கம்யூனிசம் என்றால் என்ன? -22

நாம் கம்யூனிசம் என்றால் என்ன என்கிற தொடர்கட்டுரைகளை பார்த்துவருகிறோம்,

இதுவரை பார்த்தது: 1.வரலாற்று பொருள்முதல்வாதம் தற்போதஆரம்பித்து உள்ளது இயக்கவியல் பொருள்முதல்வாதம்
-    இதில் இயக்கவியல் என்பதை சீர்திருத்தி பேசியவர் ஹெகல் என்றும்
-    அவரது கோட்பாட்டிலேயே அதி அற்புதமான இந்த பகுதியை தனது பொருள் முதல்வாதத்தில் எடுத்து கையாண்டவர் மார்க்ஸ் என்றும் பார்த்தோம் .
இயக்கவியல் என்றால் என்ன ?
பொருள் என்றால் என்ன ?
பொருட்களின் முரணியக்கம் என்றால் என்ன ?
இதெல்லாமே சேர்ந்துதான் இயக்கவியல் பொருள்முதல் வாதம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
மார்க்சியத்தின் அடிப்படையே இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற கருவிதான்?

கருத்துருவம் என்றால் என்ன ? அதை வைத்து கொண்டு எந்த எல்லைவரை விளையாட முடியுமோ அந்த எல்லை வரை விளையாண்டார்கள் கருத்து முதல் வாதிகள்
கருத்துருவம் என்பது புறவுலகின் பிம்பம்தான் எனப்தை மார்க்சிய்வாதிகள் மார்க்சும் நிரூபித்தார்கள்


ஒரு வட்டவடிவ அட்டையை எடுத்து கொண்டு அதன் பிம்பம் திரையில் விழும்படி பிடித்தீர்கள் என்றால் அது பல்வேறு கோணங்களில் திரையில் விழும்
ஆனால் எந்த வட்டவடிவ அட்டையை நாம் கையில் வைத்துள்ளோமோ அதன் ஆரம் அதன் வடிவம் என்பது நம்மால் அறிய கூடியதே .
அதன் பிம்பம் ஏற்படுத்தும் கணக்கற்ற நீள்வடிவங்கள் பிம்பம் மட்டுமே ஆனால் இரண்டுமே புற உலகில் உள்ளது என்கிற வரையறுப்பை போர்ன் என்ற விஞ்ஞானி விளக்கி இந்த கருத்துருவம் தவிர உலகில் ஏதுமில்லை என்ற குழுவிற்கு விடையாளித்தார்.

நம்ம நாட்டில் கூட சங்கரர் இதைத்தான் சொல்கிறார் கயிறை பாம்பாக பார்த்தான் ஒருவன் பிறகு அது கயிறுன்னு தெரிந்தது அப்போ பாம்பு எங்கே போனது – அங்கே பாம்பு அல்லது கயிறு இரண்டில் ஒன்றுதான் இருக்கனும் பாம்பு என்பது தோற்ற பிழைன்னு 



//இன்னொரு உபமானம் சொல்கிறேன் – அத்வைத சாஸ்த்ரங்களில் அடிக்கடிச் சொல்வது. அந்தி மயக்கத்தில் ஒரு கயிறு பாம்பாகத் தெரிகிறது. மாயா மயக்கத்தில் ஆத்மாவானது தனி ஜீவனாகத் தெரிகிறது – அதாவது ஜீவன் “நான்” என்று ஐடின்டிஃபை செய்துகொள்ளும் மனஸாகத் தெரிகிறது. கயிறு என்ற ஒன்று இல்லாவிட்டால் பாம்பு என்ற தோற்றம் உண்டாயிருக்க முடியாது. கயிற்றிலே ஸூப்பர் – இம்போஸ் பண்ணித்தான் பாம்பு கல்பிக்கப்பட்டிருக்கிறது. அது இன்றி இது இல்லை என்கிறபோது அத்வைதம்.// https://dheivathinkural.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D- %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/page/11/

அவரது வாதம் உனது பார்வையில்தான் உலகம் இருக்கு உண்மையில் இல்லை என்பதாகும் இதை  விஞ்ஞானம் பொய்யாக்கியது.
கருத்து முதல்வாதத்துக்கு ஏன் அடி கொடுக்கனும் என்றால் விஞ்ஞானமற்ற எதையும் ஏற்றுகொண்டால் மன மயக்கத்தில் ஆழ்ந்துவிடுவோம் .
பிறகு நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட மத ஆட்சிகளை போலத்தானே ஆகிடும் என்பதற்குதான் எதையுமே.
விஞ்ஞான விளக்கம் என்கிற உரைகல்லில் உரைத்தார்கள் மார்க்சிய வாதிகள்.






Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post