறார்
முக்கிய மற்றவற்றை முக்கியத்துவ படுத்தினாலும் இங்கு
வியந்தோதப்படும் என்பது தெரியும் அவருக்கு.
எந்த வர்க்கத்தின் ஒழுக்க விதிகள் வியந்தோதி போற்றபடுகிறதோ
அந்த வர்க்கத்தின் ஒழுக்கம் இன்னொரு வர்க்கத்தில் பொருத்தி பார்க்க இயலாது.
இதனால் இவன் உயர்ந்தவன் எனும் பொதுவான ஒழுக்க விதிகளின் மேல் நின்று சிரிக்கிறது சமூக வாழ்நிலை ..
வாழ்வில் ஒரு ஆடர் என்கிட்ட இருந்தது என்பது மிகப்பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது
மறு புறம் ஒவ்வொரு வாழ்வும் அதற்குரிய ஆர்டரில் தான் சென்று கொண்டு இருக்கிறது.
ஒரு மனிதன் தனது வேலையை முடித்து விட்டு ஒரு குவார்ட்டரை குடித்து விட்டு படுத்து விடுவான் திரும்ப திரும்ப இது நிகழும்
அவனை போன்ற பல்லாயிரம் தொழிலாளர்கள் அவர்களுக்கு குடும்பம்
கலவி . திருமணம் சாவு எல்லாமே ஒரு ஆர்டரின் படிதான் போகிறது
எது மேலானது எது கீழானது .
ஒரு மிகபெரிய மனிதர் எனது டேபிளுக்கு முன்பு உக்கார்ந்து உணவருந்தினார்.
வேர்கடலையை ஒரு சில்வர் தட்டில் சர்வர் எடுத்து வந்து வைத்தார் அதில் கொஞ்சம் குறைவாக இருந்தது.
இவரோ அந்த கிளப்பின் பெரிய மனிதர் - தனது கோபத்தை பெரிய சத்தத்தால் வெளி படுத்தி
அந்த சர்வரை பயமுறுத்தினார் -
ரண்டு வேர்கடலை குறைந்தது பெரிய குறை அவருக்கு
எவ்ளோ பெரிய மனிதன் நான் எனக்கு குறைவாக கொடுப்பியா நீன்னு ஒரே ரகளை
அட நீ பெரிய மனிதன் என்பதற்காக வேர்கடலைதான் அளவீடா
நான் யோக்கியன் பிற பெண்களை ஏறெடுத்து பாராதவன் என்கிற விசயத்தை சிவகுமார் பேசுவது எனக்கு வேர்கடலை மேட்டர் மாதிரி தெரிகிறது .
இந்த பெரிய மனுசனால் ஒரு பத்து குழந்தைகள் கல்வி அறிவு பெற்றார்களா?
ராமானுஜத்தின் நோட்டு புத்தகங்களை படித்த ஹார்டி அவரை லண்டனுக்கு அழைத்து செல்கிறார்.
என்ன ஒரு பெரிய மனுசதனம் .
ராமானுஜத்தின் குடும்ப பிரச்சனையை நான் கேட்க தவறியது எனது தவறுன்னு ஒப்புக்கிறார் என்ன ஒரு பெரிய மனுசத்தனம்
நான் தான் ராமானுஜத்தை உருவாக்கினேன்னு பேசலை
உலகத்துக்கே ஒரு கணிதமேதையை வெளிச்சம் போட்டு காண்பித்தார் ஹார்டி
நாம் என்ன செய்தோம் இந்த மக்களுக்கு - ஒரு குண்டூசியை நகர்த்தி இருப்போமா?
ஒரு டிரஸ்ட் வச்சி நாலு பேருக்கு உதவி செய்துட்டா?
டிவில பெரிய நிகழ்சியா நடத்தி சொல்லி காண்பிச்சிடும் நாம்தான்
நமது வேர்கடலை மேட்டரை எல்லாம் பெரிசா பேசுகிறவர்கள் .
பல பெண்களுடன் தொடர்பில் இருந்தவர் என சொல்ல பட்ட சே குவேரா
தனது நாட்டுக்கு அல்லாமல் வேறொரு நாட்டின் விடுதலைக்கு துப்பாக்கி சுமந்து அது முடிந்ததும் அடுத்த நாட்டுக்கு பயணமானார்
தனது நாட்டுக்கு அல்லாமல் வேறொரு நாட்டின் விடுதலைக்கு துப்பாக்கி சுமந்து அது முடிந்ததும் அடுத்த நாட்டுக்கு பயணமானார்
சாராம்சம்:
போலித்தனமான எளிமை , போலித்தனமான யோக்கியன் , போலித்தனமா பெண்ணியம் , தலித்தியம் எல்லாமே விமர்சனத்துக்கு உரியவையே
Tags
Simplicity