எப்போதுமே பூனைகுட்டி வெளியில் வர லேட்டாகும் இப்போ மிக விரைவில் வந்துவிட்டது
1.அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிராக எழுதிய நோட்டீஸ்
பாஜக அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாட சொல்லி கேட்டு கொண்டதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அமைந்தது அந்த துண்டறிக்கை
இதோ
இதில் வேறொன்றும் இல்லை இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு .இந்த வேற்றுமைகள் மொழி, மதம் , இனம் சாதி இப்படி எந்த வகையிலும் இருக்கலாம் ஆனால் அதை மறந்து நாம் அனைவரும் கூடி வாழ்வதை ஏற்பதாக சொல்லும் கொள்கை கொண்ட நாடுன்னு இந்தியாவின் செக்யூலரிசத்தை போட்டிருக்காங்க.
0.0001 மக்கள் மட்டுமே பேசும் இந்த சமஸ்கிருதத்தை ஏன் தூக்கி வச்சி யாருக்குமே புரியாத மொழியை கொண்டாட ஒரு வாரம் ஆகஸ்டு 7-13 வரையிலான ஒரு வாரத்தை சமஸ்கிருத வாரமாக அறிவித்து அந்த மொழியை புத்துயிராக்க முயல்கிறார்கள் ..
சமஸ்கிருதத்தை கொண்டாடுவதானது அது மற்ற மொழிகளுடன் கொண்ட தொடர்பை உறுதிபடுத்துவதாகும் என்றும் அதனோடு சமஸ்கிருதத்துக்கும் இந்திய கலாசாரத்துக்கும் உள்ள மிக நெருங்க தொடர்பை நிறுவவும் (establish) என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதன் மூலம் அனைத்து மொழிகளின் தாய் என்கிற ஸ்தானத்தை சமஸ்கிருதத்துக்கு கொடுக்கும் முயற்சி இது .மேலும் வேறுபட்ட கலாசாரங்களை மறுத்து ஒரே கலாசாரத்தை கட்டியமைக்கு முயற்சியாகும்.
அதே நேரத்தில் ராபர்ட் கார்ட்வெல், நோம் சாம்ஸ்கி அலெக்சாண்டர் காண்டிரடாவ் ஆகியோர் தமது நூல்களில் இதை ஏற்கவில்லை .
மேலும் புத்தரும் ,சித்தர்களும் வள்ளலாரும் சமஸ்கிருத ஆதிக்கத்தை ஏற்கவில்லை .
எனவே நாம் ஒரு திறந்த மனதோடு கூடிய அரசியல் கலாசார ரீதியான பாதிப்புகளை பற்றிய கலந்துரையாடல் நடத்துவோம்
நமது இறந்தகால எதிர்கால த்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்வதற்காக ந்னு போட்டு இருக்கு .
ஆனால் இந்த காரணத்தை சொல்லாமல்
/
அட நமது வரலாற்றில் பிரப்பால் பார்பணராக பிறந்த அறிஞர் பெருமக்கள் இதையேதான் செய்துள்ளனர் :
----------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------
இதற்கு பதில்கூறும் விதமாக பெரியார் பேசியது
இதெல்லாம் பேசினால் எப்படி ஐஐடிகுள்ள உங்களை பெரியார் வாசகர் வட்டம் வைக்க விடுங்கா
காரணம் இருக்கு எதேச்சையாக மொட்டை கடுதாசி வரலை சாமிகளே
1.அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிராக எழுதிய நோட்டீஸ்
பாஜக அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாட சொல்லி கேட்டு கொண்டதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அமைந்தது அந்த துண்டறிக்கை
இதோ
இதில் வேறொன்றும் இல்லை இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு .இந்த வேற்றுமைகள் மொழி, மதம் , இனம் சாதி இப்படி எந்த வகையிலும் இருக்கலாம் ஆனால் அதை மறந்து நாம் அனைவரும் கூடி வாழ்வதை ஏற்பதாக சொல்லும் கொள்கை கொண்ட நாடுன்னு இந்தியாவின் செக்யூலரிசத்தை போட்டிருக்காங்க.
0.0001 மக்கள் மட்டுமே பேசும் இந்த சமஸ்கிருதத்தை ஏன் தூக்கி வச்சி யாருக்குமே புரியாத மொழியை கொண்டாட ஒரு வாரம் ஆகஸ்டு 7-13 வரையிலான ஒரு வாரத்தை சமஸ்கிருத வாரமாக அறிவித்து அந்த மொழியை புத்துயிராக்க முயல்கிறார்கள் ..
சமஸ்கிருதத்தை கொண்டாடுவதானது அது மற்ற மொழிகளுடன் கொண்ட தொடர்பை உறுதிபடுத்துவதாகும் என்றும் அதனோடு சமஸ்கிருதத்துக்கும் இந்திய கலாசாரத்துக்கும் உள்ள மிக நெருங்க தொடர்பை நிறுவவும் (establish) என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதன் மூலம் அனைத்து மொழிகளின் தாய் என்கிற ஸ்தானத்தை சமஸ்கிருதத்துக்கு கொடுக்கும் முயற்சி இது .மேலும் வேறுபட்ட கலாசாரங்களை மறுத்து ஒரே கலாசாரத்தை கட்டியமைக்கு முயற்சியாகும்.
அதே நேரத்தில் ராபர்ட் கார்ட்வெல், நோம் சாம்ஸ்கி அலெக்சாண்டர் காண்டிரடாவ் ஆகியோர் தமது நூல்களில் இதை ஏற்கவில்லை .
மேலும் புத்தரும் ,சித்தர்களும் வள்ளலாரும் சமஸ்கிருத ஆதிக்கத்தை ஏற்கவில்லை .
எனவே நாம் ஒரு திறந்த மனதோடு கூடிய அரசியல் கலாசார ரீதியான பாதிப்புகளை பற்றிய கலந்துரையாடல் நடத்துவோம்
நமது இறந்தகால எதிர்கால த்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்வதற்காக ந்னு போட்டு இருக்கு .
ஆனால் இந்த காரணத்தை சொல்லாமல்
/
இவர்கள் இப்படி அரசின் கொள்கைகளை
விமர்சிப்பது தவறாகாது. உண்மையில் அது உரிமையும்கூட. ஆனால் அண்ணல்
அம்பேத்கரின் படம் போட்டு, அவரின் பெயரில் அமைப்பு வைத்துக்கொண்டு
இருக்கின்ற இவர்கள் சமஸ்கிருதம், இந்தி மொழிகளைப் பற்றி அண்ணல் அம்பேத்கர்
என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மறைத்துவிட்டார்கள்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சமஸ்கிருதம்
தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்திலேயே குரல்
கொடுத்தார். சமஸ்கிருத த்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களே என்று பிடிஐ நிருபர்
கேட்கும்போது அண்ணல் அம்பேத்கர், அதில் என்ன தவறு என்று திருப்பிக்
கேட்டார். இதுபற்றிய செய்தி அன்று பலப் பத்திரிகைகளிலும் வந்துள்ளது.//
இப்படி எழுதி இருக்கிறார் திரு http://www.tamilhindu.com/2015/06/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/
சரி அம்பேத்கார் என்ன சொன்னாரு பெரியார் என்ன சொன்னாருன்னு பேசுவதற்கு ஒரு அழைப்புதானே அது அதில் என்ன தவறு இருக்கு
அதாவது அம்பேத்கர் இப்படி சொல்லி இருக்காராம்
//
அண்ணல் அம்பேத்கர் எழுதுகிறார் :
..பிராந்திய மொழி அந்த மாநிலத்தின்
ஆட்சிமொழியாக இருக்க கூடாது. இதற்கு அரசியல் சட்டத்திலேயே வகை செய்ய
வேண்டும். இதுவே இந்த அபாயத்தைச் சமாளிப்பதற்கான ஒரே மார்க்கம் என்பது என்
கருத்து. இந்தியே மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இந்த
நோக்கத்திற்காக இந்தியா தயாராகும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம்.
இந்தியர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா? அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்
மொழிவாரி மாநிலங்கள் ஓர் அபாயமாக மாறுவது எளிதாகிவிடும்.
ஒரே மொழி இருந்தால் அது மக்களை ஒன்றுபடுத்தும்.
இரண்டு மொழிகள் மக்களை நிச்சயம் பிளவுபடுத்தவே செய்யும். இது அசைக்க
முடியாத விதி. நாட்டின் கலாச்சாரம் மொழியால்தான் போற்றிப்
பாதுகாக்கப்படுகிறது. இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கவும் ஒரு பொதுக்
கலாச்சாரத்தை வளர்த்து வளப்படுத்தவும் விரும்புவதால் இந்தியை தங்கள்
மொழியாக ஏற்றுக் கொள்வது அனைத்து இந்தியர்களாலும் மறுக்க முடியாத
கடமையாகும்.//
இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏன் நடைபெற்றது (இந்தியின் மூலம் பிராந்திய மொழி ஆதிக்கத்தை செய்கிறார்கள் என்றுதானே)இதை எல்லாம் ஏன் செய்தாங்க எதுக்கு செய்தாங்கன்னு நம்ம இளைய தலைமுறைக்கு சொல்லவில்லை
சரி அதெல்லாம் எதுக்கு அம்பேத்கார் என்ன சொன்னார் என்பதை அவங்க பேசிட்டு போறாங்க அதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்கு இல்லையா?
மோடி அரசு இந்துத்துவா நிலைபாட்டை கொண்டுள்ளதுன்னு ஒரு நோட்டீஸ்
அதில் ஒரு வரி 100 %அந்நிய மூலதனத்தை கொண்டு வரும் மோடி அரசு இந்திய குழந்தைகளின் வாழ்வாதாரத்தை அந்நியர்கள் சுரண்ட அனுமதி அளிக்கிறது . (தற்போதைய குழந்தை தொழிலாளர் சட்ட திருத்த மசோதவை குறிக்கிறது)
அதாவது அரசின் கொள்கைகளை விமர்சிக்கிறது /
அரசு மக்கள் வரிப்பணத்தில் இயங்குது பிஜேபி காசில் இல்லை என்பதும்
ஐ ஐடி மக்கள் வரிபணத்தில் இயங்குது பிஜேபி காசில் இல்லை என்பதும்
படித்தி பண்டியர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை
அரசு , அரசின் கொள்கைகளை எதிர்த்தால் தடை என்பது அராஜகம் அல்லவா?
தடைக்கு காரணம் பாருங்க நேர்மையா மோடி அரசு எதிர்ப்புன்னு சொல்லலை
ஒரு அனாமத்து கடிதம் வந்துச்சு அதில ஐஐடி யில் இயங்கும் வாசகர் வட்டம் வெறுப்பை வளர்க்கும் விதமாக இயங்குதுன்னு அதில இருக்கு அதனால உங்க கருத்தை சொல்லவும்னு ஒரு கடிதம் மினிஸ்டிரியில் இருந்து வருது .
உடனே தடை செய்துட்டாங்க வாசகர் வட்டத்தை
1.காரணம் கேட்கவில்லை
2.அவகாசம் கொடுக்கவில்லை
எதுவுமே ஜனநாயக ரீதியா செய்யலை
இதில் மத்திய அரசின் அரசியல் மிக தெளிவா இருக்கு அதன் கொள்கைகளை கேள்வி கேட்டதற்காக அந்த வாசகர் வட்டம் தடை செய்ய படுகிறது.
எவ்ளோ ஒரு சப்பையான காரணம் பாருங்க ஐஐடி பேரை போட்டு இருக்காங்களாம் . எனக்கு தெரிஞ்சு மேற்கண்ட நோட்டீசுகளில் மத்திய அரசின் நிலைபாட்டை கேள்வி கேட்டு இருக்கிறார்களே தவிர ஐஐடியை பற்றி எதும் இல்லை
உங்களுக்கு தெரிகிறதான்னு பாருங்க
1.மத்தியில் ஆளும் எந்த கட்சிக்கும் அதன் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுதந்திரத்தை நமது அரசியல் அமைப்பு தருகிறது ஆனால் அரசின் கீழ் செயல்படும் பள்ளிகள் கல்லூரிகளில் இந்திய அரசியல் சாசனத்தை மீறி விசயங்களை செய்ய கூடாது ( சமஸ்கிருத வாரம் மாதிரியான விசயங்கள் )
2.இந்தியா ஒரு மொழி கொண்ட நாடு அல்ல அதன் கலாசாரம் இனம் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது . வேற்றுமையை நீக்கி ஒற்றுமையை வலுகட்டாயமா புகுத்த கூடாது
(லெனின் ஒரு இடத்தில் சொல்வார் 4 பேர் ஒரு தேசிய இனம் என்றால் கூட அவர்களின் கலாசாரம் உணவு விசயங்களை பாதுகாக்க வேண்டும் - தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை நூலில்)
7 கோடி பேர் இருக்கோம் தமிழ் நாட்டில் மற்ற மாநிலங்களில் எத்தனை கோடி பேர் இருக்காங்க அதில் 0.0001 சதவீதம் மக்கள் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள் என்றால் அந்த மொழியை ஏன் கொண்டாட வேண்டும் .
மொழி கொள்கையை பொறுத்தவரை கம்யூனிஸ்டுகள் ஒரு சமமான போக்கை கொண்டிருக்க வேண்டும் எனது மொழி உயர்ந்தது இன்னொரு மொழி தாழ்ந்தது என்ற எண்ணம் வரக்கூடாது என்கிறார் லெனின்
இங்கே சமஸ்கிருதம் உயர்ந்தது என்கிற எண்ணம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது .
2.இந்தியா ஒரு மொழி கொண்ட நாடு அல்ல அதன் கலாசாரம் இனம் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது . வேற்றுமையை நீக்கி ஒற்றுமையை வலுகட்டாயமா புகுத்த கூடாது
(லெனின் ஒரு இடத்தில் சொல்வார் 4 பேர் ஒரு தேசிய இனம் என்றால் கூட அவர்களின் கலாசாரம் உணவு விசயங்களை பாதுகாக்க வேண்டும் - தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை நூலில்)
7 கோடி பேர் இருக்கோம் தமிழ் நாட்டில் மற்ற மாநிலங்களில் எத்தனை கோடி பேர் இருக்காங்க அதில் 0.0001 சதவீதம் மக்கள் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள் என்றால் அந்த மொழியை ஏன் கொண்டாட வேண்டும் .
மொழி கொள்கையை பொறுத்தவரை கம்யூனிஸ்டுகள் ஒரு சமமான போக்கை கொண்டிருக்க வேண்டும் எனது மொழி உயர்ந்தது இன்னொரு மொழி தாழ்ந்தது என்ற எண்ணம் வரக்கூடாது என்கிறார் லெனின்
இங்கே சமஸ்கிருதம் உயர்ந்தது என்கிற எண்ணம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது .
அட நமது வரலாற்றில் பிரப்பால் பார்பணராக பிறந்த அறிஞர் பெருமக்கள் இதையேதான் செய்துள்ளனர் :
சி.ராஜகோபாலாச்சாரியார்
தமது முன்னோர்கள் தமக்கு வைத்துவிட்டுப்
போன பழைய பெருமைகளைப் புறக்கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமைகள்
ஸம்ஸ்கிருதத்துடன் இணைக்கப்பட்டவை.
பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளி
லிருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு
வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால்
மகா பெரிய விபத்தாகும்.
அது பணம் இருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்குப் பிச்சையெடுப்பதற்கு ஒப்பாகும்.
ஒரு பள்ளிப் படிப்பில் ஸம்ஸ்கிருதம்
சேர்ந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஹிந்துவாயிருந்தாலும்,
முஸ்லீமாயிருந்தாலும் நமது பழைய பெருமைகளுக்குத் திறவுகோல்
ஸம்ஸ்கிருதம்தான்.
புத்தர்கள், ஹிந்துக்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள் முதலியவர்களுக்கு ஸம்ஸ்கிருதத்தைத் தவிர வேறு பெருமைகள் கிடையாது.
இப்போதைய நவீன கல்விகளுடன்
ஸம்ஸ்கிருதத்தையும் சேர்த்துக் கற்றுக் கொண்டால் இன்னும் ஒரு தலைமுறைக்குள்
ஹிந்து மதம் இப்போது இருப்பதுபோல் இராது. ஸம்ஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை.
அதை ஈசுவர பாஷை என்றுகூடச் சொல்லலாம்.
_ சென்னை லயோலா கல்லூரி ஸம்ஸ்கிருத சங்கத்தின் துவக்க விழாவில் 24.7.1937 அன்று பிரதமர் அமைச்சர் சி.ராஜகோபாலாச்சாரியார் பேசியது.----------------------------------------------------------------------------------------------
1914-_1919 ஹோம் ரூல் இயக்கக் காலத்தில்
நான் இந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் செய்து, இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி
தேவையென்றும், அந்தப் பொதுமொழி சமஸ்கிருதம் என்றும் பிரச்சாரம் செய்து
வந்தேன். அப்போது கொண்ட இந்தக் கருத்தை பின்னரும் நான் விடவில்லை. உண்மைத்
தேசிய மொழியும் ஹிந்தி மொழியின் தாயுமான இந்த சமஸ்கிருத மொழி,
எளிமையாக்கப்பட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவும் பேசவும் தகுந்ததாகச்
செய்யப்பட வேண்டும்
_அண்ணாமலைப் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் சர்.சி.பி.ராமசாமி அய்யர், உதகமண்டலத்தில் (5.6.53) நடைபெற்ற
இந்தி பிரசார சபைக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசியதிலிருந்து.
-----------------------------------------------------------------------------------------------------------------
என் கைக்கு அதிகாரம் வந்தால் நான்
சர்வாதிகாரி இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச்
செய்வேன். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அத்தனைப் பேரும் கட்டாயம்
சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனையும் உடனே
ஏற்படுத்திவிடுவேன். ஏனெனில் காந்தியார் உயிருடன் இருக்கும்போதே
இராமராஜ்யம் ஏற்பட்டுவிட வேண்டும் என்பது என் ஆசை. இராமராஜ்யமென்பது
வருணாசிரம தருமத்தை _ அவரவர் தம்தம் சாதி முறைப்படியே தொழில் செய்ய
வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு திராவிடக் கவியாகிய
கம்பரே இதை ஒப்புக் கொண்டும் இருக்கிறார். இது பற்றிய வடமொழி இலக்கியத்தைத்
தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். இராமராஜ்யம் ஏற்பட வேண்டுமானால்
எல்லோரும் சமஸ்கிருதம் படித்தே தீர வேண்டும்.
_ எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், மெயில் 25.7.1939.-----------------------------------------------------------------------------------------------------------------------
சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச்சினையே இருக்காது. இதை நான் 1957 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றேன்.
_ சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் வி.வி.கிரி ஆற்றிய உரையிலிருந்து 2.1.1968------------------------------------------------------------------------------------------------------------
மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான்
இருக்கிறது; சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம்வரை, இந்திக்கே நாம்
முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்.
_ கோல்வாக்கரின் ‘Bunch of thoughts’ அத்தியாயம் 8, பக்.113. ஆர்.வெங்கட்ராமன்
------------------------------------------------------------------------------------------------------------------------
புதிய கல்விக் கொள்கையின் பள்ளிக்கூடப்
பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் ஒரு விருப்பப் பாடமாக சேர்க்கப்படவில்லை.
இந்தக் குறை நீங்கி பள்ளிக்கூட மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்க வசதி கிடைக்க
வேண்டும். நாட்டின் அறிஞர்களிடையே கலாச்சார ஒற்றுமையை வளர்க்கும் ஒரு
இணைப்பு சமஸ்கிருதம். ஒரு காலத்தில் இந்தியாவின் மொழி, சிந்தனையில்
சமஸ்கிருதம் நிரவி நின்றதோடு, அதன் ஆன்மப் பிரதிபலிப்பாகவும் விளங்கியது.
_ பாலக்காடு மாவட்டத்தின்
பட்டாம்பியிலுள்ள அரசு சமஸ்கிருத கல்லூரி பவள விழா நிகழ்ச்சியில்
குடியரசுத் துணைத் தலைவர் திரு.ஆர்வெங்கட்ராமன் ஆற்றிய உரை
(ஆதாரம்: தினமணி சென்னைப் பதிப்பு: நாள்: 15.12.86 பக்,9)
ஆனந்த விகடன்
ஆனந்த விகடன்
முதல் மூன்று பாரங்களில் மட்டுமே இந்தி
கட்டாயம் இருப்பதால், அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு சமஸ்கிருதத்தை
விருப்பப் பாடமாக வேணும் வைக்கலாம்.
_ ஆனந்த விகடன் 17.10.1937 ------------------------------------------------------------------------------------------------------
இதற்கு பதில்கூறும் விதமாக பெரியார் பேசியது
தந்தை பெரியாரின் கணிப்பு
பார்ப்பனர்களில் ஒரு சாரார்
வெகுநாள்களுக்கு முன்னாலேயே இந்த நாட்டுக்கு குடி வந்திருந்தாலும் இந்த
நாட்டிலேயே நிலையாக வாழ்பவர்களானாலும் இந்த நாட்டுப் பழங்குடி மக்கள்
எல்லோரையும்விட தாங்கள் மேலானவர்கள் என்று பிரித்துக் காட்டி தனித்து நிற்க
வகைசெய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பார்ப்பனர்கள் தமிழ்மொழியைத்
தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசுகிறவர்களே ஒழிய
அம்மொழியில் உள்ள அன்புக்காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல.
உதாரணம் என்னவென்றால், இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய வைதீக
காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த்தனைகளிலும் தமிழை விலக்கி
வைத்திருக்கிறவர்கள்.
இந்தப் பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வடமொழி)யையே மேலாக எண்ணுவதோடு அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாய் முயற்சிப்பவர்கள்.
இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஒழுக்க
ஆதாரங்கள் தமிழ் மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை
கூறுகிறதை ஏற்றுக் கொண்டு அதன்படி பெரிதும் ஒழுகுபவர்கள்.
_ தந்தை பெரியார், குடிஅரசு, 4.5.1939)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமலிங்க அடிகளாரும் சமஸ்கிருத வழிபாடும்
இது, திருவருட்பா 6-_ஆவது திருமுறையில்
வசன பாகத்தில், சத்தியப் பெரு விண்ணப்பம் என்னும் தலைப்பின்கீழ். (தென்மொழி
-_ தமிழ்) என்னும் துணைத் தலைப்பில் உள்ளது.
இடம்பத்தையும், ஆரவாரத்தையும்,
பிரயாசத்தையும், பெருமறைப்பையும், போது போக்கையும் உண்டு பண்ணுகிற ஆரிய
முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது. பயிலுதற்கும் அறிதற்கும்
மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய்,
சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள்வலத்தால் கிடைத்த
தென்மொழியொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து அத்தென்மொழிகளாற் பலவகைத்
தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர் என்கிறார். அவர் நம்பும் கடவுளை
நோக்கிக் கூறுகிறார் வடலூர் இராமலிங்க அடிகளார்; அத்தகைய தமிழ் வழிபாட்டு
மொழியாகத் தகுதி இல்லை என்கின்றனர். எப்படி இருக்கிறது?
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------ கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆகஸ்ட் 01-15 2014 “உண்மை” இதழில் எழுதிய------------------------------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் பேசினால் எப்படி ஐஐடிகுள்ள உங்களை பெரியார் வாசகர் வட்டம் வைக்க விடுங்கா
காரணம் இருக்கு எதேச்சையாக மொட்டை கடுதாசி வரலை சாமிகளே