விஞ்ஞானத்தை எதிர்ப்பதன் மூலம் - தொடர்ச்சி


2008

830 billion kilo watt

 

2009

700 kw add

 

……………

 

 

2020

6.3% add per year

 

 

 

 

      மூலம்(http://www.world-nuclear.org/info/inf53.html)

 

மின்சார சப்ளை பற்றி நாம் பேசும் போது மின்சக்தியின் தேவை எவ்வளவு அது ஆண்டு தோறும் எந்த சதவீத்த்தில் வளர்கிறது என்று பார்க்க வேண்டும் வருட்த்திற்கு தற்போது வருடத்திற்கு 

700 கிலோ வாட்களாக வளர்ந்து வரும் தேவை என்பது 2020 ல் மொத்த தேவையில் இருந்து 6.3 சதவீதமாக இருக்கும் அதற்கடுத்த வருடங்களிலும் தேவைக்கான விகிதாச்சாரம் அதிகரித்து கொண்டே செல்லுமே தவிர குறையாது ஆக தேவை என்பது நிலையான ஒன்றல்ல அப்படி வைத்து கொண்டு கணக்கிட்டு தற்போது அணு உலைகள் மூலம் 2.70%   சதவீதம்தான் பெறுகிறது எனவே இதை மட்டும் மாற்றீடு செய்து அந்த அளவுக்கு சூரிய சக்திமூலம் மின்சாரம் பெற்று விடலாம் என பேசுவது எந்த வகையில் சரியாக இருக்க முடியும்.

 

 

சரி நியூக்கிளியர் மூலம் கரண்டு சப்ளை எப்படி வளர்கிறது

நியூக்கிளியர் பவர் சப்ளை வளர்ச்சி 2007

15800 MW

2009

அதிகம் 3700(15800+3700)

 

 

 

தொழில் வளர்ச்சியின் காரணமாக நடந்த விசயம்

http://en.wikipedia.org/wiki/World_energy_consumption

 

 

 

வளர்ந்து வரும் தேவை:

ஆக கரண்டு தேவை என்பதை நிலையான ஒன்றாக கொண்டு கணக்கிட முடியாது வருடா வருடம் கூடி வரும் ஒரு தேவைக்கு

சப்ளை என்பதும் கூடி வருவதாக இருக்க வேண்டும் .

 

ஆக தேவை என்பது எப்போதும் நிலையானதல்ல அப்படி நிலையானதென்று –நினைத்து கணக்கு போடுவதும் விஞ்ஞான பூர்வமானதன்று .

   எப்படி எல்லாம் வளரும் என்றால் மக்கள் தொகை வளர்ச்சி

தொழில் வளர்ச்சி ,மின்சார கருவிகளின் உற்பத்தி வளர்ச்சி

இவை எல்லாம் தேவையை அதிகரிக்க செய்யும் அம்சங்கள்

 

செலவு:

சரி தேவையை மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு மட்டும் ஒரு விசயத்தை பேச முடியுமா என்றால் இல்லை நம்மால் எந்த அளவுக்கு பணம் கொடுத்து அந்த பொருளை உற்பத்தி செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும் ஏனெனில் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி செலவு விற்கும் செலவை விட அதிகமாக இருப்பின் அந்த தொழிலை அரசாங்கம் மானியம் கொடுத்துதான் நடத்தனும்.அதுவும் இம்மாதிரி மெகா புராஜக்டுகள் தொடர்ந்து மானியத்தில் ஓடினாலும் சிரம்ம்தான்

 

அணு மின்சாரத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் விபரம் :

 

அதாவது 9350  மெகாட் மின்சாரம் தயாரிக்க 9 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டது .







 

அடுத்து அதன் பாதுகாப்பு அம்சங்கள் :அணு உலையை பொருத்தவரை பாதுகாப்பு எப்படி பட்ட்து அதன் கழிவுகள் கூட பாதுகாக்கபடவேண்டும் எனவே அதன் உற்பத்தி மற்றும் செலவு மட்டுமல்ல நீண்ட நாட்களுக்கு அதை பாதுகாத்து வைக்கனும் என்கிற சவால் அறிவியலுக்கு இருக்கிறது .

 

ஆனால் பாதுகாப்பு விசயங்களும் உற்பத்தியை போலவே வளர்ந்துதான் இருக்கும் எப்படி தேவை நாளுக்கு நாள் வளர்கிறதோ அம்மாதிரி அதை சந்திக்கும் முறைகளும் விஞ்ஞானரீதியான பாதுகாப்பும் வளர்ந்துதான் இருக்கும் என்பதை நாம் இயக்கவியல் ரீதியா சிந்திச்சா அறியலாம் .

 

1986 ல் செர்னோபில் அணு உலை வெடிக்கும் போது இருந்த செக்கியூரிட்டி சிஸ்டம்தான் இப்பவும் இருக்குன்னு சொல்லும் வாதம் எந்த ஆதாரபூர்வமுன் அற்ற வெற்று உரை

 

 

இப்போ  சோர்ஸ் பத்தி பார்ப்போம்

 

http://en.wikipedia.org/wiki/Electricity_sector_in_India

 

1.நிலக்கரி மூலம் எடுக்கப்படும் மின்சாரம் 65.4 சதவீதம் இந்தியாவில் மட்டும் உலக அளவில் அதன் அளவு என்ன?

அது வெளியிடும் மாசு எவ்வளவு –அது எவ்வளவு நாளைக்கு கிடைக்கும் என்பதெல்லாம் கேள்வி கேட்டு சந்தேகம் தீர்த்து கொள்ளப்படவேண்டிய விசயங்கள்

 

    1.அனல் மின்சாரம்(நிலக்கரி) -65.4 %

    2.நீர் மின்சாரம்(புனல்)      -21.53%

    3.அணு உலைகள் மூலம்   -2.70%  

கிட்ட்தட்ட 50 சதவீத்த்துக்கு மேல் நிலக்கரி மூலம் நிலக்கரி கையிருப்பின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது அப்படி பட்ட நிலக்கரி நம்மிடம் எவ்வளவு கையிருப்பு இருக்கிறது மேலும் நிலக்கரியும் அணு மின்சாரம் தயாரிக்க உதவும் யுரேனியமும் ஒரே அளவில் வைத்து பார்க்க முடியுமா என்றால் இல்லை

//One reason the costs are low is that nuclear plants need only a small amount of uranium to produce a lot of energy. In fact, if the cost of uranium doubled, costs would only be increased by 7%. 1 truck of uranium produces as much energy as 1000 trucks of coal!//

ஒரு டிரக் யுரேனியம் என்பது 1000 ட்ருச்க் நிலக்கரிக்கும் சம்ம் என்றால் பாருங்கள் அப்போதும் நிலக்கரியின் இருத்தலும் யுரேனியத்தின் இருத்தலும் கண்டிப்பாக ஆராயப்படவேண்டியது

  

மொத்த யுரேனிய இருப்பு   5.5 மில்லியன் டன் என கணக்கிட பட்டுள்ளது மேலும் கடல் நீரில் இருந்து யுரேனியம் எடுக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது

எவ்வளவு யுரேனியத்தில் இருந்து எவ்வளவு கரண்டு எடுக்கலாம் எவ்வளவு யுரேனியம் கையிருப்பு மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்பதெல்லாம் கணக்கிட்டால்

அடுத்த ஒரு ஆயிரம் வருடங்களுக்கு தாக்கு பிடிக்கும் அதற்கு பிறகு வேறு ஒரு டெக்னாலஜி வராமல் போய்விடுமா?

 

அடுத்து நிலக்கரி கையிருப்புக்கும் டேட்டா இருக்கு  http://en.wikipedia.org/wiki/Coal  860,938 மில்லியன் டன் மட்டுமே இருக்கிறது அதுவும் 2005 கணக்கு படி எனவே இரண்டையும் ஒப்பிட்டு நோக்குவ்தே அபத்தம்

 

பாதுகாப்பு அம்சங்கள் :

 

நிலக்கரி உற்பத்தியிலும் அதன் கழிவுகளிலும் ஆபத்துகள் நிறைய இருக்கின்றன

 

1.நிலக்கரி உற்பத்தியில் நிறைய பேர் இறந்து உள்ளார்கள் ( அணு உலை மட்டும்தான் ஆபத்தானது என்கிற மாயை தவறானது )

மேற்கண்ட அதே சுட்டி :

 

இன்னும் ஒரு சுட்டி நிலக்கரி கழிவுகளே அணுக்கழிவுகளை விட அபாயமானது என சொல்லும் சுட்டி

 

http://www.scientificamerican.com/article.cfm?id=coal-ash-is-more-radioactive-than-nuclear-waste

 

ஆக நிலக்கரி இருப்பும் , கழிவும் பிரச்சனைக்கு உட்பட்டும் மேலும் வளர்ந்து வராத குறுகிய வளம் என்கிற விசயத்தை அறிந்த நாம் தேடவேண்டியது மொத்தம்  60 சதவீதத்திற்கான மாற்று எரிபொருளையே

 

       காற்று, சூரிய ஒளி ஆகியவை இந்த அதிகளவிலான தேவைக்கு உபயோகப்படும் சக்தியல்ல இப்போதைக்கு ஒருவேளை விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் அந்த நிலையை அவை அடைந்தால் நாம் அதை ஏற்று கொள்ளலாம்

 

சூரிய சக்தி விலை மலிவானது என்கிறவாதம் :

   சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க 15 per KW /H ஆகிறாதாம் (http://eai.in/blog/2009/07/cost-of-solar-power-in-india-over-rs-15.html) ஆனால் நிலக்கரி மூலம் (தற்போது நடைமுறையில் உள்ளது) RS 2 முதல் 3 வரை ஆகிறது ஆனால் அணு உலை மூலம் .80 காசுகள் தாம் ஆகிறது (http://www.igcar.gov.in/nuclear/alagh.htm)

 

அடுத்து – பூகம்பம் வந்தால் என்னாகும் , அணு உலை எத்தனை ரிக்டர் தாங்கும் நம்ம வீடெல்லாம் எத்தனை ரிக்டர் தாங்கும்

உலகளவில் சூரிய ஒளியின் மூலம் ஏன் அதிகளவில் மின்சாரம் எடுக்கப்படவில்லை என்றெல்லாம் பேசலாம்

 

இவங்க சொல்ற மாதிரி 3 ரூபாயாக இருந்தால் வெகு எளிதாக பணக்கார நாடுகள் மின்சாரம் தயாரித்து இருக்கும் J

 

தொடரும்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

20 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post