மிக பெரிய நீண்ட
விளக்கங்களை கொடுத்து கட்டுரையை மிக மிக நீளமாக எழுதுவதன் மூலமும் சில இடங்களில் வாத
அமைதியை கொள்வதும் பிறகு
தனது கருத்துக்கு
வலுவான மேற்கோள்களை கொள்வதும் ஆக கருத்து ரீதியாக கடந்த 60 -70 வருடத்துக்கு முன்பு
இதுதான் நடந்து உள்ளது என்பதை அகவயமாகவே சொல்லி செல்வதில் வல்லவர்கள் ஜேஜே சில குறிப்புகள்
எழுதிய சுந்தர ராமசாமியும் அவரது சீடர் செயமோகனும் ஆவார்கள்.
ஜேஜே சில குறிப்புகள்
புத்தகத்தை கையில் வாங்கி வைத்திருப்பதை பார்த்து சோபாசக்தி சொன்னார் சிரித்து கொண்டு
உங்களுக்கு பைத்தியம் பிடிக்க போகிறது என்று .....................
{ இந்த கட்டுரையின் இடை செருகல் இது ஜே ஜே சில குறிப்புகள் :
{ இந்த கட்டுரையின் இடை செருகல் இது ஜே ஜே சில குறிப்புகள் :
//உண்மையில்
மலையாள எழுத்தாளன் என்ற ஒரு கருவியைப்
பயன்படுத்தி தமிழ் கலாச்சாரத்தையே கலாய்க்கிறார்
சு.ரா. சரித்திர கதைகள்
கொண்டு மக்களை titillate செய்து பிழைப்பு நடத்தும்
சரித்தர நாவலாசிரியர்களைப் பார்த்து மலையாள எழுத்தாளர்கள் கேட்பது
போல ’என்ன சிவகாமி அம்மாள்
தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?’ என்று
கேட்டு அப்பட்டமாக கலாய்த்துவிடுகிறார்.///
உண்மையில் சிவகாமியின்
சபதமோ அல்லது பொன்னியின் செல்வனோ போன்ற சரித்திர நாவல்கள் எதுவும் பெரிய அளவில் மலையாள
நாவல்களில் பேசப்படவில்லை என்பதே உண்மை .
பொன்னியின் செல்வன்
வாசித்தவர்களுக்கு அந்த நாவலை பற்றி தெரியும்
//இவ்வகையில்
ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதைச் சுற்றி ஒரு
சுற்றுச்சூழலே உருவாக்கி, அதைப் பயன்படுத்தி, தமிழகத்தின்
அரசியல், எழுத்துலகம், அறிவுச்சூழல் என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார்
சு.ரா.. கதையின் நோக்கம்
விமர்சனம் செய்வதோ நொட்டை சொல்வதோ
என்பதையும் தாண்டி நம்மை அது
குறித்து சிந்திக்க வைப்பதாகவே தோன்றுகிற//
(அடைப்பு குறிக்குள்
இருப்பது ஒரு விமர்சனம் )
தமிழகத்தின் அரசியல்
என்பது திராவிடம் சார்ந்து கொஞ்சம் கம்யூனிசம் சார்ந்த அரசியல் ஆகும் இதை கேலி செய்வதன்
மூலம் கருத்தியல் சார்ந்த அரசியலே மேல் என்றும் அல்லது இந்து மரபை எதிர்க்கும் அரசியலை
கிண்டல் செய்வதே நோக்கம் என்றும் புரிந்து கொள்ளலாம் அதற்கு அவருக்கு பூரண உரிமைகள்
இருக்கவே செய்கிறது .
ஆகவே கம்யூனிசம் சார்ந்த போலி தனங்களே கம்யூனிசம் என்று உண்மை உண்மை என்று
புலம்புகிறார் சுரா உண்மையை அறியும் நோக்கில் வாசகர்களை தள்ளிவிடாமல் சிவனேன்னு சும்மா இருக்க சொல்கிறார்
உண்மை என்பது பாத்லெஸ் லேண்டுன்னு ஜெகே சொன்னது வேறு உண்மை ,
கடந்த காலத்தின் அமுக்க பேய்கள் எதார்த்தத்தை காண விடுவதில்லை என
மார்க்ஸ் சொல்வது வேறு உண்மை .
சுரா சொல்வது அவருடைய கருத்தியல் சார்ந்த உண்மை
அவரது கருத்தில் எதுன்னு சொல்லாததால் நம்மால் அவரது கருத்தை கிண்டலடித்து சுரா சில குறிப்புகள் எழுத முடியவில்லை }
..........அதில் ஒரு வரி
வரும் குழந்தைகள் விளையாடும் பொம்மை அதன் உணவை விட முக்கியம் என்ற வாரு எழுதி செல்லும்
சுரா விட அவரது கருத்தை எழுத்து தளத்தில் கொண்டுவந்தது செயமோகன் தான் என்பேன்.
நிலபிரபுத்துவ
இந்தியாவில் சாதி அதன் சேவையை செவ்வனே செய்தது அந்த உற்பத்தி உறவுகள் சமூகத்தின் உற்பத்தி
சக்திகளின் வளர்ச்சியை தாக்குபிடிக்க முடியாமல் அழிந்து போனதும் .
சாதியும் அழிந்து
போக ஆரம்பித்தது- இது உடனே திரையை விலக்குவது போல நடக்காது நிறைய அவகாசம் எடுத்து கொள்ளும்
ஆனால் சாதி அழிவு என்பது தவிர்க்க முடியாது என்பது அதன் உள்விதியை கொண்டு சொல்லலாம்
எதார்தமானவை அனைத்து
அவசியமானது
என்ற ஹெகலின் கோட்பாட்டின்
படி சாதி அன்று எதார்த்தமானது அதனால் அவசியமாக இருந்தது சாதி இன்று எதார்த்தமாக இல்லை
அதனால் அவசிய மற்று போனது.
அடி கட்டுமானம்
என்பது ஏறத்தாழ மாறி விட்டது – மேல் கட்டுமான மாற்றம் என்பது மெதுவாக வந்தே தீரும்
.
ஆனால் நம்ம ஜெயமோகன்
என்ன சொல்றாருன்னா. சாதி ஒரு தேவை அதனால இன்னும் நீடிச்சி நிக்குதுன்னு – தவறு சாதி
என்பது தற்போது எதிலும் இல்லை திருமண உறவுகளில் தவிர .
மேலும் சாதிக்காரன்
என்று சொல்லவே கிராமங்களில் கூட கூசுகிறார்கள்.
நிலம் வைத்திருப்பவனே
விற்றுவிட்டு வேலைக்கு போக எத்தனிக்கும் போது நிலபிரபுத்துவம் தாறுமாறாய் முதலாளித்துவ
கொள்கைகளால் அடிவாங்கும் போது கொங்கு நாட்டின் கவுண்டர்கள் . வேண்டுமானால் சாதியை கட்டி
காப்பாத்தி அதற்கு அலங்காரம் செய்யலாம் –ஆனால் அது உடைந்தே தீரும்.
அடுத்து காந்தி
சாதியை ஆதரித்தார் பிறகு எதிர்த்தார் என்பதெல்லாம் அவருடைய கருத்து தேடலே மேலும் அம்பேத்கருடன்
நடந்த விவாதங்களே என்று சொன்னாலும் .
காந்தி அல்லது
அம்பேத்கர் அல்லது பெரியார் யாராக இருந்தாலும் சாதிய ஒழியனும்னு அவங்க ளுடைய மன ஆசையால்
சாதி ஒழியவில்லை .
ஆகவே – சாதி குறித்து
செயமோகன் என்ன சொன்னாருன்னு தேடும் தம்பிகள் வரலாற்றை பொருள்முதல் வாத ரீதியா ஆராயும்
படியும் கேட்டு கொள்கிறேன்.
1. ஆனால் உண்மையில் இந்த நிராகரிப்பு என்பது நம் படித்தவற்கத்தின் நாக்குகளில் மட்டுமே இருந்தது. நெஞ்சில் நிகழவில்லை. இக்கணம் வரை அப்படித்தான். ஏன் என்றால் அவனுக்குள் சாதியைப்பற்றிய எந்த விவாதமும் நிகழவில்லை. அவ்வாறு விவாதம் நிகழ்ந்திருந்தால் சாதியின் சமூகப்பங்களிப்பு குறித்து அவன் சிந்தனை செய்திருப்பான். இப்போதும் சாதியைச் சுமக்க அவனுக்கு என்ன காரணங்கள், கட்டாயங்கள் உள்ளனவோ அந்தக் காரணங்கள் எல்லாமே விவாதத்துக்கு வந்திருக்கும். அவற்றை வேறு எவ்வகையில் தாண்டிச்செல்ல முடியும் என்று பார்த்திருப்பான். அந்த வழிமுறைகள் அவனுக்கு உதவியிருக்கும்.
2. ஆகவே சாதி வெள்ளையர் சொன்னதுபோல இந்திய சமூகத்தில் ஒரு முற்றிலும் எதிர்மறையான ஒரு கூறு அல்ல. மிக ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றிய, ஆற்றி வருகிற ஓர் அமைப்பு. ஆகவேதான் சாமானிய இந்தியன் சாதியைக் கைவிடத் தயாராக இல்லை. இதுவே இன்றும் இந்தியாவின் யதார்த்தம் என்பதை வழக்கமான கோஷங்களை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு கொஞ்சம் திறந்தமனத்துடன் நோக்கினால் புரிந்துகொள்ள முடியும்.
(இவர் ஒருத்தர்தான் ஏறத்தாழ வன்னியர் சங்க தலைவர்
மாதிரி பேசுகிறார்)