அம்பேத்கர் பெரியார் -வர்க்க அரசியல்



தமிழகத்தின் சில கம்யூனிஸ்டு கட்சிகள் பெரியார் பிறந்த மண் என்றும் ,பார்பனியம் என்றும் பேசுவதை பார்த்தால் அவர்கள் எல்லாரும் போய் வீரமணியின் திகவிலோ அல்லது பெரியார் திகவிலோ சேர்ந்து கொள்ளலாம் என்பது எனது அபிப்பிராயம்
பெரியார் ஒரு சீர்திருத்தவாதியே தவிர அவர் ஒன்றும் புரட்சிகாரர் இல்லை
சீர்திருத்த வாதிகள் எல்லா காலகட்டத்திலும் இருந்தார்கள் அவர்கள் இந்த அமைப்பை விமர்சிப்பார்கள் ஆனால் அடியோடு மாற்றினாலே தவிர அவர்கள் கொண்டுவர நினைக்கும் விசயம் கூட நடக்காது.



லெனின் சொல்வது இதைத்தான் ஒருசில சீர்திருத்தங்களை தவிர மிச்ச சொச்சமான சீர்திருத்தங்களை இந்த முதலாளித்துவ அரசு செய்யாது .


அம்பேத்கார் :
நிலவுடமை இந்தியாவில் அம்பேத்கர் பேசியது எழுதியது அனைத்தும் அவர சார்ந்த சாதி மக்களின் முன்னேற்றத்துக்கு தானே தவிர ஒட்டுமொத்த சமூகத்தையும் கருத்தில் கொண்டு இல்லை.


இந்த அமைப்பில் இருக்கும் சாதி வேறுபாட்டை கலையனும் என்றால் தாழ்த்தபட்ட மக்கள் கற்கனும் / ஒன்று சேரனும்/ போராடனும் என்பதே.
ஆனால் தாழ்த்தபட்ட மக்கள் மட்டுமல்ல உயர்ந்த சாதி மக்கள் என்றாலும் முதலாளித்துவ முகத்தடியில் கட்டப்பட்டு தனது வாழ்வுக்கு அன்றாடம் காய்ச்சிகளாய்  , உழைக்க கைகள் தவிர ஏதுமற்றவர்களாய் விரப்பட்ட படுவதையும் .
தனது நிலம் என சொல்லி மார்தட்டி திரிந்த உயர்ந்த சாதிகள் கூட நிலங்களை விற்று விட்டு அல்லது வைத்திருந்தாலும் அதை கொண்டு பிழைக்க முடியாமல் பூச்சி மருந்தை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு போய்விட்டார்கள்
அதை செய்வது நிலபிரபுத்துவம் அல்ல சாதி அல்ல .வர்க்கமே



பெரியார் :
கம்யூனிசத்தை பொறுத்தவரை பெரியார் ஒரு பிற்போக்குவாதியே ஏனெனில் பெரியார் சொன்னார் . ஒருத்தன் கஸ்டப்பட்ட கம்பெனி வைப்பானான் இந்த கம்யூனிஸ்டுகள் போய் கொடிபிடிப்பானுகளாம் என்று .
பெரியார் தாழ்த்தபட்ட மக்கள் உயரனும் என சொன்னார் ஆனால் இன்று
உயர்ந்து விட்ட தாழ்த்தபட்ட மக்கள் நியோ பார்பனர்களாகிவிட்டார்கள் அதற்கு என்ன சொல்லுவார்
மேலும் ஒரு குறிப்பிட்ட சாதியை பாசிச நோக்கில் திட்டுவது என்பது பாசிசத்தை விதைக்கும் பார்பனர்கள் இன்று இட ஒதுக்கீட்டின் படி எந்த வேலையும் கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகிவிட்டார்கள் . பணமும் வசதியும் கொண்ட ஒருசிலர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் ஆனால் மிகப்பெரும்பாலான பார்பனர்கள்
நம்மை போன்ற நடுத்தர மற்றும் ஏழை பாட்டாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.
எதிர் நிலையில் ஆரிய எதிர்ப்பை அரசியலாக்கிய வீரமணி , கருணாநிதி ஆகியோர் பெரிய அளவில் கல்லா கட்டிவிட்டார்கள் .

ஆக அம்பேத்கர் பெரியார் இருவரின் தத்துவமும் காலத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.
சாதி அல்ல வர்க்கமே வர்க்க போராட்டமே வேண்டுவது.

சாதி என்ற ஆயுதத்தை கம்யூனிஸ்டுகள் கையில் எடுப்பதேன்>
இந்தியாவின் அரை நிலபுரபுத்துவமும் , அரைகாலனியமும் நிலவுகிறது என்பதுதான் ஓட்டு கம்யூனிஸ்டுகள் , ஓட்டுவாங்காத கம்யூனிஸ்டுகள் இருவரின் கருத்தாகும்.
இதன் மூலம் இந்திய முதலாளிவர்க்கத்தை நட்பு சக்தியாக்கி கொள்கிறார்கள்.
அப்பொழுதுதான் அவர்களிடம் டொனேசன் வாங்க முடியும்.
ஆனால் பேருக்கும் சிகப்பு வேட்டி கட்டி கொண்டு கருப்பு அண்டராயரை மறைக்கிறார்கள் .
அதனால் எதிரிகள் என சித்தரிக்க ஆள்வேண்டும் இல்லையா ?
அதுக்கு பார்பபனர்களை பலிகடா ஆக்குகிறார்கள்

எப்போது நிலபிரபுத்துவம் ஒழிந்து முதலாளிவர்க்கம் வந்துவுட்டதோ மேலும் இந்தியா அரை ஏகாதிபத்தியமாக வளர்ந்து தனது முதலீட்டுகாகா ஈழத்தின் அழிப்பு வரை மெளனம் காத்ததோஅதை எல்லாம் மறைத்து விட்டு இன்னும் பார்பனியம் என பேசிக்கொண்டு இருப்பது ஊரை ஏமாற்றத்தானே .அல்லது தத்துவ குருடர்கள் இவர்கள்
--------------------------------------------------------------------------------------------------------------  


12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீட்டை நாம் கண்டு கொள்ளலாம்:
“தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு – பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.”

 -------------------------------------------

அம்பேத்கரின் கருத்து:
“கம்யூனிசமும் சுதந்திர ஜனநாயகமும் ஒன்றிணைந்து செயல்படும் என்று கூறப்படுவது அறிவுக்குப் பொருந்தாக் கூற்று என்பதே என் கருத்தாகும். ஏனெனில் கம்யூனிசம் ஒரு காட்டுத்தீயைப் போன்றதாகும். தன்னை எதிர்ப்படும் எல்லாவற்றையும் எரித்து அழித்துவிடும்” 



அம்பேத்கர் கம்யூனிசத்துக்கு மிக வைரியாக இருந்தார். கம்யூனிசத்தின்பால் அவருடைய கவனம் எப்போதும் சென்றதில்லை. கடுமையான வார்த்தைகளால் கம்யூனிசத் தத்துவத்தை விளாசினார்.
இந்தியாவின் சிறந்த தேசபக்தரும், சீர்திருத்தவாதியுமான ரானடேயின் பிறந்தநாளையொட்டி, 1943 ஜனவரி 19-ஆம் தேதி பூனாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அம்பேத்கர் பேசும்போது,
“ஆண்டவனின் புனிதத் திட்டத்தின்படிதான் வரலாறு நடந்து கொண்டிருக்கிறது. தீர்ப்பு நாளின்போது, இப்புனிதத் திட்டம் முடிவுக்கு வரும்வரையில் மனித சமுதாயம் போர்களிலும், துன்பங்களிலும் உழன்று கொண்டுதானிருக்கும் என்பது ஆகஸ்டைன் கூறும் தத்துவம். இது இன்று மதவாதிகளின் நம்பிக்கையாக மட்டுமே இருக்கின்றது. பக்ளியின் தத்துவம், வரலாற்றை நிலவியலும், இயற்பியலும் உருவாக்குகின்றன என்று சொல்கிறது. காரல் மார்க்சின் கம்யூனிசத் தத்துவமோ பொருளாதாரச் சக்திகளே வரலாற்றை தீர்மானிக்கின்றன என்று கூறுகிறது. இவ்விரண்டு தத்துவங்களும் முழுமையான உண்மைகளைக் கொண்டிருக்கவில்லை. மனிதனுக்கு வெளியே உள்ள சக்திகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன என்றும், வரலாற்றின் நிகழ்வுகளை முடிவு செய்வதில் மனிதன் ஒரு சக்தியாக இல்லையென்றும் இவர்கள் கூறுவது முற்றிலும் தவறாகும்,’’
என்று கூறினார்.

கம்யூனிசம்னா என்னவென்று புரிந்து கொள்ள அன்றைய புத்தகங்கள் இடகொடுக்கலைன்னு சொல்வது சிறுபிள்ளைத்தனம்

அப்போது கிடைத்த புத்தகங்களை வைத்து ஒரு பகத் சிங் 21 வயதுக்குள் கம்யூனிசத்தை புரிந்து கொள்ளும் போது அம்பேத்கரால் ஏன் புரிந்து கொள்ள இயலவில்லை .

---------------------

சுயவிமர்சன குறிப்பு:
ஆரம்ப காலத்தின் நானும் இந்த மக இக போலிகளோடு சேர்ந்து பார்பன எதிர்ப்பை செய்துவந்தேன் என்பதையும் அது தவறானது என்பதை தத்துவத்தை புரிந்து கொண்டதும் உணர்கிறேன்  என்பதை பதிவு செய்கிறேன்



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post