காக்கா முட்டை –விமர்சனமும் புரிதல்களும்

காக்கா முட்டை – எப்படி குருவி முட்டையானது பரபரப்பு ரிபோர்ட்
----------------------------------------------------------------------------------------------------

காக்கா முட்டை படமே ஒரு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை சித்திரமாக்கி காசு சம்பாதிக்கும் முயற்சிதான் என்றும் ,

ஏழைகளை வைத்து அமரர் எம் ஜி ஆர் ஒரு வாக்கு வங்கியை உருவாக்கி
பொன்மன செம்மல் என பெயர் பெற்று மொத்தம் பத்தாண்டுகளில் 3 ஆண்டுகள் ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டே ஓட்டினார் .
ஆனால் வில்லனான நம்பியார் நாற்பது ஆண்டுகளோ என்னவோ சபரிமலைக்கு போனார்.

 

 
சினிமாவில் எல்லாமே டூப்புதான் அதுக்கு காக்கா முட்டை கொஞ்சம்
நெகிழ வைக்கும் டூப்பு , கொஞ்ச நேரம் ஏழ்மையை பாத்து கண்ணை கசக்கிட்டு பீசா வாங்கி சாப்பிட்டு ஏழ்மைக்கு அஞ்சலி செலுத்திட்டு போயிடுவானுக
என்கிற வசனங்கள் சில இடங்களில் வியாபித்து பரவி வழிகிறது.
மணிகண்டன் ஏன் ஏழைகளை பற்றி படமெடுக்க வேண்டும் இரண்டு மொட்டை மாடிகளை எடுத்து கொண்டு அதில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு காதல் புறாக்களை அனுப்பும் படமோ
மதுரையை மையமாக கொண்டு வாழ்ந்த ஒரு ரவுடியை காவியமாக்கும் படமோ 




 



அருவாவை  கையில் ஏந்தி எதிரிகளை நைய புடைக்கும் படமோ எடுக்காமல்
ஏழை குழந்தைகளின் கனவு , அவர்களிடம் இருக்கும் நேர்மை , தங்களது ஆசை , அந்த ஆசைபட்ட பொருளை அடைகிறார்களா என்பதை எல்லாம் ஏன் பேசவேண்டும்
ஏழை குழந்தைகளுக்கு நக்சல்பாரிகள் இருக்கிறார்கள்
அவர்களை அனைவருக்கும் ஒரு அட்டையில்  நக்சல்பாரிகளாக பேசிகொண்டு ஆனால் மிதவாதிகளாக இருக்கும் "புரட்சி"யாளர்களின் அட்ரசைபடத்தின் முடிவில் காண்பித்து இருக்க வேண்டும்.
இல்லை என்றால் அவர் எடுத்த படத்தில் ஒரு காட்சியில் கூவம் 
எங்களை தாலாட்டும் என்கிற மிகை வரியை போய் கூவம் பசங்களிடம் போட்டு கொடுப்போம் .

கூவத்தின் வசவுகளை கொண்டு வந்துஎங்கள் வசவு தளத்தில் எழுதிடுவோம்

இதல்லவா புரட்சிகர நடைமுறை .

உதிரி பாட்டாளிகளை பற்றி மாவோ என்ன சொல்லி இருக்காரு
அவர்கள் அப்படித்தான் இருப்பானுக அவங்களை ஒரு இயக்கமா சேர்க்கவோ அவர்களின் கக்கூஸ் பிரச்சனைக்கு போராடவோ சொல்வது ரொம்ப கஸ்டம் ,





 
என அதில் ஒரு வரி எழுதிட்டா முடிஞ்சது பிரச்சனை .
இப்போ ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிச்சிட்டோம் அதாவது இந்த படத்தின் மூலம் வெளிப்படும் போலி அனுதாபம் நடுத்தர வர்க்க நாகாசுகளின்
”ச்சோ , ச்சோ “ எங்கள் மக்களுக்கு தேவை இல்லை என சொல்லி
புரட்சிகர இயக்கமாக காட்டியாச்சு ,
மாவோ உதிரி பாட்டாளிகளை திரட்டுவது கஸ்டம்னு சொல்லிட்டாரு அதனால கட்சி கட்ட முடியலைன்னு எழுதி வரலாற்று கடமையில் இருந்து தப்பிச்சாச்சு ,

எங்களுக்குன்னு இருக்கு ஒரு இடம் எல்லோரும் என்னை அங்கு வந்து பாருங்கள் என கிளம்பிடுவோம்.

ஆனால் பாருங்க ”உலகத்தை பற்றி வர்ணிப்பது எனது வேலை இல்லை
அதை மாற்றுவதே எனது வேலைன்னு” மார்க்ஸ் சொன்னது உங்களுக்கு யாருக்கும் தெரியாது.
மாற்றுவது என்றால் என்னவென்றால் , எவனாவது ஒருத்தன் ஏழை படமெடுத்தால் விழுந்து புடிங்கி எங்களது அறிவுஜீவி , ஆகாச ஜீவி வேலை எல்லாம் காட்டுவோம்.
எங்களுக்கு கக்கூசே இல்லை ஆனால் சேரி சொர்க்கம்னு எடுக்கிறான் படம் என சொன்னால் கைதட்டல் கிடைக்கும் தோழா?

இதை மாற்ற ,ஆனால் ”தோழரே உங்கள் செயல்திட்டம் என்ன?”

(ஏற்கனவே புலிகளின் பாசிசம் போராட்டத்துக்கு இடையே விளைந்த பாசிசம்னு டகாசு வேலை காம்பிச்சு அதை ஏத்துகிட்ட மாதிரியும் ஏத்துகாத மாதிரியும் ஒரு தினுசா எழுதி தப்பிச்சீங்களே அப்படி எல்லாம் இதில தப்பிக்க பார்க்காதீங்க )
 
 இப்போ பிரச்சனை புரிஞ்சுது இல்லையா ?அடுத்த ஒராண்டுக்குள் ஒரே ஒரு சேரியை எடுத்து கொண்டு அங்கு உதிரிபாட்டாளிகளை திரட்டி ஒரு குடிநீர் பிரச்சனைக்காக மரியல் செய்து காட்டினீங்கன்னா
ஹேட்ஸ் ஆப் தோழா

“நக்சல் பாரிகளை குறித்து எழுதாதீர்கள் அவர்களின் தவறுகளை விட அவர்களின் தியாகம் மகத்தானதுன்னு ”எனக்கு எழுதிய தோழனுக்கு நான் மன்னிப்பு கடிதம் எழுதிவிடுகிறேன்.

ஒரு தப்பு பண்ணிட்டேன் இதற்கு முன்பு பதிவுகளில் நாங்கள் உங்களை நெம்ப பெரிய மார்க்சியவாதின்னு நினைச்சுட்டு மார்க்சிய இலக்கியம் மனிதமயம் என்றெல்லாம் நிறைய எழுதி , லெனின் கொட்டேசன் எல்லாம் போட்டு நிறைய நேரத்தை வீணாக்கிட்டேன் தோழரே.
ஏன் தோழரேன்னு அழைக்கிறேன்னு நினைக்காதீங்க , அவ்வப்போது
ஐ ஐடிக்கு சின்ன பசங்களை கூட்டிட்டு போய் ஒரு ஆர்பாட்டம் செய்துகிறீங்கஅதெல்லாம் பார்க்கனுமில்லையா?

பொறகு ஒரு விசயம் , விமர்சனம் செய்தால் படம் எடுக்கனும் அல்லது கட்சி கட்டனுமா? என அறிவார்த்தமான கேள்வி கேட்காதீங்க 
ஏன்னா மார்க்சியம் என்பதே 50 சதவீதம் தத்துவம் 50 சதவீதம் நடைமுறைதான்.
உங்கள் தத்துவத்தை நடைமுறையில் உரசி பார்க்கவும் 
நடை முறையை தத்துவத்தில் உரசி பார்க்கவும் .


அப்புறம் இந்த சுட்டியில் எதுக்கு காம்ரேட் இந்த படத்தை உசத்தி எழுதி இருக்காங்க ,http://maattru.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/

பாவம் உங்களவுக்கு விசயம் பத்தலை இவங்களுக்குன்னு நினைக்கிறேன்.

திரைக்கதை மதிப்பீடு

சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மனிதர்கள், வறுமையை உற்சாகமாக நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் அவர்களது வாழ்வு, அவர்கள் அருகே மற்றொரு உலகமாய் இயங்கும் நவீனத்தை நோக்கிய அவர்களது ஈர்ப்பும் ஏக்கமும்..
இந்த முரணில் உதிரிகளாக்கப்பட்டு சமூகத்தில் Small Anti Elements களாக ஆக்கப்பட்டிருக்கும் சேரி இளைஞர்கள், tiny anti elements களாக உந்தப்பட்டுக் கொண்டிருக்கும் சேரி பாலகர்கள்..
அவர்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதி, இந்தச் சூழலிலும் நேசத்தின், சுயமரியாதையின், நம்பிக்கையின் கதகதப்பு நிறைந்த அவர்களது வாழ்வு..
இதுவே திரைக்கதையின் கச்சா பொருள். இந்த கச்சாப் பொருட்கள் தன் முரண்களினூடாக இயங்க இயங்க அற்புதமான நிகழ்வுகள் பொறிபட்டு தெறித்து திரைக்கதையை அமைக்கின்றது.
தூங்கும் போது ஒன்னுக்குப் போன டவுசரை பாத்திரத்துக்குள் சிறுவன் மறைப்பது
காக்கா முட்டையை உடைத்து ஆசையுடன் சிறுவர்கள் குடிப்பது…
பீட்சா வாங்க முடியாத நிலையில் தோசையிலே பீட்சா தயாரித்து சிறுவர்களுக்கு கொடுக்கும் பாட்டி…
நாய் விற்பது, குடித்து விட்டு மட்டையாகும் குடிமகன்களை வீட்டில் கொண்டு விட்டு காசு சம்பாதிக்க முயற்சிப்பது…
என பீட்சா மற்றும் நல்ல உடை வாங்க சிறுவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்.
சேரி லும்பன் இளைஞர்கள் இருவர் பணம் சம்பாதிக்க எடுக்கும் முயற்சிகள்…
என சிறப்பம்சங்களை சொல்லிக் கொண்டு போனால் மொத்தப் படத்தையுமே சொல்ல வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

அப்புறம்  எஸ்.ராமகிருஷ்ணன் அண்ணாச்சி இதை பாராட்டி இருக்காரு 
அவருக்கெல்லாம் உம்மலவுக்கு விபரம் பத்தாது தானே 
http://www.sramakrishnan.com/?p=4854

இப்படி விபரம் புரியாமல் குழந்தைகள் சினிமா பத்தியே பேசிகிட்டு திரியிறாகன்னா பார்த்துகங்க

நமது குழந்தைகள் பார்த்து ரசிக்கும் படங்களில் எண்பது சதவீதம் ஹாலிவுட் தயாரிப்புகளே, அதிலும் குறிப்பாக வால்ட் டிஸ்னி மற்றும் பிக்சார் தயாரிப்பில் உருவான அனிமேஷன் படங்களே,  ஜப்பானிய அனிமேஷன் படங்கள் கூட நமது குழந்தைகளுக்கு அறிமுகமாகவில்லை, உண்மையில் அமெரிக்க அனிமேஷன் படங்களை விட பலமடங்கு சிறப்பானது ஜப்பானிய அனிமேஷன் படங்கள், குறிப்பாக மியாஷகியின் படங்களைச் சொல்வேன், அவற்றை நமது குழந்தைகள் திரை அரங்குகளில் பார்ப்பதற்கு எந்த வசதியும் இதுவரை செய்யப்படவில்லை, இந்திய சினிமா சந்தையை ஏகபோகமாக அமெரிக்கா முடக்கி வைத்திருப்பதே இதற்கான முக்கிய காரணம்
தமிழ் திரைப்படங்கள் வணிகநோக்கங்களை மட்டுமே பிரதானமாக கொள்வதால் குழந்தைகளை யதார்த்தமாக சித்தரிக்கும் கலைப்படங்கள் கவனிக்கபடவேயில்லை, இந்தியாவின் மற்றமொழி திரைப்படங்களுக்கும் தமிழுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, அங்கே கலைப்படங்களுக்கு என தனியே இயக்குனர்களும், பார்வையாளர்களும் இருக்கிறார்கள், அரசே முன்வந்து இது போன்ற படங்களை நிதிஉதவி அளிக்கிறது, படங்களை வெளியிட சிறப்பு மானியம் தருகிறது, சிறிய முதலீட்டில் வெளியான குழந்தைகள் திரைப்படங்கள் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளுகின்றன, தமிழில் அந்தச் சாளரம் திறக்கபடவேயில்லை,

கீழ் கண்ட வாசகங்களை  படிச்சோன்ன உங்கள நினைச்சிட்டேன் தோழரே
----------------------------------------------------------------------------------------------------
இந்திய அளவில் குழந்தைகளுக்கான திரைப்படங்களை உருவாக்குவதற்கு என தனியே சிஎப்சி என்ற திரைப்பட வளர்ச்சி கழகம் உள்ளது, அவர்கள் ஆண்டுதோறும நிதி உதவி செய்து குழந்தைகள் படங்களை உருவாக்குகிறார்கள், சென்னையிலும் அவர்களுக்கு அலுவலகம் இருக்கிறது, அப்படி இருந்தும் ஏன் தமிழில் குழந்தைகள் படங்கள் எடுக்கபடவில்லை  என்பது புதிராகவே உள்ளது
 -------------------------------------------------------------------------------------------------------
நீங்க கிழி கிழின்னு  கிழிச்சும் உங்க மாதிரி ஆட்கள் தான் இம்மாதிரி குழந்தைகள் சினிமா வருவதில்லைன்னு நான் அவருகிட்ட சொல்லவில்லைன்னா பார்த்துகங்களேன் 

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post