மோடி காங்கிரசின்
மூடிதான்
அடிப்படையில்
என்ன மாற்றம் இருக்கிறதென்றால் முன்பு இந்துத்துவா வாதிகள் – மறைமுகமாக சர்ச் எதிர்ப்பு
கம்யூனிச எதிர்ப்பு , அம்பேதிகாரிய , பெரியாரிய எதிர்ப்பை செய்துவந்தார்கள் . தற்போது
இந்துமத ஆதரவு
சிறுபான்மை
எதிர்ப்பு என்பதும் மிகவும் வலுபெற்று இருக்கு மற்றபடி ஆட்சி துறையில் எந்த மாறுபாடும்
இல்லை .
இது இந்திய
கம்யூனிஸ்டு கட்சி வந்தாலும் அப்படியேதான் இருக்கும்.
ஏனெனில்
– முதலாளித்துவ உற்பத்தி உறவு முறையை மாற்றாமல் எந்த மாற்றமும் வராது.
மோடி வந்தால்
மாறும் என்றார்கள்/ மோடி வந்து நூறு நாள் ஆகிட்டது என்றார்கள்/ மோடி வந்து ஒருவருடம்
ஆட்சி என்கிறார்கள் .
ஏன் எந்த
மாறுபாடும் நமது சமூக அரசியல் வாழ்நிலையில் காணோம்.
கீழே கண்ட
நாடுகளை மோடி சுற்றி பார்த்தார்.
அப்புறம்
நில அபகரிப்பு மசோதா? இது காங்கிரஸ் கொண்டு
வந்தது
அதில்
இன்னும் சில கடுமைகளை புகுத்தி அமுல் படுத்த பார்கிறது பிஜேபி
அதாவது
காங்கிரசின் இன்னொரு முகம்.
1.ஆதார்
அட்டையை பற்றி கடந்த ஆட்சியின் போது குறை கூறிவிட்டு அதை தொடர்ந்து பின்பற்றுவது
2.சிலிண்டருக்கு
கொடுக்கப்படும் தொகையை வங்கியில் செலுத்த வைத்தது
3.பெண்
குழந்தைகளுக்கு போஸ்டாபிசில் சிறுசேமிப்பு தொடங்கியது
பெரும்பாலும்
எல்லாமே அனைவரையும் அடையாள படுத்தல் வங்கி மயமாக்குதல் என்ற கொள்கையின் கீழ் செயல்படுதல்.
இதன் மூலம்
இஸ்லாமியர்களையும் சிறுபான்மையினரையும் , கம்யூனிஸ்டுகளையும் தனது ஆட்சிக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் அனைவரையும் அடையாள படுத்த முயல்கிறதோன்னு ஒரு சந்தேகம்.
ரேசன் கடைகளில் கொடுக்கப்படும் பொருட்களை குறைத்து பணமாக வங்கியில்
செலுத்துவோம் என கூறி அந்த மானியத்தையும் நிறுத்த முயலும் முதல் கல்லே இந்த வங்கி கணக்கு
மயம்
3.கருப்பு பணத்தை யாரெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருகிறார்களோ
அவற்றை கைபற்றுவோம் என்றார் மோடி
//இதனிடையே
சர்வதேச புலனாய்வு ஊடக கூட்டமைப்பினர் பிப்ரவரியில் வெளியிட்ட கருப்புப் பண பட்டியலில் ஆயிரத்து 195 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றன. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஆனந்த் பர்மன் மற்றும் சில பிரபலங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதனிடையே, மே 11-ம் தேதி மக்களவையிலும், 13-ல் மாநிலங்களவையிலும் கறுப்புப் பணத் தடுப்பு மசோதா நிறைவேறியது. இது நாட்டின் நவரலாற்றில் ஒரு மைல்கல் என்று பெருமிதம் தெரிவித்தார் மோடி.
எனினும்,
தேர்தல் பிரசாரத்தில் சொன்னது என்னானது. என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். வெளிநாட்டு கறுப்புப் பணம் முழுவதையும் மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் தலா 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற மோடியின் பேச்சுதான் அது. இதற்கு அரசின் பதில் இனிமேல்தான் தெரியும்.
//
எங்கே
முகேஸ் அம்பானியின் கருப்பு பணத்தை மோடி தில் இருந்தால் கொண்டு வரட்டும் பார்க்கலாம்
. முடியாது ஏனெனில் முதலாளிகளின் தயவு இல்லாமல்
இவர்களால் ஆட்சியில் ஒரு நொடி கூட உக்கார முடியாது.
ஆக மோடி
என்பவர் காங்கிரசின் மூடிதான்.
நமது பத்திரிக்கைகள்
வேண்டுமானால் , அவர் அணியும் உடைகள் ஜவஹர்லான் நேருவுடன் நேரடி விவாதத்தில் உள்ளன என
அடிச்சி விடலாம்.
4.மேக்
இன் இந்தியா திட்டம் :
இந்தியாவில்
வந்து கடையை போடவும் கம்பெனி திறக்கவும் அறைக்கூவல் இது.
அந்நிய
மூலதன திரட்டல்தான் வேறொன்றும் இல்லை
நகரங்களை நோக்கி வரும் கிராம இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு மூலம் வேலைவாய்ப்பு தருவதும் முக்கிய இலக்காக உள்ளது. பொருட்களை மதிப்பு கூட்டி தயாரித்து வெளிநாடுகளில் விற்பனை செய்ய ஊக்குவிக்க முடிவு செய்திருக்கிறது அரசு.//
கிராம
பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கான ஒரு சின்ன திட்டம் கூட இல்லை , காங்கிரஸ் மன்மோகன்
சிங் எப்படி கிராமபுரத்தை ஒதுக்கினார்களோ அதே மாதிரி அதே பாதையில்தான் போகிறது மோடி
அரசு .
ஒரு கார்பரேட்
நிறுவனத்தின் முக்கிய புள்ளியுடன் பேசி கொண்டிருந்த போது காங்கிரசை விட
முதலாளிகளின்
தோழனாக மோடியை நம்புவதாக அவர் சொன்னார் .
நில கையகபடுத்தும்
மசோதா வந்தவுடன் தனது நிறுவனம் தனது காலணி தயாரிப்பை இந்தியாபூராவும் தொடங்க திட்டமிட்டு
இருப்பதாகவும் சொன்னார்.
ஆக யார்
தலையாட்டலுக்கு மோடி ஆடுகிறார் பாருங்கள்.
இன்னும்
ஒரு புல்லை கூட புடுங்க வில்லை மோடி அரசு .
மோடிகளின் ஆட்சிகள்
மோடி மஸ்தான் வேலைகளே
ஆடி ஓடி உழைக்கும் மக்களின்
நாடி துடிப்பு நிற்கும் வரை
மோடிகளின் பொய் ஓயாது
புரட்டும் நிற்காது
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது
உழைக்கும் மக்களே
ஓரணியில் சேர்வீர்
உதிக்கும் பொற்காலம்
உதய காலத்தில்
மறுக்கும் மக்களெலாம்
மயக்கத்தில் உள்ளார்
மருட்டிகிற மதத்தின் மயக்கமாம் அது -தியாகு.
இந்த கவிதையுடன்
முடிக்கிறேன்
மோடிகளின் ஆட்சிகள்
மோடி மஸ்தான் வேலைகளே
ஆடி ஓடி உழைக்கும் மக்களின்
நாடி துடிப்பு நிற்கும் வரை
மோடிகளின் பொய் ஓயாது
புரட்டும் நிற்காது
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது
உழைக்கும் மக்களே
ஓரணியில் சேர்வீர்
உதிக்கும் பொற்காலம்
உதய காலத்தில்
மறுக்கும் மக்களெலாம்
மயக்கத்தில் உள்ளார்
மருட்டிகிற மதத்தின் மயக்கமாம் அது -தியாகு.
இந்த கவிதையுடன்
முடிக்கிறேன்