ஹெகலின் இயக்கவியல்
என்ன சொல்கிறது அதன் கருதுகோள்களை மார்க்சிய மூலவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை
பார்ப்போம்
ஒரு கருதுகோள்
: ”எதார்த்தமானவை
அனைத்தும்
பகுத்தறிவுக்கு
உகந்தவை;
பகுத்தறிவுக்கு
உகந்தது
அனைத்தும்
எதார்த்தமானவை.”
(All that is real is rational; and all that is rational is real).
இதை நமது ஜனநாயகத்துக்கு
ஒப்பிட்டு பார்ப்போம் ஏனென்றால் அந்தகாலத்தின் பிரஸ்ய அரசாங்கத்தை பற்றி நாம் பேசினால்
அது கற்பனையானதாக இருக்கும்.
தற்போதுள்ள ஜனநாயக
அரசு பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதான்னு கேட்டால் இல்லை.
ஏனெனில் மிக சாதாரண
மக்கள் கூட புரிந்து கொள்கிறார்கள் , சொத்து குவிப்பு வழக்கில் ஜெ விடுதலையானது என்பது
பகுத்தறிவுக்கு உகந்ததல்ல மேலும் இந்தியாவின் நடக்கின்ற பல்வேறு மிகப்பெரிய ஊழல் எல்லாமே
இருக்கின்ற அரசுகள் எல்லாம் பகுத்தறிவுக்கு உகந்தைவை அல்ல என நிரூபிக்கிறது.
ஆனால் எதார்த்ததில்
இந்த அரசுதானே நிலவுகிறது ஏன் என்ன காரணம்?
//ஹெகலைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை – ஒரு குறிப்பிட்ட வரிவிதிப்பு நடவடிக்கையை ஹெகலே எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் – நிபந்தனையின்றி எவ்விதத்திலும் எதார்த்தம் ஆகிவிட முடியாது. எனினும், அவசியமாய் இருக்கின்ற ஒன்று, வளர்ச்சிப் போக்கின் கடைசி நிலையில் தன்னைப் பகுத்தறிவுக்கு உகந்ததாகவும் நிரூபித்துக் கொள்கிறது. அக்காலத்திய பிரஷ்ய அரசுக்கு பொருத்திப் பார்த்தால் ஹெகலியக் கருதுகோளின் பொருள் இதுவே: அந்த அரசு எந்த அளவுக்கு அவசியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குப் பகுத்தறிவுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. அப்படி இருந்தும் அந்த அரசு நமக்குத் தீங்கானதாய்த் தோன்றுகிறது எனில், தீங்கான பண்பு கொண்டதாய் இருந்தும் அது தொடர்ந்து நீடித்திருக்கிறது எனில், காரணம் யாது? அரசாங்கத்தின் தீங்கான பண்பை நியாயப்படுத்துவதும், விளக்குவதும் அதன் குடிமக்களிடம் நிலவும் அதற்கீடான தீங்கான பண்பே ஆகும். ஆக, அக்காலப் பிரஷ்ய மக்கள் அவர்களின் தகுதிக்கேற்ற அரசாங்கத்தைத்தான் பெற்றிருந்தார்கள். ஆனால், எதார்த்தம் என்பது சமூக அல்லது அரசியல் அமைப்பில் குறிப்பிட்ட நிலைமையின் உள்ளடங்கிய பண்பாக எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் எவ்விதத்திலும் இருக்க முடியாது என்பது ஹெகலின் கருத்தாகும். அப்படிச் சொல்லிவிட முடியாது. ரோமானியக் குடியரசு எதார்த்தமானதாய் இருந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து வந்த ரோமானியப் பேரரசும் எதார்த்தமானதாக இருந்தது. ஃபிரஞ்சு முடியாட்சி 1789-இல் மாபெரும் புரட்சியினால் அழிக்கப்பட வேண்டிய அளவுக்கு எதார்த்தத்துக்குப் புறம்பானதாகவும், அவசியமற்றதாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் ஆகிவிட்டிருந்தது.
// புத்தகம் :
லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்) தமிழாக்கம்: சிவலிங்கம் மு.
சரி இப்போ கேள்விக்கு வருவோம் இப்படி எதார்த்தமும் அவசியமும் சமமாகும் இடம் உண்டா
என்றால் பதில் இல்லை என்பதே:
எதார்த்தமும் –அவசியமும் என்ற இந்த தத்துவஞான கருத்தில் ஒரு முரண் உள்ளது அதுதான்
அதன் வளர்ச்சி போக்கை தீர்மானிக்கிறது இதுதான்
எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது . முரண்பாடு
தோன்றும் போது போராட்டம் தோன்றி அந்த சமூக அமைப்பு உடைத்து எரியப்படும் போது
அடுத்த எதார்த்தம் தோன்றுகிறது .
//இப்போது உண்மை என்பது அறிந்துணர்தலின் வளர்ச்சிப் போக்கிலேயே அடங்கியுள்ளது; விஞ்ஞானத்தின் நீண்ட வரலாற்று ரீதியான வளர்ச்சிப் போக்கிலேயே அடங்கியுள்ளது. விஞ்ஞானம், என்றைக்கும் எட்டிப் பிடிக்க முடியாத முடிவான உண்மையை நோக்கிக் கீழ்நிலையிலிருந்து அதிஉச்ச அறிவுநிலைக்குத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது. முடிவான உண்மை என்று சொல்லப்படும் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டால், அதற்குப் பிறகு தொடர்ந்து செல்ல வழியில்லை. தான் கண்டுபிடித்த முடிவான உண்மையைக் கைகட்டி வியந்து நோக்குவதைத் தவிர விஞ்ஞானத்து வேறு வேலையில்லாமல் போய்விடும். அத்தகைய நிலைக்கு விஞ்ஞானம் ஒருபோதும் வந்து சேராது. மேலும், தத்துவ அறிவுத் துறைக்குப் பொருந்துகிற எதுவும் பிறவகையான அறிவுத் துறை ஒவ்வொன்றுக்கும் பொருந்தும். மேலும், நடைமுறைச் செயல்பாடுகளுக்கும்கூடப் பொருந்தும். மனிதகுலத்தின் முழுநிறைவான, இலட்சியச் சூழ்நிலையில் அறிவானது முழுமையான முடிவை எட்டிவிட முடியாது. அதுபோலவே வரலாறும் அதுபோன்ற முடிவை எட்டிவிட முடியாது. முழுநிறைவான சமுதாயம், முழுநிறைவான “அரசு” என்பதெல்லாம் கற்பனையில் மட்டுமே நிலவக் கூடியவை.//
உங்களுக்கு தற்போது
ஒரு கேள்வி வரலாம் கம்யூனிச சமூகம் இறுதியானது என்று சொல்கிறோமே அப்படி என்றால் இது
தத்துவதிற்கு முரண் அல்லவா என்ற கேள்வி வரும் ஆம்.
கம்யூனிச சமூகம்
என நாம் எதை முன் அனுமானிக்கிறோமோ அதன் பிறகும் தொடர் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்
வளர்ச்சியை நோக்கி சமூகம் சென்று கொண்டே இருக்கும் .
அதை கற்பனையாக
விஸ்தரிக்க இயலாது.
அங்கே இயற்கைக்கும்
மனிதனுக்கும் இருக்கும் இடைவெளி என்பது இன்னும் தீர்க்கபடாமலேயே இருக்கிறது.
இயக்கவியல்
|
தொடர்ந்து கருத்துக்களும்
சமூகமும் விஞ்ஞானமும் வளர்ச்சியின் பாதையில் உள்ளன
|
எதார்த்தமும் அவசியமும்
|
ஒரு உதாரணத்துக்கு எடுத்து
கொள்ள பட்ட கருத்து
|
இந்த கருத்துபடி உலகமும்
ஏன் கருத்தும் கூட
தொடர் வளர்ச்சி போக்கில்
உள்ளது
|