சாதியும் காரல்மார்க்சும் -ஜெயமோகனும்












நாம் சாதிகுறித்து நமது வாழ்நிலை தரும் அனுபவங்களுடனும் – காரல்மார்க்ஸ் போன்ற தத்துவஞானிகளுடனும் – எதிர் திசையில் இயங்கும் சாதி ஆதரவு எழுத்தாளர்களுடனும் நமது கருத்துக்களை உரசி பார்க்கும் நிலமையில் இருக்கிறோம்.
இது சரி என்றும் தவறு என்றும் கொள்ளாமல் சமூக இயக்கத்தில் சாதி வகிக்கும் பாத்திரம் என்ன என்பதை குறித்த பார்வையாக கொள்ளலாம்.
சாதி –நமது தொழில்களை படைத்ததா?

தொழில்கள் தாம் சாதி என்ற கட்டமைப்பை உருவாக்கியதா என்றால்
தொழில்தான் ?

ஜெயமோகன் போன்றவர்கள் நிறுவ முயன்று வருவது சாதி என்பது பழங்குடியினரிடையே இருந்து அப்படியே உருமாற்றம் பெற்று வந்த கருத்தியல் அதற்கும்பொருளாதயா உலகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் .
எப்படி முருகன் ஏழைக்கும் பணக்காரனுக்கும் கடவுள் என்பதை போல
சாதி என்பதும் ஏழை பணக்காரன் அவன் வாழ்நிலையை சாராதது என்றும் சாஸ்வதமானது நிலையானது என காட்ட விளைகிறார்கள்.

இடையில் சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவலை உச்சி மோர்ந்து பாராட்டி இருக்கிறார் ஜெயமோகன்.

சாதி என்பது உழைப்பு பிரிவினைதான் என்கிறார் காரல்மார்க்ஸ்
மிகவும் கீழ் நிலைசாதிகள் உழைக்காமல் வாழ முடியாது
மிகவும் மேல் நிலை சாதிகள் உழைக்காமல் வாழ முடியும் என்பதும் ஒரு வர்க்க பிரிவினைதான் .
/
வர்க்க பிரிவினை என்ற திரவத்தை ஊற்றி பாட்டிலில் சாதி லேபிள் ஒட்டி இருக்கிறார்கள்
காரல் மார்க்ஸின் கோட்பாடு உற்பத்தி உறவுகளை சார்ந்தது.
உற்பத்தி உறவுகளை தவிர சாதியில் வேறு எதுவும் இல்லை.
1.துணி துவைக்கும் சாதிக்கு நிலம் இல்லை அதன் கடன் முழுக்க முழுக்க அந்த ஊர் அனைத்து மக்களுக்கு துணி துவைக்க வேண்டும் அதுவும் பரம்பரையாக அதைத்தான் செய்யவேண்டும் என்பது சாதி.
2.துணியை துவைக்கலாம் / மேலும் படித்து /தொழில் செய்து பதவிக்கு வரலாம் என்பது வர்க்கம் .
வர்க்க மாக பிரிந்தால் எளிதில் உடைந்துவிடும் என்பதை கட்டி படுத்தவே சாதியாக பிரித்து மத சாயம் பூசி அதை நிலை நிறுத்தினார்கள்
என்னுடைய நண்பர் ஒருத்தர் அமெரிக்காவில் இருந்து ஒவ்வொரு சித்திரை மாதமும் ஆற்றில் அழகர் இறங்கும்போது திருவிழாவுக்கு வந்து பல்லக்கு சுமப்பார்  ஏன் என்று கேட்டால் நம்பிக்கை என்பார்
வழிவழியாக அவர்கள் குடும்பம் பல்லக்கு சுமந்திருக்கலாம் ஆனால் மனதில் ஆழ் படிமங்களில் அதை சாதியாக்கவும் அதை சமய நம்பிக்கையாக்கி சொருகவும் ஒரு நுணுக்கம் வேணும் இல்லையா?

எந்தவொரு நாடும் அல்லது சமூகமும்எந்த ஒரு காலகட்டத்திலும், உழைப்புசார் உறவுகளின்’ அடிப்படையிலேயே வாழ்கிறதுஒரு சமூகத்தின் இயல்பும் அதன் உற்பத்தி உறவின் அடிப்படையிலேயே அமைகிறது.

சாதி அமைப்பு எங்கேயும் இல்லை என்கிறார்கள் ஆனால் சாதி அமைப்பு என்பது உழைப்பு பிரிவினைதான் என்றால் அதில் சுரண்டல் வருகிறது.
சுரண்டல் என்றவுடனே மூலதனம் / மறுமூலதனமும் வருகிறது மார்க்ஸ் வந்துவிடுகிறார்.

//நாம் சாதிகளை அவதானித்தால் – மேலோட்டமாக இருந்தாலும் கூட – அவற்றுள் குறிப்பிட்ட சில  வேறுபாடுகளை உறுதியாகக் காணலாம்அதாவது சில சாதிகள் கீழானதுசில சாதிகள் உயர்வானதுஎந்த அடிப்படையில் நாம் இந்த ‘மேல்-கீழ்’ வேறுபாட்டைக் காண்கிறோம்பொதுவாக சொல்வதானால்நிலம்மூலதனம்பணம் ஆகியவற்றை சொந்தமாகக் கொண்டிருப்பவர்கள்ஆதிக்கம் கொண்டு சமூக அமைப்புமுறை மற்றும் நிர்வாகத்திலும் ஈடுபடுபவர்கள் மேல் சாதியினர்வாழ்வாதாரத் தேவைகளுக்குக் கூட சொத்தில்லாமல் இருப்பவர்கள் கீழ் சாதியினர்அவர்கள் உழைப்பாளிகளாகவும்அடிமைகளாகவும் வாழ்பவர்கள்அவர்கள் மேல் சாதியின் ஆதிக்கத்திற்கும் ஆட்சிக்கும் உள்ளாகிகொடிய வறுமையிலும்சமூகத் தாழ்மையிலும் உழல்பவர்கள்.//

ஆக மூளை உழைப்பை கொடுத்த வர்க்கங்கள் உயர்ந்த சாதியாக நிலை நிறுத்தப்பட்டடு உடல் உழைப்பை கொடுத்த சமூகங்கள் தாழ்ந்த சாதியாக நிலைநிறுத்தப்பட்டது .

சாதிய விதிமுறை என்பதுகூட ஒருவகையான உழைப்பு பிரிவினைதான் இல்லையாஅதேபோல்கூட்டுஸ்தாபன (corporations) விதிமுறை என்பது மற்றொரு வகையான உழைப்பு பிரிவினை இல்லையாஇங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கிய உற்பத்தி முறையின் கீழ் உருவான உழைப்பு பிரிவினை 18 ஆம் நூற்றாண்டில் மறைந்து போனது. அதன் பிறகு,  நவீன பெரு-நிறுவன தொழில் நிறுவனங்களில் முற்றிலும் வேறொரு வகையான உழைப்புப் பிரிவினை தொடங்கவில்லையா? (தத்துவத்தின் வறுமைபக். 158ம் மாஸ்கோ 1966)..

மேலும்

847 இல்புருத்தோனின் புத்தகத்திற்கு விமர்சனமாக மார்க்ஸ், தத்துவத்தின் வறுமை’ என்று எழுதினார்அதில் அவர்:

தந்தைவழிச் சமூக அமைப்பின் கீழ்சாதியமைப்பின் கீழ்நிலப்பிரபுத்துவத்தின் கீழ்கூட்டுஸ்தாபன அமைப்பின் கீழ் நிலையான விதிகளின் படி ஒட்டுமொத்த சமூகத்திலும் உழைப்பு பிரிவினை இருந்ததுசட்டம் இயற்றுபவர் இந்த விதிகளை நிறுவினாராஇல்லைஅவை பொருளாயத உற்பத்திச் சூழலிலிருந்து பிறப்பவைபின்னர் அவை சட்டத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டதுஇந்த வகையில்உழைப்பு பிரிவினையில் பல்வேறு வகைகள் சமூக அமைப்பின் அடித்தளங்கள் ஆகுகின்றன. (
...

ஜெயமோகன் எழுதுகிறார்…

//சாதியைப்பற்றி பேசாமல் இருப்பதனால் உருவாகும் அறியாமை காரணமாக நாம் சாதியை ஒற்றைப்படையாக புரிந்து வைத்திருக்கிறோம். அதாவது சாதி என்றால் ஒரு மாபெரும் சமூக அநீதி, ‘யாரோஉருவாக்கி நம்மிடம் திணித்தது, அதை வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது. ஆனால் நாம் அதை விடவும் மாட்டோம். அந்தரங்கமாக பெருமிதமும் கொள்வோம்.
சாதிக்கு இரு முகங்கள். ஒன்று அது ஓர் மரபடையாளம். இரண்டு, அது சமூக அடுக்கதிகாரத்தில் ஓர் இடம். இந்த இரு முகங்களில் இரண்டாவதை நவீன யுகத்தில் முழுமையாகவே நிராகரிக்க வேண்டும். ஏனென்றால் அது சென்றகாலத்து பொருளியல் தேவைகளுக்காக, சென்றகால பண்பாட்டுப்புழக்கம் காரணமாக உருவாகி வந்த ஒன்று. முந்தையது அப்படி அல்ல.
இந்தியாவில் எந்த ஒரு சாதியை எடுத்துப் பார்த்தாலும் அது சாதிக்குள் சாதியாக சென்றுகொண்டே இருக்கும். உபசாதிகள். அதற்குள் கூட்டங்கள். அதற்குள் குலக்குழுக்கள். அதற்குள் குடிகள். சாதி என்பது பிரிந்து பிரிந்து உருவானதல்ல, தொகுத்து தொகுத்து உருவானது. குடிகள் இணைந்து குலங்களும் கூட்டங்களும் ஆகி சாதியாகின்றன.
அந்தப் பரிணாமமே நம் சமூக வரலாறு. அதில்தான் நம்முடைய ஆழ்மனதை உருவாக்கிய அத்தனை பண்பாட்டுக்கூறுகளும் உருவாகி வந்திருக்கின்றன. அந்தப்பண்பாட்டுக்கூறுகள் இல்லையேல் நமக்கு கலைகளும் இலக்கியமும் இல்லை. நமக்கு சுய அடையாளமும் இல்லை. நாம் நவீன முதலாளித்துவம் வடித்தெடுத்த சுத்தமான நுகர்வு இயந்திரங்கள் மட்டுமே.//


சாதிக்கு இரண்டு முகமல்ல பல முகங்கள் இருக்கலாம் அதில் ஒன்றை நிராகரித்து விட்டு இன்னொன்றுக்கு உக்கார்ந்து பெருமிதம் கொள்ளலாம் என சுத்தி வளைச்சு சாதி இருக்குன்னு சொல்கிறார் இந்த கட்டுரையில் .
ஒரு சாதிக்காரன் தனது சாதியை பற்றி பெருமிதம் கொள்ளும்போதே
இன்னொரு சாதிக்காரன் தான் அழுத்தப்பட்டு கிடந்ததை நினைத்து வேதனை படவும் தனது சாதிகாரர்களோடு ஒன்றிணையவுமே முயலுவான்.
ஆகவே சாதியை கடந்த வர்க்கமாக எண்ணிப்பார்க்கவிடாமல் செய்யும் வேலையை இந்த எழுத்தாள அறிவு ஜீவிகள் செய்கிறார்கள்
மிக நுணுக்கமாக .

நமக்கு சுய அடையாளமாக சாதி இருந்த காலகங்கள் நிலவுடைமை சமூகமேதற்போது கவுண்டர் சாதி படம் எடுத்தால் கூட ஓடாது.
http://www.jeyamohan.in/7305#.VXVYwlLcDIU
சாதியை கடந்து அது பண்பாட்டு நீட்சியாக அது நீடிக்கும் என சொல்லி
அதை தாங்கி பிடிக்க முனைகிறார்
//சாதி என்றும் அழியாது. நவீன முதலாளித்துவம் மூலம் சாதியின் அடுக்குமுறை காலப்போக்கில் பொருளிழக்கும்போது பண்பாட்டு நீட்சி என்ற முறையில் அது மேலும் முக்கியத்துவம் பெறும் என்றே நான் நினைக்கிறேன். உலகம் எங்கும் ஏதேனும் முறையில் மனிதர்களிடம் பிறப்பு சார்ந்து உருவாக்கப்படும் பண்பாட்டுச்சின்னங்கள் நீடிக்கத்தான் செய்கிறன. அவற்றை உணர்ச்சிகள்சார்ந்து ஆராயாமல் அறிவார்ந்து அணுகும் முறை மட்டுமே புதிதாக உருவாகி வரும். அன்று எவரும் சாதிகுறித்து வெட்கவும் மாட்டார்கள் பெருமிதம் கொள்ளவும் மாட்டார்கள்.//\


நவீன முதலாளித்துவம் அதன் எதார்த்தத்தை இழந்து அது அவசியமற்றதாகும் போது சோசலிசத்தை விட்டால் வேறு வழி இல்லை
சோசலிச எதார்த்தத்தில் சாதிக்கான இருத்தல் இல்லை .





 ---------------------------------------

டி டி கோசாம்பி:
-------------------------------------------------------------------------------------------------------------------------
  • மார்க்சியம் சிந்தனைக்கு மாற்று அல்ல; அது பகுப்பாய்வுக்கானதொரு சாதனமே. [10]
  • மார்க்சியத்தை ஒரு தானியங்கி இயந்திரத்தின் உபயோகிப்புக் குறிப்புகளாகவோ அல்லது ஒரு பொன்மொழிகளின் கஜானாவாகவோ மாற்றிவிடக் கூடாது. [11] 
  • -------------------------------------------------------------------------------------------------------------------------------
  • “சாதியை நிலைநிறுத்துவதில் சமய நம்பிக்கைகளுக்கு முக்கிய பங்குண்டு என்பதைக் கோசாம்பி வலியுறுத்தினார். பண்டை இந்தியாவில் உணவு சேகரிக்கும் இனக்குழுக்கள் ஓரளவு எளிதான வாழ்க்கை வாழ்ந்ததால், உணவு உற்பத்தி செய்யும் குழுக்களுக்கு அருகே வசித்தனர். இரு வருக்குமிடையேயான உற்பத்தி உறவுகள்; சமயம் மற்றும் நம்பிக்கைகளின் வழியாக ஒழுங்குபடுத்தப்பட்டன. (ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நிலவிய வன்முறை வழி உறவுகள் போல் இல்லாமல் இங்கே சாதிகள் மூலமாக இவை நிகழ்த்தப்பட்டன.) ஆரம் பத்தில் வேளாண்மை விரி வாக்கத்திற்கு இது பயன் பட்டாலும், பின்னர் கிராமப் பொருளாதாரம் தேக்க நிலை யை அடைந்த போது, உழைப் பவர் மீது சாதி மற்றும் வர்க்கம் என்ற இரட்டைச் சுமையைத் திணித்தது. இது வளர்ச்சிக்குப் பெருந்தடை யாக உருவாகியது. (Suvira Jaiswal; Kosambi On Caste; பக்கம் 144)
  • --------------------------- 
  • கோசாம்பியைப் பொறுத்தவரை, பண்டை இந்தியாவில் உணர்வுபூர்வ மான யதார்த்த வாழ்க்கை யுடன் தொடர்பை இழந்து விட்ட மொழி சமஸ்கிருதம். உயர்வர்க்கத்தின் அதிகார யுக்தியாகவும், அதிகாரத் தை நியாயப்படுத்தும் கருவி யாகவும் மட்டுமே சமஸ் கிருதம் செயல்பட்டது. (Kesavan Veluthat:Kosambi On Sanskrit : 166)---------------------------------------------------------------------------------------------------------
  •  
    பார்த்திரி ஹரி என்ற வடமொழிக் கவிஞர் எழுதிய ‘சாத்தகாத்ரயம்’ என்ற நூலை கோசாம்பி பதிப் பித்து வெளியிட்டுள்ளார். அப்பதிப்பில் ‘To the sacred memory of the great and glorious pioneers of today’s society, Marx, Engels, Lenin.’ என்று குறிப்பிட்டு மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகிய மூவருக்கும் காணிக்கையாக்கி யுள்ளார். உண்மையான தாகவும் உணர்ச்சிபூர்வமான தாகவும் இது அமைந்துள்ள தாகக் கருதிய செர்பிரியா கோவ், மத்தியகால இந்தி யாவின் தொடக்க காலத் தில் வாழ்ந்த வடமொழிக் கவிஞருக்கும் உலகத்தை மாற்றும் கோட்பாட்டுக் கும் என்ன தொடர்பு என்ற வினாவை கோசாம்பியிடம் எழுப்பினார்.
    இவ்வினாவுக்கு கோசாம்பி பின்வரு மாறு விடையளித்தார்: சுரண்டுபவர்களின் காலடியில் தன் கண்ணியத்தை இழந்தது வே அவனைக் கவிஞனாக மாற்றியது. முதலாளித்துவம் குறித்த புரிதலை, பொருளி யல் நூல்களை விட பால்சாக்கின் நாவல் கள் வெளிப்படுத்துவது போல் பார்த்திரி ஹரியின் கவிதை வரிகளும், அவன் கை யாண்ட மரபுகளும், மத்திய கால இந்தியா வைப் புரிந்துகொள்ளத் தர்ம சாஸ்திரங் களைவிடத் துணைபுரிகின்றன. இறுதி யாகக் கோசாம்பி கூறியது இதுதான்: மனிதனை மனிதன் ஒடுக்குவதை ஏற்றுக் கொள்ளாததே இலக்கியப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளது. கோசாம்பியை மார்க்சியத்திலிருந்து பிரிக்க முயல்வோர் படிக்க வேண்டிய பகுதி இது.

    ஆகவே  டி டி கோசாம்பியை ஜெயமோகன் எப்போதுமே அவரது சொந்த கருத்தியலுக்கு பயன்படுத்த முடியாது .


    சுருக்கம்:
    எனது முந்தைய கட்டுரையிலும் , இந்த கட்டுரையில் நான் சொல்ல வருவது சாதி குறித்த விவாதங்களுக்கு இணையத்தில் இருப்பவர்கள் உடனே தேடி பார்ப்பது ஜெயமோகனைத்தான் .

    அவரோ ஆண்டைகள் மற்றும் முதலாளித்துவ சார்பு எழுத்தார் என்பதை மறைத்து - திரித்து எழுதி அவர்களது ஆத்மாவுக்கு ஒரு தற்கால திருப்தியை கொடுக்கிறார்.

    அவர்களை பிந்தொடரும் நிழலின் குரலுக்கு ஜெயமோகனே ஒரு இருண்ட பதிலை சொல்லி கேள்விகளில் இருந்து தப்பிக்க சொல்வதுடன் 
    சாதிக்கு ஆதரவான மனசாட்சியை கொடுக்கிறார்.

    பிஜேபி , இந்துமுன்னனியின் கருத்துக்களை விட இவர் போன்றோரின் கருத்துக்கள் மிகவும் நுட்பமாக எதிர்கொள்ளவும் மறுத்துரைக்கவும் வேண்டும்  


    கீழ்கண்ட சுட்டியில் இந்தியாவை பற்றி மார்க்ஸ் புத்தகம் இறக்கி படிக்கவும் :
    http://communismintamil.blogspot.in/2011/07/blog-post.html

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post