தனிநபர் சார்ந்த தீர்வும் அரசியல் சமூகம் சார்ந்த தீர்வும் குறித்து சிந்திப்போம்,
அப்பாடா ஒருவழியாக மேகி நூடுல்ஸுக்கு தடை வந்துடுச்சு யிப்பி
நூடுல்ஸ் விளம்பரத்தை பார்த்துட்டு அதை சாப்பிட்டால் புரூஸ்லி மாதிரி சண்டை போடலாம்னு
நம்பிட்டான் என் பையன் அவனிடம் போய் இதில மோனோ சோடியம் குளூடேட் அதிகமா இருக்குன்னு
சொல்ல முடியுமா?
இதில் பார்க்க வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கு பேக்கிங் செய்யப்பட்ட
உணவுகளை விற்பனைக்கு அனுமதி அளிக்கும் அரசின் நிறுவனம் இதை ஆராய்ச்சி செய்யாமல் ஏன்
வெளியிட்டார்கள்.
ஒரு விளம்பரத்தில் நடிப்பதால் கிடைக்கும் காசை கருத்தில் கொள்ளும்
நடிகர்கள் ஏன் எந்த டேடா வெரிபிகேசனும் செய்வதில்லை.
விளம்பரத்தை பார்த்து வாங்கி சாப்பிடும் நாம் என்ன வகையான நுகர்வோர்.
அடுத்து பாரம்பரியமான நமது உணவுகள் எங்கே போச்சு .
எல்லாமே வேகமான வாழ்க்கையில் பாரம்பரிய உணவு வகைகளை நாம் மறந்து
விட்டோம் ஏன் விவசாயியே இந்தியாவின் பாரம்பரிய நெல்மணிகளை மறந்து மாண்சாண்டோ விதைகளை
வாங்குகள் என்கிற அரசின் பேச்சைத்தான் கேட்கவேண்டி இருக்கு.
சரி அரசை விடுவோம் நம்ம பிரச்சனைக்கு வருவோம் . நாம் நமது குழந்தைகளின்
மேல் அக்கரை கொண்டுள்ளோம் என்றால் ஏன் பேக்ட் ஐயிடங்களை வாங்கி கொடுக்கிறோம் , இது
குறித்து சிந்திக்க வேண்டாமா?
1.புட்டு 2.இட்லி 3.தோசை 4.சப்பாத்தி இதெல்லாம் செய்து கொடுக்க நேரம் ஆகும் அதற்குரிய உழைப்பை போடனும் அதற்காக நாம் ரெடிமேட் உணவுகளை நோக்கி ஓடுகிறோம்.
உழைப்பில்லாமல் கிடைக்கும் எதுவுமே அதன் தீய விளைவை தரும்.
அடுத்து இன்னொரு விசயம் இது ஒரு கலாசார சீர்கேடும் கூட
பாஸ்ட் புட் சாப்பிடுவதும் அதை பரப்புவதும் மிகப்பெரிய கலாசாரா சீர்கேடு
ஒருத்தர் இன்னைக்கு நான் தண்ணி அடித்தேன் என எழுதுவதும் பரப்புவதும் போலா
மைக்ரோ லெவலில் இந்த சீர்கேடு பரவுகிறது .
என் குழந்தை நூடுல்ஸ்தான் சாப்பிடுவான்னு ஒரு அம்மா சொன்னா அது ஒன்றும் பெருமை இல்லை .
பச்ச மிளகாயை வைச்சிட்டு பழைய சோறு சாப்பிட்ட எங்கப்பா காலத்து ஆட்கள்
ஒரு மூட்ட அரிசியை நெம்பி தூக்கிடுவாங்க
நூடுல்ஸ் சாப்பிடுற குழந்தைகள் புத்தக பையை கூட தூக்கமுடியலை
(புத்தகம் ஏன் மூட்டையாச்சு என்பது வேற விவாதம்)
அடுத்து சமூகத்தில் இம்மாதிரி கெடுதலான உணவு தயாரிப்பு விற்பவர்களின் பங்கும் அதற்கு விளம்பரத்தில் நடிப்பவர்களின் பங்கு பற்றியும் பார்போம்
1.நுகர்வோரின் உரிமை என்பது மீண்டும் மீண்டும் கேள்விக்கு உள்ளாக்கபடுவதும் சட்டத்தின் மூலம் மட்டுமே ஓரளவு பேரளவு நிவாரணம் என்பதும் ஒழிக்கப்படவேண்டும் .
2.உணவு பொருள் பாதுகாப்பு சட்டம் என்பது விருவிருப்பாக செயல்பட
விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்
3.இம்மாதிரி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அனைத்து பேக்ட் புட்ஸ் அனைத்தையும் சோதிக்க அரசிடம் வலியுறுத்தல் எழுத்து பேச்சு , போராட்டம் ஆகியவற்றின் மூலம் ஏற்படுத்த வேண்டும்.
4.இம்மாதிரி விளம்பரங்களில் நடிக்கும் நடிக நடிகையரை மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு கொண்டு வரவேண்டும்
5.மீடியாக்கள் இதை ஒரு பெரிய விசயமாக கொண்டு செல்ல நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும் .
எதெற்கெடுதாலும் வெளிநாடுகளை ஒப்பிடும் நாம் அவர்களின் உணவு பொருள் தரம் மற்றும் ஆடிட் விசயங்களை கண்டுகொள்வதில்லை
iso22000 என்கிற ஒரு ஸ்டாண்டர் இருக்குன்னு நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்
அதை பாலோ செய்கிற ஐஸ்கிரீம் கம்பெனிகள் மிகவும் குறைவு என்றார் எனக்கு தெரிந்த ஆடிட்டர் ஒருத்தர் .
ஆக தீர்வில்லாதவிசயங்கள் ஏதுமில்லை
செய்தி:
புதுடில்லி:பன்னாட்டு நிறுவனமான, 'நெஸ்லே இந்தியா'வின் பிரபல தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அலுமினியம் கலந்து உள்ளது என, டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும், அந்த உணவு பண்டம், சாப்பிட பாதுகாப்பற்றது எனவும், டில்லி ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பல மாநிலங்களில் மேகி நுாடுல்ஸ் உணவு பாக்கெட்டுகள், கடைகளில் ஷோகேஸ்களில் இருந்து இறக்கப்படுகின்றன.பீகாரில், 'மேகி' நுாடுல்ஸ்சை வாங்கி சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலமில்லாமல் போனதை அடுத்து, மேகி நுாடுல்ஸ்சை தயாரிக்கும், 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர், அதன் விளம்பர படத்தில் நடித்த, பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு பதிவு செய்ய, பீகார் மாநிலத்தின், முசாபர்பூர் மாவட்ட கோர்ட், போலீசுக்கு நேற்று உத்தரவிட்டது.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி, தேவைப்பட்டால், இந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.மேகி நுாடுல்ஸ் உணவு பண்டத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, எம்.எஸ்.ஜி., எனப்படும், 'மோனோ சோடியம் குளுடமேட்' என்ற ரசாயனம் இருந்தது, உ.பி.,யில் கண்டுபிடிக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம், அதன் விளம்பர படங்களில் நடித்த பாலிவுட் நட்சத்திரங்கள் மூவர் மீது எந்த நேரமும் நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.