அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டமும் இந்துவா அரசியல் நகர்வும்




இன்று காலை வந்தவுடனே விரு விருவென இதை எழுதி பதிகிறேன்.
அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யபட்டது இந்து பாசிச அரசாங்கத்தின் ஐஐடியில் என்கிற நிகழ்வு ………………


இந்து மத ஆதரவு சக்திகளின் அரசியல்:
இதன் அரசியலை பாருங்கள் இதெல்லாம் சும்மா ஒரு நிகழ்வுன்னு தள்ளிட்டு போகவும்  படிக்கிற வயசில பசங்களுக்கு படிப்புதானே தேவை எதுக்கு அரசியல் அப்படின்னு சொல்லிட்டு போகவும் முடியாத விசயங்கள்.






அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டம் வேண்டும் என்று அங்கிருக்கிற மாணவர்களில் சிலர் சேர்ந்து ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.
அதற்கு ஐஐடி நிர்வாகம் அனுமதி அளிக்கிறது . ஒரு அநாமதேய கடிதம் வருகிறது அதில் இந்த வாசகர் வட்டத்தை தடைசெய்ய கோருகிறது.
(நாட்டில் மிகப்பெரிய கல்வி நிறுவனம் மொட்ட கடுதாசிக்கு இவ்ளோ
முக்கியதுவம் ஏன் கொடுக்கனும்) மத்திய மனிதவள மேம்பாட்டு துறை எந்த விசாரணையும் இன்றி வாசகர் வட்டத்தை தடை செய்கிறது.
அம்பேத்கர் பெரியாரை படிப்பதில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு என்ன சிக்கல்னு புரியலை .
மேலும் ஐஐடியில் ராமனுஜம் வாசகர் வட்டம் இருக்க இப்படி பல தலைவர்கள் அறிஞர்கள் வாசகர் வட்டம் இருக்கு .
அம்பேத்கர் ஓக்கே ஆனால் பெரியார் நோ நோன்னு சொல்வதும் நடக்குது .









இதற்கு முன்பு திருசெங்கோட்டில் இருக்கும் கொங்கு நாட்டு மக்களை தூண்டி விட்டு பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலை எரித்து அவரை கூப்பிட்டு மிரட்டி தங்கள் காரியத்தை சாதித்த அதே அரசியல்தான் இதுவும்.
அடுத்து தாலி அவிழ்ப்பு போராட்டத்தை நடத்திய வீரமணிக்கு எதிராக வன்முறையும் பெரியார் படங்களில் சிறுநீர் கழித்தல் என்கிற சின்ன தனமும் செய்தார்கள்.
அதுவும் ஒரே அரசியல்தான். அதுதான் இந்து பாசிச அரசியல்.
-வர்க்கமே சாதி அல்ல :
---------------------------------------------
என்கிற என்னுடைய முந்தைய பதிவை படித்திருப்பீர்கள் ஆனால் சதி ரீதியான மீட்டுறுவாக்கத்தை ஏற்படுத்த இந்து மத பயங்கரவாதிகள் முயற்சிக்கும் போது பெரியார் அம்பேத்காரின் ஆதரவு சக்திகளுக்கு கம்யூனிஸ்டுகள் குரல் கொடுக்க வேண்டி உள்ளது.
என்னை கேட்டால் பிஜேபியை எதிர்க்க நீங்கள் காங்கிரசின் உடன் கூட கூட்டணி வைக்கலாம் .

காங்கிரஸ் கூட இந்தளவுக்கு வகுப்புவாத சக்திகளை ஆட்டம் போட விட்டதில்லை.


இந்து மத ஆதரவு சக்திகள் என்பவர்கள் தற்போது குறைவான எண்ணிக்கையில் இருக்கும் போதே இந்த ஆட்டம் போட்டால் .
அவர்களது எண்ணிக்கையில் அதிகமாகும் போது அதிர்ச்சி தரதக்க
கொலைகளை நிகழ்த்துவார்கள்.

மேலும் இந்த இந்துத்துவா சக்திகள் மத்தியதரவர்க்கத்தின் சாதி ஆதிக்க சக்திகளை தன்னுள் உள்வாங்க செய்யும் முயற்சிதான் இந்த செயல்பாடுகள்

ஏற்கனவே எந்த வம்புக்கும் போகாமல் ஆனால் இட ஒதுக்கீட்டில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லையே என்ற கோபத்திலும் இருக்கும் பிற்படுத்தபட்ட மக்களை குறிவைத்து இந்த அரசியல் நகர்கிறது.

விவேகானந்தரை பற்றி வகுப்பில் எதோ தவறான கருத்தை சொல்ல , தமிழ் வாத்தியாரோடு வாக்குவாதம் செய்த நாட்களும் , கடவுள் இருக்கிறார் இல்லை என்று நீ எப்படி சொல்லலாம் என சொன்ன தமிழ் டீச்சர் விஜயராணிக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போது கடவுள் இல்லை இதோ நான் இப்போது சத்துணவு வாங்கித்தான் சாப்பிடுகிறேன் ஏனெனில் நான் ஏழை – ஏழைகளை படைத்த கடவுள் இருக்க முடியாதுன்னு சொன்னதும்யாரோ ஒருத்தன் கை தட்டியதும் நாங்கள் இருவரும் மண்டி போட்டு நின்றதும் ஞாபகம் வருகிறது.

பிறகு கடவுளை தேடி ராமகிருஸ்ண மடங்களில் அலைந்ததும் அங்கு ஐய்யர் டாமினேசன் அரசியல் , பணமிருப்பவன் பேச்சு எடுபடுதல் .
விவேகானந்தரும் ராமகிருஷ்ணரும் பிரேம் மாட்டிய சட்டங்களில் மாட்டி கொண்டது அறிந்து அங்கிருந்து கிளம்பியதும் ஞாபகம் வருகிறது.
மார்க்ஸ் பற்றிய புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கும் போதுதான் சாகுல் சாங்கிருத்யானை போல திடீர் சாக் அடித்தது.

வர்க்க சிந்தனை வரலாற்றின் நிகழ்வுகளை எப்படி மாற்றி போட்டு விட்டது.சரி என்னோட புராணம் போதும் விசயத்துக்கு வருவோம்.

அம்பேத்காரை , பெரியாரை படிக்காதேன்னு சொல்ல நீ யார் ?
அன்று பெருமாள் முருகனுக்கு நடந்ததே ஒரு துரோகம் / அதன் அரசியல் என்ன / தற்போது ஐஐடிக்களில் நடக்கிறது பாருங்கள் ஒரு புறக்கணிப்பும் ஒரு அடக்குமுறையும் இதெல்லாம் எதோ எதேச்சையாக நடக்கும் விசயங்கள் அல்ல.

பூணூலை அறுத்த தோழர்களின் மேல் வருத்தமாக இருந்தாலும் அவர்கள் சொன்ன விசயம் ஞாபகம் வருது / அங்க அடிச்சாதான் இவனுக அடங்குவாங்க என்பது உண்மையா தெரியல.
நாம் வர்க்கமாக திரட்ட முயல்கிறோம் / இந்துதுவா வெறியர்கள் சாதியாத்தான் திரட்டினால் தங்கள் பிழைப்பு ஓடும் என சொல்லி வரலாற்றை பின்னால் இழுக்க முயல்கிறார்கள்.



ஒன்றுமட்டும் நிச்சயம் நாம் இந்நேரத்தில் பெரியார் அம்பேத்கார் ஆதரவு நிலை எடுத்தாக வேண்டும்.

ஜெயலலிதா அரசு தவிர்க்க முடியாமல் மோடியின் பக்கமே சாயும் என்பதால் இடதுசாரிகள் பெரியாரிஸ்டுகளும் தாழ்த்தபட்ட மக்கள் அனைவரின் கூட்டணி இனிவரும் காலத்துக்கு அவசியம் 

 to read more:
http://dilipsimeon.blogspot.in/2015/06/hartosh-singh-bal-what-death-of-french.html

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post