தோழர் “லு” வுடன் நடைபெறாத உரையாடல்



தோழர் “லு” வுடன் நடைபெறாத உரையாடல்

தோழர் லு எனப்படும் அவருக்கு வயது முப்பது இருக்கும் போதிருந்து எனக்கு தெரியும் அவரை .
வேலு என்பது அவரது பெயர் ஆனால் அவரது அப்பா அவருக்கு டிராஸ்கின்னு பெயரு வச்சாரு நானோ லுன்னு பேரு வச்சிட்டேன்.
வீட்டுக்குள் நுழையும் போதே
 அப்பாவிடம் சொல்வார்கள்
 வணக்கம் காம்ரேட்
வசந்தி
வந்தவங்களுக்கு காபி கொடு
 அரக்க பரக்க அம்மா
 அடுத்த வீட்டுக் கதவு தட்டுவாள்
வர்ற ஆறாம் தேதி  
 செயற்குழு
 மறக்காம வந்திடுங்க
ஐந்தாம் தேதியே
 அம்மாவின் நகைகள்
 அடகுக் க்டையில்
பத்தாம் தேதியும்
அப்பா உறுதியோடு இருந்தார்
 புரட்சி வரும்
இதே போன்றொரு கனவோடு
 ஐம்பது ஆண்டுகளாய்
 பக்கத்து வீட்டுக் கிறிஸ்துவத் தாத்தாவும்
சொல்லிக் கொண்டே இருந்தார்
இயேசு வருகிறார்
 இயேசு வருகிறார்
 இதோ இதோ/
வணக்கம் காம்ரேட் .  ". – கவிஞர் யுக பாரதி

மேற்கண்ட கவிதையை யுகபாரதி தனது வீட்டை மையமாக வைத்து எழுதி இருப்பார் . இதே சூழல்தான் தோழர் லு வீட்டிலும் .
தோழர் காலையில் கிளம்பும் போதே – வீட்டு செலவுக்கு காசு கொடுத்திட்டு போவார் ஆனால் சில நேரங்களில் ஜிப்பாவில் காசு இருக்காது போய்விடுவார்.
அவரது வீட்டில் அந்த அத்தைக்கு பணம் கொடுக்காம போறீகளேன்னு கேட்க தோணாது.
மிக சிறிய அந்த வீட்டில் எனது வாசிப்புகள் அதிகமாகியது “செம்மலர்” என்கிற புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன் . வீடு அருகருகே இருந்ததால் தோழரின் அனைத்து விதமான அசைவுகளும் அத்துபடி எனக்கு.
ஒரு ஆர்பாட்டம் தியாகு வருகிறாயான்னு கூப்பிட போய் விட்டேன்.
அந்த போராட்டத்தில் ஒரு இன்ஸ்பெக்டருக்கு மண்டை உடைந்து ரத்தம் ஊத்த எங்களை தாக்க ஆரம்பித்தது போலீஸ் . தோழரை கைது செய்துட்டாங்க .






நாங்கள் ஓடினோம் அது ஒரு டெய்லர் கடை சுத்தி வளைச்ச போலீஸ் அடிக்க ஆரம்பிச்சானுக . மண்ணில் விழுந்தவர்கள் மிதி பட்டவர்களுக்கு எல்லாம் மேலும் மிதி விழுந்தது.
இந்த மக்கள் இருக்காங்களே பார்த்துட்டு நின்னாங்க.
எங்களை தோழருடன் மதுரை மத்திய சிறையில் அடைச்சிட்டாங்க – சிறையில் ஒரு தட்டும் குவளையும் கொடுத்தார்கள் – எங்களுக்கு பிரச்சனை இல்லை மொத்தம் 80 பேர் கைதானோம் .
காலையில் இருந்தே தொடர்ச்சியா மார்க்சிய வகுப்புகள் நடக்கும்.
50 நாட்களுக்கு பிறகு எங்களுக்கு ஜாமின் கிடைச்சது. தோழர் லுவும் நானும் வெளியே வந்தோம் .
அப்போது லெனின் தொகுப்பு நூல்கள் என்றும் மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள் என்றும் விதவிதமான கனமான புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வச்சிருப்பார் லு
ஒரு நாள் எதோ ஒரு புத்தகத்தை எடுத்து தோழரிடம் இதன் அர்த்தம் என்ன என்று கேட்டேன் அதெல்லாம் உனக்கு புரியாது ஆனால் படிக்காமல் இருக்காதே படி என்றார்.

புரியாமல் இருந்தால் என்ன படி என்ற அவரது வாக்கை வேத வாக்காக கொண்டு விழுந்து விழுந்து படிப்பதும் அத்தை கிட்ட பேசுவதும் என்று இருந்தேன் .

”அத்த இதெல்லாம் புரியாம மாமா எப்படி கட்சிக்கு போனாரு”
“அதை ஏண்டா கேட்கிற மனுசன் கட்சி கட்சின்னு சாகுராரு என்பார் “ அத்தை
கம்யூனிசம்னா என்னா என்று ஒருநாள் கேட்டே விட்டேன் தோழரிடம்
அதாவது ஒரு கோழி முட்டையில் இருந்து கோழி குஞ்சு வெளியே வருதில்ல அம்மாதிரி புதுசா ஒரு சமூகம் பிறக்கும் அப்படின்னாரு
எப்படி பிறக்கும் என்று நிறைய கேள்விகள் வச்சிருந்தேன் ஆனால் அவருக்கு இருந்த பிசி செடியூல்ல எனக்கு விளக்கம் சொல்ல முடியல அவரால.
தோழருக்கு வறுமை அதிகமாக ஆக வாழ்க்கை சிக்கல்கள் அதிகமாச்சி
இதில் தோழரின் சிறந்த பேச்சாற்றல் அவரை ஒரு நில புரோக்கரா மாத்தி விட்டது.
ஆனால் நான் இன்னமும் அவரது வீட்டுக்கு போவதும் /அங்கிருக்கிற நூல்களை இரவல் வாங்குவதும் வைப்பதுமாக இருந்தேன்.
ஒரு முறை சுமார் முன்னூறு நூல்களை எடுத்து பெரிய மூட்டையில் கட்டி போட்டு விட்டார் அவரது மகன் .
நான் அவனிடம் சண்டைக்கு போய்விட்டேன்
அது என்னோட அப்பாவுடையது என்னவேணாம் செய்வேன் என்றான் பார்த்துகங்க
சோவியத் ருஸ்யா அச்சடித்து இலவசமாக இந்தியாவுக்கு அனுப்பிய நூட்கள் அவை என வாதம் செய்து சில நூல்களை மட்டும் வாங்கி வந்தேன்.
தோழர் இரண்டாவது ரவுண்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார் ஆனால் இவரை அவங்க யாரும் கண்டுகவில்லை .
ரெண்டாவது இவரை போல அவங்க யாரும் கட்சியை மட்டும் கட்டி கொண்டிருக்கவில்லை வேறு வேலை பார்த்து சம்பாதிச்சிகிட்டே கட்சியில் இருந்தாங்க .
பாவம் தோழர் பலமுறை என்னிடம் கடன் கேட்பார் நானும் கொடுப்பேன் ஆனால் பணம் திரும்ப வராது என்கிறமாதிரி அவரது பொருளாதார பிரச்சனை அவரை ரொம்ப சிக்கலாக்கிடுச்சி.
தனது சொந்த வேலையை விட்டு விட்டு முழுக்க முழுக்க மக்களுக்காக பாடுபட்டதன் விளைவு அவரது குடும்பம் இன்னமும் பண கஸ்டத்திலும் ஏழ்மையிலும் இருக்கிறது.
மறுபுறம் அவர் சார்ந்த கட்சியோ – ஆதிக்க கட்சிகளுடன் மீண்டும் மீண்டும் கூட்டணி வச்சி இவர் கூட இருந்த பலர் பணம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
தோழர் அப்போதெல்லாம் எங்களை மாதிரி பொடியன்களை அழைத்து செல்வார் – தெருவில் நின்று இந்தியாவின் ஏகாதிபத்திய கொள்கையை மைக் இல்லாமல் பேசுவார் – சிலர் நின்று கேட்பார்கள் பலர் சிரிப்பார்கள்.
எனக்கு ரோட்டில் நின்று சாக்ரடீஸ் உரையாற்றுவது போலவே இருக்கும்.
அவ்ளோ உணர்ச்சி இருக்கும் அவரது குரலில் . இந்த உணர்ச்சியோ என்னமோ விரைவில் அவருக்கு நெஞ்சு வலியை கொண்டு வந்தது.
இதற்கிடையே அவரால் விளக்கம் கொடுக்க முடியாத கேள்விகளுக்கு நான் எப்படியோ விளக்கம் தெரிந்து கொண்டேன் .
தோழர் ஒரு நடைமுறை வாதி எதையும் அதிகமா தத்துவார்த்தமா அனுகாதவர் – கட்சி என்ன சொல்கிறதோ அதை மதம் போல பின்பற்றுகிறவர்.
அதுதான் பிரச்சனை / தத்துவத்தை கற்காமல் தோழர் லு அந்த கட்சியில் 40 ஆண்டுகாலம் இருந்துள்ளார்.அதனால்தான் என்போன்ற  சின்ன பசங்களுக்கு அவரால் விளக்கம் அளிக்க முடியலை.
ருஸ்யா போன்ற நாடுகளில் புரட்சி வந்த புற காரணங்கள் . தற்போது இந்தியாவில் இல்லை என்பதை உணரவில்லை மேலும் இந்தியாவை குறித்த அவரது கட்சியின் வரையறை தப்பு
“இந்திய ஒரு அரை நிலபிரபுத்துவ / அரைகாலனிய நாடு” என்று இன்னமும் சொல்லி கிட்டிருக்காங்க அவரது கட்சி
மார்க்சியம் என்பது டேட்டா அடிப்படையில் ஆனது , அரை நிலபிரபுத்துவம் இருக்குன்னா அதற்கான டேட்டாவை இந்த கட்சிகள் கொடுப்பதில்லை .
யார் எதிரி என்பதே தெரியாமல் இவர்கள் எங்கே புரட்சி நடத்த போகிறார்கள் என்ற எனது கேள்விகளை அவரிடம் கேட்டு ஒரு உரையாடல் நடத்த வேண்டும்,
ஆனால் தோழர் லு அந்த மனநிலை / உடல்நிலை / தத்துவார்த்த நிலையில் எல்லாம் இல்லை இப்போ.
அவரது தியாகம் / நேர்மை / இழப்புகள் ஆகியவை மிக சரியான கட்சியில் அவர் செய்து இருந்தால் அதை ஏற்று கொண்டு இருப்பேன் ஆனால் அடிப்படை மார்க்சியத்தை போதிக்க அந்த கட்சி முயற்சிகவில்லை என்கிற கோபமும் எனக்கு இருக்கிறது.
தோழர் லு வுடன் இந்த விசயமாக நடைபெறாத உரையாடல் நிறைய இருக்கிறது.


அடுத்து அவர் வாழ்க்கையை அனுகிய விதம் , மக்களுக்காக முழு நேர பணியாளனாக கட்சியிலும் காசுவாங்காமல் உழைத்தது இதெல்லாம் அவரது சொந்த வாழ்வில் மிக பெரிய சருக்கலை கொடுத்தது.
இதையெல்லாம் தோழர் லு வுடன் பேசலாம் ஆனால் அவர் மோல்டிங்காகிட்டார் அதாவது அவரது மூளையை பிரைன் வாஸ் செய்யப்பட்டு விட்டது . கட்சியின் நடைமுறை செயல்முறை ஆகியவற்றை விமர்சிக்கும் எல்லைக்கு மட்டுமே விமர்சனம் செய்வதும் . வெளியே யாருடனும் கட்சியை பற்றி விவாதிக்காமல் இருப்பதும் , என்று மூடு மந்திரமாக வாழ ஆரம்பித்தார் லு .
இப்போது கட்சியிலும் அவர் இல்லை , வாழ்விலும் தோல்வி அடைந்தார் என்கிற நிதர்சனம் அருகிருந்து பார்த்த எனக்கு மிகபெரிய வேதனை அளிப்பதாகும்



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post